உள்ளடக்கத்துக்குச் செல்

செ. யோகநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செ. யோகநாதன்
பிறப்பு(1941-10-01)1 அக்டோபர் 1941
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
இறப்புசனவரி 28, 2008(2008-01-28) (அகவை 66)
யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்விபேராதனைப் பல்கலைக்கழகம்
பணிஅரச அதிபர்
அறியப்படுவதுஎழுத்தாளர்
பெற்றோர்செல்லையா

செ. யோகநாதன் (Se. Yoganathan, அக்டோபர் 1, 1941 - சனவரி 28, 2008) ஈழத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பெருமளவு சிறுகதைகளையும் குறும்புதினங்களையும் எழுதியவர். புனை­வுகள், கட்­டு­ரைகள், மொழிப்­பெ­யர்ப்­புகள், குழந்தை இலக்­கியம் என தொன்னூறுக்கும் மேற்­பட்ட நூல்­களை இவர் எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட யோகநாதன் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர். ஆரம்பத்தில் கண்டியில் ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் இலங்கை நிர்­வாகச் சேவையில் தேர்ச்சி பெற்று மட்டக்களப்பு, பூநகரி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றினார். மார்க்­சிய சித்­தாந்­தத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். 1980களில் தமிழ்நாடு சென்று அங்கு பதி­னாறு ஆண்­டுகள் வாழ்ந்து 1996 இல் இலங்கை திரும்பினார். இறுதியாக கொழும்பில் உள்ள எம். டி. குணசேனா நிறுவனம் தமிழ் நூல்கள் வெளியிடத் தொடங்கிய போது அதற்குப் பொறுப்பாளராகப் பதவி ஏற்றார்.[1]

எழுத்துலகில்[தொகு]

ஈழகேசரியின் மாணவர் மல­ருக்கு கவி­தைகள், கட்­டு­ரைகள் எழு­திப் பரி­சுகள் பெற்­றவர். 1962 இல் சிற்­பியின் கலைச்செல்வி இதழில் இவ­ரு­டைய முதற்­கதை வெளியானது. இதனை அடுத்து இவரது "மலர்ந்த நெடு நிலா" என்ற குறும் புதினமும் கலைச்செல்வி வெளியிட்டது.[1]

பேராதனைப் பல்­க­லைக்­க­ழக மாண­வ­னாக இருந்த 1964 ஆம் ஆண்டில் இவரது பத்துச் சிறு­க­தைகளைக் கொண்ட யோகநாதன் கதைகள் சிறுகதைத் தொகுதி வெளி­வந்­தது. அஞ்­ச­லி இதழில் வெளிவந்த ஒளி­ ந­மக்கு வேண்டும் குறு­நாவல் 1974 இல் நூலாக வெளிவந்து இலங்கை சாகித்­திய மண்­டலப் பரி­சைப் பெற்றது. பல மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது.[1] தமிழ்நாட்டில் வாழ்ந்த காலத்தில் தமிழக இதழ்களில் நிறைய சிறு­க­தை­க­ள், புதினங்கள், கட்­டு­ரை­க­ள் எழுதினார்.[2]

விருதுகள்[தொகு]

செ. யோக­நாதன் இந்­திய மத்­திய அரசின் பரிசு உட்­பட தமி­ழக அரசின் விரு­தினை நான்கு தட­வைகள் பெற்­றுள்ளார்.[2] உயர் இலக்­கிய விரு­தான இலக்­கியச் சிந்­தனை விரு­தி­னையும் நான்கு தட­வைகள் பெற்­றுள்ளார். இலங்கை சாகித்­திய விருது நான்கு தடவை கிடைத்­துள்­ளது.[1]

1994 இல் இந்த நூற்­றாண்டின் ஈழத்துச் சிறு­க­தைகள் என்று ஒவ்­வொன்றும் 650 பக்­கங்கள் கொண்ட வெள்ளிப் பாத­சரம், ஒரு கூடைக் கொழுந்து ஆகிய இரண்டு தொகுதிகளை வெளியிட்டார்.[1]

குழந்தை இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு காட்டிய செ.யோ அத்துறையில் பல நூல்களை எழுதியதுடன் மூன்று சிறுவர் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் விளங்கினார். தமிழ்த் திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்ட இவர் இணை இயக்குநராகவும் செயற்பட்டார்.

இவரது நூல்கள் சில[தொகு]

 • யோகநாதன் கதைகள் (சிறுகதைகள், 1964)
 • இருபது வருஷங்களும் மூன்று ஆசைகளும் (குறுநாவல் தொகுதி)
 • ஒளி நமக்கு வேண்டும் (ஐந்து குறுநாவல்கள், 1973)
 • காவியத்தின் மறுபக்கம் (மூன்று குறுநாவல்கள், 1977)
 • வீழ்வேன் என்று நினைத்தாயோ? (சிறுகதைகள், 1990)
 • அன்னைவீடு (சிறுகதைகள், 1995)
 • கண்ணில் தெரிகின்ற வானம் (சிறுகதைகள், 1996)
 • அசோகவனம் (சிறுகதைகள், 1998)
 • அன்பான சிறுவர்களே.... (குழந்தைக் கதைகள், 2000)

மறைவு[தொகு]

செ. யோகநாதன் 2008, சனவரி 28 திங்கட்கிழமை மாரடைப்பினால் தனது 66-வது அகவையில் காலமானார்.[2]

உசாத்துணைகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 துயர்பகிர்தல்: செ. யோகநாதன், வீரகேசரி, அக்டோபர் 5, 2013
 2. 2.0 2.1 2.2 ஈழ எழுத்தாளர் செ.யோகநாதன் மரணம், OneIndia Tamil, 31 சனவரி 2008

வெளி இணைப்புகள்[தொகு]

தளத்தில்
செ. யோகநாதன் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._யோகநாதன்&oldid=3426600" இலிருந்து மீள்விக்கப்பட்டது