ச. வெற்றிவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ச. வெற்றிவேல் (S. Vetrivel) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சார்ந்தவர். சேலம் சொளடேசுவரி கல்லூரியில் இளங்களைப் பட்டம் பெற்ற இவர், இளம் நிலை சட்டப் பட்டமும் பெற்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த வெற்றிவேல், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Complete List of Tamil Nadu Assembly Elections 2016 Winners". சிஎன்என்-ஐபிஎன். 19 May 2016. பார்க்கப்பட்ட நாள் 21 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._வெற்றிவேல்&oldid=3462661" இலிருந்து மீள்விக்கப்பட்டது