உள்ளடக்கத்துக்குச் செல்

ஜக்கானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜக்கானா
தாமரைக் கோழி ஜக்கானா ஜக்கானா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஜகானிடே
பேரினம்:
ஜக்கானா
மாதிரி இனம்
ஜக்கானா ஜக்கானா
லின்னேயஸ், 1766
சிற்றினம்

ஜக்கானா (Jacana) என்பது அமெரிக்காவின் இரண்டு தாழைக்கோழிகளை (வடக்கு ஜக்கானா, ஜக்கானா இசுபினோசா) மற்றும் தாமரைக் கோழி ஜக்கானா, ஜக்கானா ஜக்கானாவினை உள்ளடக்கிய பறவைப் பேரினமாகும்.[1]

அமெரிக்கச் சிற்றினங்கள் ஒன்றுக்கொன்று மிகவும் ஒத்தவை: சுமார் 22 cm (8.7 அங்) நீளமான, நீண்ட கழுத்து மற்றும் மிகவும் நீளமான மஞ்சள் அலகுகளுடன் காணப்படும். முதிர்வடைந்த கோழிகள் கருப்பு மற்றும் செம்-பழுப்பு நிறத்தில் இருக்கும். வெளிர் மஞ்சள்-பச்சை பறக்கும் இறகுகள் பறவை பறக்கும் போது தெளிவாக வேறுபடுகின்றன. இவற்றின் கால்கள் நீளமாகவும், சாம்பல் நிறமாகவும் இருக்கும். மேலும் அனைத்து தாழைக்கோழிகளைப் போலவே, இவற்றின் கால்விரல்கள் நீராம்பலின் படர்ந்த இலை பட்டைகளைக் கொண்டுள்ளன. இதன் மூலம் நீர்வாழ் தாவரங்களின் மீது எளிதாக நடக்கின்றன. இவை முன்பக்கக் கவசங்கள் (நாமக்கோழி போன்றவை) மற்றும் தாடைகளைக் கொண்டுள்ளன. இவற்றில் உள்ள வேறுபாடுகள் சிற்றினங்களுக்கு இடையிலான மிகவும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளாகும். இளம் பறவைகளின் மேலே பழுப்பு நிறத்திலும் கீழே வெள்ளை நிறத்திலும், கண்ணுக்கு மேலே ஒரு வெள்ளை குஞ்சப் பட்டையும் அதன் பின்னால் ஒரு இருண்ட பட்டையும் இருக்கும். அடர் நிறங்கள் வடபகுதியை விட இளம் தாழைக்கோழி ஓரளவு கருமையாக இருக்கும்.[2]

இந்தச் சிற்றினங்கள் ஒன்றாக அமெரிக்க வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலங்களில் உள்ள சதுப்புநிலங்களில் வாழ்கின்றன. வடக்கு ஜக்கானாவின் வரம்பு மேற்கு பனாமாவில் உள்ள தாழைக்கோழி வரம்பில் சந்திக்கிறது.[2]

மற்ற தாழைக்கோழிகளைப் போலவே, ஆண் கூடு கட்டி, முட்டைகளை அடைகாத்து, குஞ்சுகளைப் பேணிப் பாதுகாக்கும். இந்த இரண்டு சிற்றினங்களும் பலகணவர் மணம் கொண்டவை. சில சூழ்நிலைகளில், நான்கு முட்டைகள் வரை தனித்தனி தொகுதியாக இடுகின்றன.[2][3]

1760ஆம் ஆண்டில் பிரெஞ்சு விலங்கியல் வல்லுநர் மாதுரின் ஜாக் பிரிசன் என்பவரால் ஜக்கானா பேரினமானது ஜக்கானா ஜக்கானா மாதிரி இனமாக அறிமுகப்படுத்தப்பட்டது.[4][5] ஜக்கானாவின் சொற்பிறப்பியல் மற்றும் உச்சரிப்புக்கு, ஜக்கான குடும்பக் கட்டுரையைப் பார்க்கவும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gill, Frank; Donsker, David, eds. (2019). "Buttonquail, plovers, seedsnipe, sandpipers". World Bird List Version 9.1. International Ornithologists' Union. Archived from the original on 21 December 2018. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
  2. 2.0 2.1 2.2 Ridgely, Robert S.; Gwynne, John A., Jr. (1992), A Guide to the Birds of Panama with Costa Rica, Nicaragua, and Honduras (Second ed.), Princeton University Press, p. 132, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-08529-3, பார்க்கப்பட்ட நாள் 2009-08-14{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. Lack, Peter; Richford, Andrew S. (2003), "Jacanas", in Perrins, Christopher (ed.), The Firefly Encyclopedia of Birds, Firefly Books, pp. 244–245, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55297-777-3
  4. Brisson, Mathurin Jacques (1760). Ornithologie, ou, Méthode Contenant la Division des Oiseaux en Ordres, Sections, Genres, Especes & leurs Variétés (in French and Latin). Paris: Jean-Baptiste Bauche. Vol. 1, p. 48, Vol. 5, p. 121.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  5. Check-list of Birds of the World. Cambridge, Massachusetts: Harvard University Press. 1934.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்கானா&oldid=3497287" இலிருந்து மீள்விக்கப்பட்டது