தாமரைக் கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமரைக் கோழி
Wattled jacana (Jacana jacana).JPG
ஜக்கானா ஜக்கானா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: ஜக்கானிடே
பேரினம்: ஜக்கானா
இனம்: ஜ. ஜக்கானா
இருசொற் பெயரீடு
ஜக்கானா ஜக்கானா
(லின்னேயஸ், 1766)
Jacana jacana map.svg
வேறு பெயர்கள்

பாரா ஜக்கானா லின்னேயஸ், 1766

தாமரைக் கோழி

தாமரைக் கோழி என்பது தாமரை மற்றும் அல்லிகள் நிறைந்த குளங்களில் காணப்படும் ஒரு வகைக் கோழியினப் பறவையாகும். இவை தாமரை அல்லது அல்லி நிறைந்த ஏரிகளில் காணப்படுவதால் அவற்றிற்குத் தாமரைப் பறவைகள் என்றும் அல்லிப் பறவைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. தாமரைக் கோழிக் குடும்பத்தில் இப்போது 8 சிறப்பினங்களே உள்ளன. அவற்றுள் மயில்வால் தாமரைக் கோழி, கறுப்புத் தாமரைக் கோழி, அமெரிக்கத் தாமரைக் கோழி மற்றும் ஆப்பிரிக்கத் தாமரைக் கோழி என்பன சிலவாகும். மிதக்கும் தாவரங்களின் மீது நடப்பதற்கு ஏற்ற நீண்ட விரல்களையும் கூர் நகங்களையும் பெற்றுள்ளமையே இவற்றின் தனிச் சிறப்பாகும். இக்கோழிகளின் அடைக்காலம் 22-26 நாள்கள் ஆகும்.[2]

விளக்கம்[தொகு]

தாமரைக்கோழி 17 முதல் 23 செ.மீ. (6.7-9.1 அங்குலம்) நீளமுடையை. ஆனால் பெண்கள் ஆண்களை விட பெரியவை. பெரியவர்களுக்கு கஷ்கொட்டை நிற முதுகும் இறக்கைகளும் உள்ளன. உடலின் மற்ற பகுதிகள் கருப்பு நிறத்தில் இருக்கும். பறக்கும் போது பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இறகுகள் தெளிவாகத் தெரிகின்றன. கால்களும் மிக நீண்ட கால்விரல்களும் மந்தமான நீல-சாம்பல் நிறத்தில் இருக்கும்.

வகைப்பாட்டியல்[தொகு]

ஜக்கானா ஜக்கானா சிற்றினத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட ஆறு துணையினங்கள் உள்ளன. ஜக்கானா ஜக்கானா ஜக்கானா மிகவும் பரவலாக காணப்படும் துணையினமாகும். மற்ற துணையினங்கள் பல ஒத்தவை. ஆனால் மேற்கு பனாமா மற்றும் வடக்கு கொலம்பியாவின், ஜ. ஜ. கைப்போமெலினா மற்றும் மேற்கு ஈக்வடாரின் ஜ. ஜ. இசுகேபுலாரிசு கருப்பு இறகுகளுடன், வெள்ளை வெளிப்புற முதன்மை இறகுகளையும் கொண்டுள்ளன.

துணையினங்கள்[தொகு]

  • ஜ. ஜ. கைபோமெலினா (கிரே, 1846): மேற்கு-மத்திய பனாமா முதல் வடக்கு கொலம்பியா வரை
  • ஜ. ஜ.மெலனோபிஜியா (ஸ்க்லேட்டர், 1857): மேற்கு கொலம்பியா முதல் மேற்கு வெனிசுலா வரை
  • ஜ. ஜ. இண்டர்மீடியா (ஸ்க்லேட்டர், 1857): வடக்கு மற்றும் மத்திய வெனிசுலா
  • ஜ. ஜ. ஜக்கானா (லின்னேயஸ், 1766): டிரினிடாட், தெற்கு கொலம்பியா & தெற்கு வெனிசுலா கயானஸ் வழியாக தெற்கே கிழக்கு பொலிவியா, வடக்கு அர்ஜென்டினா & உருகுவே
  • ஜ. ஜ. இசுகாபுலாரிசு (சாப்மேன், 1922): மேற்கு ஈக்வடார் & வடமேற்கு பெரு
  • ஜ. ஜ. பெருவியானா (ஜிம்மர், 1930): வடகிழக்கு பெரு & வடமேற்கு பிரேசில்[3]

இந்த சிற்றினம் பலவிதமான சத்தமுடைய அழைப்புகளை உருவாக்குகிறது.

உணவு[தொகு]

தாமரைக்கோழியின் உணவு, பூச்சிகள் (வண்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் கிரிகெட்டுகள் போன்றவை),[4] பிற முதுகெலும்பில்லாதவை (எ.கா. உண்ணி மற்றும் மெல்லுடலிகள்), சிறிய மீன், வேர்கள்[4] மற்றும் மிதக்கும் தாவரங்கள் அல்லது நீரின் மேற்பரப்பிலிருந்து எடுக்கப்பட்ட விதைகள் ஆகும்.

இனப்பெருக்கம்[தொகு]

தாமரைக்கோழி மிதக்கும் கூடு ஒன்றில் நான்கு கருப்பு-புள்ளிகளுடைய பழுப்பு நிற முட்டைகளை இடுகிறது. ஆண், மற்ற நீர்க்கோழி மற்றும் சிற்றுள்ளான் உள்ளிட்ட வேறு சில நீர்வாழ் பறவைக் குடும்பங்களைப் போல இறக்கைகளுக்கும் மார்பகத்திற்கும் இடையில் இரண்டு முட்டைகளை வைத்து அடைகாக்கின்றன. பெண் பறவைகள் நான்கு ஆண் துணை வரை இனப்பெருக்க வாழ்வினை மேற்கொள்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2020). "Jacana jacana". IUCN Red List of Threatened Species 2020: e.T22693553A163616643. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T22693553A163616643.en. https://www.iucnredlist.org/species/22693553/163616643. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. "தாமரைக் கோழி". அறிவியல் களஞ்சியம் தொகுதி 11. தஞ்சாவூர் பல்கலைக்கழகம். அணுகப்பட்டது 11 சூலை 2017. 
  3. Gill, Frank; Donsker, David, eds. (2019). "Grebes, flamingos, buttonquail, plovers, painted-snipes, jacanas, plains-wanderer, seedsnipes". World Bird List Version 9.2. International Ornithologists' Union. 26 June 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 "Jacana jacana (Wattled Jacana or Tek Teky)" (PDF). Sta.uwi.rfu. 29 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரைக்_கோழி&oldid=3497290" இருந்து மீள்விக்கப்பட்டது