சேற்று உளுவை
சேற்று உளுவை | |
---|---|
காம்பியாவில் ஒரு சேற்று உளுவை | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Oxudercinae |
Genera | |
Apocryptes | |
வேறு பெயர்கள் | |
|
சேற்று உளுவை, சேத்துளுவை, வேட்டி, பரவட்டமீன்[2] (Mudskipper) என அழைக்கப்படுபவை நீர்நிலவாழி மீன்களாகும் . இவை Oxudercidae குடும்பம்,[3] மற்றும் Oxudercinae உட்குடும்பத்தைச் சேர்ந்தவை. சேற்று உளுவையில் 32 இனங்கள் உள்ளன. இவற்றின் அசாதாரண தோற்றம், தண்ணீரிலும் தரையிலும் உயிர்வாழும் திறனுக்காக அறியப்படுகிறன. இவை 30 சென்டிமீட்டர்கள் (12 அங்) வரை வளரக்கூடியவை. இவற்றில் பெரும்பாலானவை பழுப்பு பச்சை நிறத்தில் இருக்கும். இவை அடர் நிறத்திலிருந்து இளநிறம் வரை இருக்கும். இனச்சேர்க்கை காலத்தில் ஆண் மீன்கள் பெண் மீன்களை ஈர்ப்பதற்காக பிரகாசமான நிறம் கொண்ட புள்ளிகள் உருவாகும். அந்தப் புள்ளிகள் சிவப்பு, பச்சை, நீலம் போன்ற நிறங்களில் இருக்கும். சேற்று உளுவையின் தட்டையான தலையில் உருண்ட இரண்டுகண்கள் பந்து ஒட்டி இருப்பது போன்று நீண்டு இருக்கும். இந்த கண்கள் தேவைக்கேற்ப்ப வெளி நீட்டவும், உள்வாங்கிக்கொள்ளவும் கூடிய திறம் பெற்றவை. இவற்றின் மிகவும் கவனிக்கத்தக்க அம்சம், இவற்றின் மார்புத் துடுப்புகள் ஆகும். அத் துடுப்புகள் உடலின் மிகவும் முன்னோக்கி அமைந்துள்ளன. அவை சேற்றின்மேல் நடந்து செல்ல ஏதுவாக வலிமையான கால்கள் போல செயல்படுகின்றன. இவை மற்ற மீன்களைப்போல வழக்கமான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும். இவற்றின் மார்புத் துடுப்புகள் சேற்றுப் படுக்கைகளில் நடக்கவோ, மரத்தின் தாழ்ந்த கிளைகளில் ஏறவோ திறனைக் கொண்டுள்ளன. இந்த துடுப்புகள் காரணமாக, சேற்று உளுவைகள் இரண்டு அடி தூரம் வரை தாவிச் செல்லும் திறன் கொண்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
நடத்தை
[தொகு]பொதுவாக சேற்று உளுவைகள் அலைகளுக்கு இடையிலான வளைகளை வாழ்விடமாக கொண்டு வாழ்கின்றன. இந்தப் பண்பானது இந்த மீன்களின் தனிப்பட்ட பண்பாக உள்ளது. இது பெரும்பாலான அலைஏற்ற மீன்களில் காணப்படவில்லை. எல்லா நேரங்களிலும் உணவு உண்ணாத இந்த மீன்கள் சேற்றுப்படுக்கையில் ஓதத்தினால் நீர் வடிந்துகொண்டிருக்கும் வேளையில் மட்டும் உண்கின்றன.[4] இவை குறிப்பாக தாவர மிதவை உயிரிகள், பலுசுனைப்புழுக்கள், சிறு பூச்சிகள் போன்றவற்றை உண்கின்றன. இதில் ஆண்மீன்கள் தம் தலையால் ஒரு மீட்டருக்கும் மேலான ஆழம் கொண்ட வளையை 'J' அல்லது 'U' வடிவில் வளையை சேற்றில் உருவாக்குகின்றன. இந்த வளைகள் முட்டைகளின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாக அறியப்படுகிறது. சேற்று உளுவைகள் தண்ணீருக்கு வெளியில் இருக்கும்போது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்றன. ஆண் மீன்கள் தனக்கான வளையை உருவாக்கிய பின்னர் வெளியே வந்து பெண் மீன்களை ஈர்க்க முயற்சிக்கின்றது. பெண் மீன்களை ஈர்க்கும் முயற்சியின்போது வித்தியாசமான அசைவுகள் போன்றவற்றை ஆண்மீகள் வெளிப்படும்முத். பெண் மீன் தனக்கான ஆணை தேர்ந்தெடுத்தப் பிறகு ஆண் மீனைப் பின்தொடர்ந்து சென்று அந்த ஆணின் வளையில் நூற்றுக்கணக்கான முட்டைகளை இட்டு, அவற்றை கருத்தரிக்க வைக்கும். கருத்தரித்த பிறகு, ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் காலம் மிகக் குறைவு. இறுதியில் பெண் வெளியேறும். அதன்பிறகு வேட்டையாடிகளிடமிருந்து முட்டை நிரப்பப்பட்ட வளையை ஆண் மீன் பாதுகாக்கும். பெற்றோர் மீன்கள் தங்கள் வாழ்குமிழ்குள் நிரப்பிய புறவெளி ஆக்சிசனைக் கவனமாக வளைக்குள் செலுத்ததுகின்றன. அதனால் வளரும் முட்டைக்கு போதிய ஆக்சிசன் கிடைப்பதை உறுதி செய்கின்றன.
சேற்று உளுவைகளின் மிகவும் சுவாரஸ்யமான பண்பு, நீரிலும், வெளியேயும் உயிர்வாழும் திறன் ஆகும். தண்ணீரை விட்டுவிட்டு, நிலத்தில் மிகவும் வறண்ட சூழலுக்கு இவை நகரும் போது, இவை பெரிய செவுள் அறைக்குள் சிக்கியுள்ள தண்ணீரைப் பயன்படுத்தி சுவாசிக்கக்கூடியவை. மேலும் இவர்கள் வாய் மற்றும் தொண்டையின் உள்புறத்தில் ஆக்சிசனை உறிஞ்சி வைத்துக்கொண்டு நீண்ட நேரம் தண்ணீருக்கு வெளியே இருக்கின்றன. உண்மையில், இவர்கள் தங்கள் வாழ்நாளில் முக்கால்வாசி காலம் நிலத்தில் செலவிடுகிறன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை இந்தோ - பசிபிக் மற்றும் ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரை உள்ளிட்ட வெப்பமண்டல, துணை வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் காணப்படுகின்றன.[சான்று தேவை]
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ Richard van der Laan; William N. Eschmeyer; Ronald Fricke (2014). "Family-group names of Recent fishes". Zootaxa 3882 (2): 001–230. doi:10.11646/zootaxa.3882.1.1. பப்மெட்:25543675.
- ↑ "சேற்று உளுவை எனும் முன்னோடிகள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-09.
- ↑ Nelson, JS; Grande, TC; Wilson, MVH (2016). "Classification of fishes from Fishes of the World 5th Edition" (PDF). Archived from the original (PDF) on 13 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 10 May 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Graham JB, ed. (1997). Air–breathing Fishes. Evolution, Diversity and Adaptation. San Diego California: Academic Press.