உள்ளடக்கத்துக்குச் செல்

சேவல்கோழி மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேவல்கோழி மீனில் மொத்தம் 18 நஞ்சுள்ள முட்கள் உள்ளன: 2 இடுப்பு முட்கள், 3 குத முதுகெலும்புகள், 13 முதுகு துடுப்பு முட்கள்

சேவல்கோழி மீன், சாவக்கோழி, சாமீன் (Pterois) என்று அழைக்கப்படுவது நஞ்சுள்ள கடல் மீன் பேரினமாகும். இது பொதுவாக லயன்ஃபிஷ் என்று அழைக்கப்படுகிறது. இது இந்தோ பசிபிக் பகுதியை பூர்வீகமாக கொண்டது. இது வரிக்குதிரைமீன், தீமீன், வான்கோழி மீன், டேஸ்டிஃபிஷ் அல்லது பட்டர்பிளை-கோட் என்றும் அழைக்கப்படுகிறது. இது சிவப்பு, வெள்ளை, பழுப்பு, கிரீம், கருப்பு வரிகள் கொண்டு வித்தியானமான வண்ண அமைப்பைக் கொண்டுள்ளது. இதற்கு கவர்ச்சியான மார்புத் துடுப்புகள் மற்றும் 18 நச்சு முட்களைக் கொண்டுள்ளது. இதன் வித்தியாசமான வண்ண அமைப்பு எதிரிகளுக்கு எச்சரிக்கை தரும் வண்ணங்களைக் கொண்டுள்ளது. [1] [2] இந்த பேரினத்தில் Pterois radiata, Pterois volitans, டெரோயிசு மைல்சு ஆகியவை பொதுவாக ஆய்வு செய்யப்படும் இனங்கள். Pterois இனங்கள் பிரபலமான நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை மீன் ஆகும். [1] P. volitans மற்றும் பி. மைல்சு போன்ற இனங்கள் மேற்கு அட்லாண்டிக், கரிபியக் கடல் மற்றும் மத்தியதரைக் கடலில் அண்மைய மற்றும் குறிப்பிடத்தக்க அளவில் பரவியுள்ள இனங்கள் ஆகும். [3] [4] [5]

இனங்கள்

[தொகு]

தற்போது, 12 அங்கீகரிக்கப்பட்ட இனங்கள் இந்த பேரினத்தில் உள்ளன:

படம் அறிவியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
Pterois andover (ஜி ஆலன் & எர்ட்மேன், 2008) அன்டோவர் சேவல்கோழி மீன் இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியா மற்றும் சபா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் வரையிலான பகுதிகள்
Pterois antennata (பிளாச், 1787) ஸ்பாட்-ஃபின் சேவல்கோழி மீன் வெப்பமண்டல இந்திய மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல்கள்
Pterois brevipectoralis (மந்திரிசா, 2002) மேற்கு இந்தியப் பெருங்கடல்
Pterois cincta (ருபெல், 1838) செங்கடல் சிங்கமீன் [6] ஜெட்டா, சவுதி அரேபியா, செங்கடல்
Pterois lunulata (டெம்மின்க் & சிலேகல், 1843)( Temminck & Schlegel, 1843) லூனா சிங்கமீன் மேற்கு பசிபிக் பெருங்கடல்
டெரோயிசு மைல்சு (பென்னெட், 1828) பிசாசு தீ மீன் இந்தியப் பெருங்கடல், செங்கடல், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தோனேசியா வரை
டெரோயிசு மொம்பேசே (ஜே. எல். பி. ஸ்மித், 1957) ஆப்பிரிக்க சிங்கமீன், ஃப்ரில்-ஃபின் வான்கோழி மீன் வெப்பமண்டல இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக்
Pterois paucispinula (மட்சுனுமா & மோட்டோமுரா, 2014) [7] இந்தியாவிலிருந்து வடக்கு ஆஸ்திரேலியா வரை (திமோர் கடல்); வடக்கிலிருந்து தெற்கு ஜப்பான்; கிழக்கு நோக்கி வாலிஸ் மற்றும் ஃபுடுனா தீவுகள்
Pterois radiata (ஜி. குவியர், 1829) தெளிவான துடுப்பு சிங்கமீன் [6] செங்கடல் முதல் சோட்வானா விரிகுடா, தென்னாப்பிரிக்கா மற்றும் சொசைட்டி தீவுகள் வரை, வடக்கே ரியூக்யூ தீவுகள், தெற்கே நியூ கலிடோனியா வரை
டெரோயிசு ரசெல்லீ (பென்னெட், 1831) வெற்றுவால் வான்கோழி மீன், சிப்பாய் சிங்கமீன் அல்லது ரசெலின் சிங்கமீன் பாரசீக வளைகுடா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா முதல் நியூ கினியா வரை, தெற்கிலிருந்து மேற்கு ஆஸ்திரேலியா வரை
Pterois sphex (டி. எஸ். ஜோர்டான் & எவர்மன், 1903) ஹவாய் வான்கோழி மீன் ஹவாய்
Pterois volitans ( லின்னேயஸ், 1758 ) சிவப்பு சிங்கமீன் இந்தோ-பசிபிக் பகுதி

