குதிரை குளம்பு ஏரி
Appearance
குதிரை குளம்பு ஏரி (Oxbow lake) என்பது ஆறோடு தொடர்புடைய நிலத்தோற்றங்களுள் ஒன்று ஆகும். ஆற்று வளைவானது ஆற்றின் மூப்பு நிலையில் அதிக அளவு துடிப்புடன் காணப்படுகிறது. அதன் வெளிப்புற கரை அல்லது உட்குழிந்த கரை துரிதமாக அரிக்கப்பட்டு அது ஒரு முழுமையான வளையம் போல மாற ஆரம்பிக்கிறது. இந்நிலையில் கால ஓட்டத்தில் நீரானது ஆற்று வளைவின் குறுகிய கழுத்துப் பகுதியை உடைத்து நேராக செல்வதால், அதனால் விடப்பட்ட வளைவுப் பகுதி குதிரை குளம்பு ஏரி எனப்படுகிறது.[1][2][3]
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள கன்வர் ஏரி ஆசியாவின் மிகப்பெரிய நன்னீர் குதிரை குளம்பு ஏரி ஆகும்.