உள்ளடக்கத்துக்குச் செல்

சோங்குவா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோங்குவா ஆறு (Songhua River மேலும் Haixi அல்லது Xingal, முன்னர் Sunggari என அழைக்கப்பட்டது ) என்பது சீனத்தின் முதன்மை ஆறுகளில் ஒன்றாகும். மேலும் இது அமுர் ஆற்றின் ஒரு பெரிய துணை ஆறு ஆகும். இது சுமார் 1,434 கிலோமீட்டர்கள் (891 mi) சீன வட கொரிய எல்லையில் உள்ள சாங்பாய் மலைகளிலிருந்து சீனாவின் வடகிழக்கு சிலின் மாகாணம் மற்றும் ஹெய்லோங்ஜியாங் மாகாணங்கள் வழியாக பாய்கிறது.

இந்த ஆறு 557,180 சதுர கிலோமீட்டர்கள் (215,130 sq mi) நிலப் பரப்பில் பாய்கிறது.[1][2] மேலும் ஆண்டுக்கு 2,463 cubic metres per second (87,000 cu ft/s) நீரை வெளியேற்றுகிறது.[3]

வடகிழக்கு சீனா சமவெளியானது மிகவும் சமதளமானது. இதனால் இதன்வழியாக பாயும் இந்த ஆற்றை வளைவு நெளிவு மிக்க ஆறாகிவிட்டது. இதனால் ஆற்றின் முந்தைய பாதைகளின் எச்சங்களாக, குதிரை குளம்பு ஏரிகளை உருவாக்கி, காலப்போக்கில் நெளியாறாக பாய்கிறது.

நிலவியல்

[தொகு]

இந்த ஆறு சீனா - வட கொரியா எல்லைக்கு அருகிலுள்ள ஹெவன் ஏரிக்கு தெற்கே உருவாகிறது.

அங்கிருந்து பாயும்போது பைஷன், ஹாங்ஷி மற்றும் ஃபெங்மேன் நீர் மின் ஆற்றல் அணை போன்றவை குறுக்கே கட்டப்பட்டிருக்க, அதைக்கடந்து அங்கிருந்து அது வடக்கு நோக்கி பாய்கிறது. ஃபெங்மேன் அணை 62 கிலோமீட்டர்கள் (39 mi) நீளமுள்ள ஒரு நீர்தேக்கம் ஆகும். அணைக்கு கீழே, சோஙுவா ஆறானது சிலின் மாகாணம் வழியாக வடக்கே பாய்கிறது, பின்னர் இதன் மிகப்பெரிய துணை ஆறான நென் ஆறு, டானுக்கு அருகில் சேரும் வரை, வடமேற்கே பாய்கிறது.

பின்னர் சோங்குவா கிழக்கு நோக்கி கார்பின் வழியாக, நகரத்தைக் கடந்த பிறகு, தெற்கிலிருந்து ஆஷி நதியும், பின்னர் வடக்கிலிருந்து ஹுலன் நதியும் இணைகின்றன.

2007 ஆம் ஆண்டில் பேயன் அருகே ஒரு புதிய அணை கட்டப்பட்டது, இதன் மூலம் டாடிங்ஷான் நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது,[4] இதன் தென் கரையில் உள்ள அழகிய பகுதிக்கு ( சீன : 大 顶 山; பின்யின் : டா டங் ஷான்; ஆங்கிலம்: பிக் டாப் மவுண்டன் ) என்று பெயரிடப்பட்டது.

இந்த ஆறு ஜியாமுசி வழியாகவும், லெஸ்ஸர் ஜிங்கான் மலைத்தொடரின் தெற்கேயும் பாய்கிறது, இறுதியில் அமுர் ஆற்றுடன் டோலாங்ஜியாங், ஹிலோங்ஜியாங்கில் கலக்கிறது.

இந்த ஆறானது நவம்பர் பிற்பகுதியிலிருந்து மார்ச் வரை உறைகிறது. வசந்த காலத்தின் போது மலைப் பகுதிகளில் உள்ள பனி உருகும்போது இந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு தோன்றுகிறது. இந்த ஆற்றில் நடுத்தர அளவிலான கப்பல்களானது ஹார்பின் பகுதி வரை செல்லக்கூடியதாக உள்ளது . சிறிய சிறு மரக்கலன் மூலமாக சோங்குவா ஆற்றில் சிலின் மாகாணம் மற்றும் நென் ஆற்றில் கிகிஹார் வரையிலும் செல்ல முடியும்.

ஆற்றோரத்தில் உள்ள நகரங்கள் பின்வருமாறு:

வரலாறு

[தொகு]

2005 நவம்பர் மாதத்தில் இந்த ஆறானது வேதிப் பொருளான பென்சீனால் மாசுபட்டது. இந்த நிகழ்வினால் ஹர்பின் நகருக்கு நீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.[5] இந்த கசிவானது 80 கிலோமீட்டர்கள் (50 mi) நீண்டது. அதன்பிறகு இந்த மாசானது இறுதியில் சீன உருசிய எல்லையில் உள்ள அமுர் (ஹெய்லாங்) ஆற்றை அடைந்து கலந்தது. ஜூலை 28, 2010 அன்று, சீனாவின் ஜிலின் நகரத்தில் உள்ள இரண்டு இரசாயன ஆலைகளில் இருந்து பல ஆயிரம் பீப்பாய்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. அவற்றில் சில 170 கிலோகிராம்கள் (370 lb) ட்ரைமெதில்சில் குளோரைடு மற்றும் ஹெக்ஸாமெதில்டிசிலோக்சேன் போன்ற வெடிக்கும் பொருள்கள் இருந்தன.[6] 2016 ஆம் ஆண்டில், ஜிலின் நகருக்கு அருகிலுள்ள பகுதி ஒரு சிறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

குறிப்புகள்

[தொகு]
  1. National Geographic Atlas of China, p. 36.
  2. "Amur river basin at Rivers Network". Archived from the original on 2019-09-07. பார்க்கப்பட்ட நாள் 2019-11-07.
  3. National Conditions: Main Rivers accessed October 21, 2010.
  4. "Dadingzishan reservoir – will it have a happy future?". Transrivers. China Daily. 2012-04-10. பார்க்கப்பட்ட நாள் 2019-10-17.
  5. "Water pollution in China alarming, CCTV.com".
  6. Khabarovsk Region prevents poisoned Sungari water from reaching Amur பரணிடப்பட்டது 2012-03-18 at the வந்தவழி இயந்திரம், Jul 30, 2010, Moscow Time
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோங்குவா_ஆறு&oldid=3556189" இலிருந்து மீள்விக்கப்பட்டது