விளக்கம்

[தொகு]

சாவக்கோழி மீன்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை ஆகும். [8] [9] இளம் சாவக்கோழி மீன்கள் அவற்றின் கண் குழிகளுக்கு மேலே ஒரு உணர் கொம்பை கொண்டுள்ளன. அவை இனங்களுக்கிடையே தோற்றவமைப்பில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. [10] இந்த உணர்கொம்பின் பரிணாமம் தொடர்ந்து புதிய இரையை ஈர்ப்பதற்காக பயன்படுகிறது; பாலியல் தேர்வில் இது ஒரு பங்கு வகிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. [10]

சூழலியல் மற்றும் நடத்தை

[தொகு]

சேவல்கோழி மீன் இனங்கள் 5 முதல் 15 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. இவை சிக்கலான காதல் மற்றும் இனச்சேர்க்கை நடத்தைகளைக் கொண்டுள்ளன. [11] பெண் மீன்கள் 15,000 முட்டைகளைக் கொண்ட சளி நிறைந்த இரண்டு முட்டைக் கொத்துகளை அடிக்கடி வெளியிடுகிறன. [11] [12] கடந்த தசாப்தத்தில் சேவல்கோழி மீனினகளின் இனப்பெருக்கப் பழக்கவழக்கங்கள் பற்றிய ஆய்வுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. [12] அனைத்து இனங்களும் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் திறனை காட்டும்விதமாக மாறுபட்ட கோடுகள் மற்றும் வண்ணங்களைக் கொண்டுள்ளன.

இரை

[தொகு]
ஆம்பசைடீசை வேட்டையாடும் டெரோயிசு மைல்சு மீன்

பஹாமியன் முதல் வட கரோலினிய கடல் பகுதி வரையிலான 1,400 சேவல்கோழி மீன்களின் வயிறுகளில் செய்த ஆய்வின்படி, இந்த மீன்கள் பெரும்பாலும் சிறிய மீன்கள், முதுகெலும்பிலிகள் , மெல்லுடலிகள் போன்றவற்றை அதிக அளவில் வேட்டையாடுவது அறியப்பட்டது. சில மீன்களின் வயிற்றில் ஆறு வெவ்வேறு வகையான இரைகள் இருந்தது அறியப்பட்டது. [13] சேவல்கோழி மீன்கள் பொதுவாக காலையில் 7:00-11:00 வரை மிகவும் சுறுசுறுப்பாக வேட்டையாடி உணவை உண்கின்றன. மதியத்துக்குப் பிறகு உணவு உண்பதை குறைத்துக் கொள்கிறது. சேவல்கோழி மீன் ஒரு திறமையான வேட்டையாடியாகும். நடுநிலைமை ஒப்புமை தவறாமல் நீரில் தன்னை நன்கு நிலைநிறுத்திக்கொண்டு இரை மீனை மெதுவாக விரட்டி ஒரு மூலையில் தள்ளி கௌவக்கூடியது. [13] சேவல்கோழி மீன்கள் அதன் பெரிய இடுப்புத் துடுப்புகளை விரித்து இரையை குழப்பி ஒரே மூச்சில் விழுங்குகின்றன. [11] சேவல்கோழி மீன்களின் வயிறு நன்கு விரியக்கூடியதாக உள்ளதால் இவை அதிக அளவு உணவை உண்ணக்கூடியகாக உள்ளது. [14]

