உள்ளடக்கத்துக்குச் செல்

ஜஸ்டின் காட்லின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜஸ்டின் காட்லின்
2013 ஐ.ஏ.ஏ.எஃப் உலகப் போட்டிகளில் ஜஸ்டின் காட்லின்
தனித் தகவல்கள்
முழுப் பெயர்ஜஸ்டின் அலெக்சாந்தர் காட்லின்
தேசியம்அமெரிக்கர்
பிறந்த நாள்பெப்ரவரி 10, 1982 (1982-02-10) (அகவை 42)
பிறந்த இடம்புரூக்ளின், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா
வசிப்பிடம்ஒர்லாண்டோ, புளோரிடா
உயரம்6 அடி (72 அங்)*[1]
எடை183 lb (83 kg)[1]
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)விரைவோட்டம்
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவை100மீ: 9.74 (தோகா 2015)
200மீ: 19.57 (இயூஜீன், ஓரிகன் 2015)
 
பதக்கங்கள்
ஆடவர் தடகளம்
நாடு  ஐக்கிய அமெரிக்கா
நிகழ்வு முதல் இரண்டாம் மூன்றாம்
ஒலிம்பிக் விளையாட்டுகள் 1 1 2
உலகப் போட்டிகள் 2 4 0
உலக உள்ளரங்கப் போட்டிகள் 2 0 0
மொத்தம் 5 5 2
ஒலிம்பிக் விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2004 ஏதென்சு 100 மீ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2004 ஏதென்சு 4×100 மீ தொடர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2004 ஏதென்சு 200 மீ
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2012 லண்டன் 100 மீ
உலகப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2005 ஹெல்ஸிண்கி 100 மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 2005 ஹெல்ஸிண்கி 200 மீ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2013 மாஸ்கோ 100 மீ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2013 மாஸ்கோ 4×100 மீ தொடர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2015 பெய்ஜிங் 100 மீ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2015 பெய்ஜிங் 200 மீ
உலக உள்ளரங்கப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2003 பர்மிங்காம் 60 மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 2012 இஸ்தான்புல் 60 மீ
ஐ.ஏ.ஏ.எஃப் உலகத் தொடரோட்டப் பந்தயங்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2015 நஸ்ஸாவு 4×100 மீ தொடர்
2009-இல் காட்லின்.

ஜஸ்டின் காட்லின் (பிற. பிப்ரவரி 10, 1982) ஒலிம்பிக்கில் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற, ஓர் அமெரிக்க விரைவோட்ட வீரர். 100 மீ ஓட்டத்தை 9.74 நொ நேரத்தில் கடந்ததே இவரது தனிப்பட்ட சிறந்த முயற்சியாகும். உள்ளரங்க விளையாட்டுகளில் 60 மீ பந்தயங்களில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

2001-இல் ஊக்க மருந்து சோதனையில் தடை செய்யப்பட்டப் பொருள் உட்கொண்டதாகத் தெரியவரவும், தடகளப் போட்டிகளிலிருந்து இரண்டாண்டு காலத் தடை பெற்றார். மேல் முறையீட்டின் பொருட்டு தடைக்காலம் ஓராண்டாகக் குறைக்கப்பட்டது.

2006-இல் ஊக்கமருந்து சோதனையில் மீண்டும் தடை செய்யப்பட்ட மருந்தை உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டு நான்காண்டுக் காலம் தடகளத்தில் பங்கு பெற தடை செய்யப்பட்டார். இதனால் அவர் நிகழ்த்திய அப்போதைய உலகச் சாதனையான 9.77 நொ 100 மீ ஓட்டம் சாதனை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. ஆகத்து 2010 முதல் காட்லின் மீண்டும் போட்டிகளில் பங்கு பெறத் துவங்கினார். 2012 ஜூன் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஒலிம்பிக் சோதனைச் சுற்று ஓட்டத்தில், 9.80 நொ.நே ஓட்டத்தை நிகழ்த்தினார். முப்பது வயதுக்கு மேலான ஒருவர் ஓடிய அதி-விரைவான ஓட்டம் இதுவே ஆகும்.

2012-இல் உலக உள்ளரங்க போட்டியில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் காட்லின்.

2012 லண்டன் ஒலிம்பிக்கில், 100மீ இறுதிப் பந்தயத்தைக் காட்லின் 9.79 நொடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதுவரையில் நடைபெற்ற அதிவேக 100மீ பந்தயமாக இவ்வோட்டம் அமைய காட்லினும் காரணமானார். மூன்று வீரர்கள் 9.80 நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் 100 மீ தூரம் கடந்தது இப்பந்தயத்தின் சிறப்பாக அமைந்தது. 2014 ஜூலை 18-இல் மொனாக்கோவில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டிகளின் 200 மீ பந்தயத்தை 19.68 நொடிகளில் கடந்து வென்றதன் மூலம் உலக முன்னிலை பெற்றார்.[2]

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 "Justin Gatlin's profile at the IAAF site". Archived from the original on 2011-11-12. பார்க்கப்பட்ட நாள் 2015-12-15.
  2. "Justin Gatlin wins 200 m in Monaco". BBC Sport. BBC Sport. http://www.bbc.co.uk/sport/0/28375479. பார்த்த நாள்: 19 சூலை 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்டின்_காட்லின்&oldid=3572960" இலிருந்து மீள்விக்கப்பட்டது