குறிப்புகள்

[தொகு]
 1. 1.0 1.1 National Geographic (2010-04-11). "Lionfish".
 2. Whitfield, P. E.; Hare, J. A.; David, A. W.; Harter, S. L.; Muñoz, R. C.; Addison, C. M. (2007). "Abundance estimates of the Indo-Pacific lionfish Pterois volitans/miles complex in the Western North Atlantic". Biological Invasions 9 (1): 53–64. doi:10.1007/s10530-006-9005-9. 
 3. Merrington, Andrew (28 June 2016). "Lionfish invading the Mediterranean Sea". Plymouth University.
 4. "Invasive Lionfish Arrive in the Mediterranean". Scientific American. 28 June 2016.
 5. Kletou, Demetris; Hall-Spencer, Jason M.; Kleitou, Periklis (2016). "A lionfish (Pterois miles) invasion has begun in the Mediterranean Sea". Marine Biodiversity Records 9. doi:10.1186/s41200-016-0065-y. 
 6. 6.0 6.1 Matsunuma, M.; Motomura, H. (2015). "Redescriptions of Pterois radiata and Pterois cincta (Scorpaenidae: Pteroinae) with notes on geographic morphological variations in P. radiata". Ichthyological Research 63 (1): 145–172. doi:10.1007/s10228-015-0483-6. 
 7. Matsunuma, Mizuki; Motomura, Hiroyuki (2015). "Pterois paucispinula, a new species of lionfish (Scorpaenidae: Pteroinae) from the western Pacific Ocean". Ichthyological Research 62 (3): 327–346. doi:10.1007/s10228-014-0451-6. 
 8. Morris Jr., James.A.; Freshwater, D. Wilson (2008). "Phenotypic variation of lionfish supraocular tentacles". Environmental Biology of Fishes 83 (2): 237–241. doi:10.1007/s10641-007-9326-2. https://archive.org/details/sim_environmental-biology-of-fishes_2008-10_83_2/page/237. 
 9. Church, J. E.; Hodgson, W. C. (2002). "Adrenergic and cholinergic activity contributes to the cardiovascular effects of lionfish (Pterois volitans) venom". Toxicon 40 (6): 787–796. doi:10.1016/s0041-0101(01)00285-9. பப்மெட்:12175616. https://archive.org/details/sim_toxicon_2002-06_40_6/page/787. 
 10. 10.0 10.1 Morris Jr., J. A.; Freshwater, D. W. (2007). "Phenotypic variation of lionfish supraocular tentacles". Environmental Biology of Fishes 83 (2): 237–241. doi:10.1007/s10641-007-9326-2. 
 11. 11.0 11.1 11.2 Ruiz-Carus, R.; Matheson Jr., R.; Roberts Jr., D.; Whitfield, P. (2006). "The western Pacific red lionfish, Pterois volitans (Scorpaenidae), in Florida: Evidence for reproduction and parasitism in the first exotic marine fish established in state waters". Biological Conservation 128 (3): 384–390. doi:10.1016/j.biocon.2005.10.012. https://archive.org/details/sim_biological-conservation_2006-03_128_3/page/384. 
 12. 12.0 12.1 Fishelson, L. (1997). "Experiments and observations on food consumption, growth and starvation in Dendrochirus brachypterus and Pterois volitans (Pteroinae, Scorpaenidae)". Environmental Biology of Fishes 50 (4): 391–403. doi:10.1023/a:1007331304122. https://archive.org/details/sim_environmental-biology-of-fishes_1997-12_50_4/page/391. 
 13. 13.0 13.1 Morris Jr., J. A.; Akins, J. L. (2009). "Feeding ecology of invasive lionfish (Pterois volitans) in the Bahamian archipelago". Environmental Biology of Fishes 86 (3): 389–398. doi:10.1007/s10641-009-9538-8. https://archive.org/details/sim_environmental-biology-of-fishes_2009-11_86_3/page/389. 
 14. Albins, Mark A.; Lyons, Patrick J. (2012). "Invasive red lionfish Pterois volitans blow directed jets of water at prey fish". Marine Ecology Progress Series 448: 1–5. doi:10.3354/meps09580. Bibcode: 2012MEPS..448....1A. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவல்கோழி_மீன்&oldid=3521588" இலிருந்து மீள்விக்கப்பட்டது