செவர்னயா செம்ல்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேவிர்னயா சிம்லியா
Северная Земля
தீவுக்கூட்டம்
மக்சமோலித்சு தீவில் கிரெங்கெல் விரிகுடா
மக்சமோலித்சு தீவில் கிரெங்கெல் விரிகுடா
உருசியாவின் வடமுனையில் சேவிர்னயா சிம்லியாவின் அமைவிடம்
உருசியாவின் வடமுனையில் சேவிர்னயா சிம்லியாவின் அமைவிடம்
சேவிர்னயா சிம்லியா is located in உருசியா
சேவிர்னயா சிம்லியா
சேவிர்னயா சிம்லியா
உருசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 79°30′0″N 97°15′0″E / 79.50000°N 97.25000°E / 79.50000; 97.25000ஆள்கூறுகள்: 79°30′0″N 97°15′0″E / 79.50000°N 97.25000°E / 79.50000; 97.25000
நாடுஉருசியா
கூட்டாட்சிப் பிரிவுகிராஸ்னயார்ஸ்க் பிரதேசம்
மாவட்டம்தைமீர்சுக்கி தொல்கானோ-நினெத்சுக்கி மாவட்டம்
முக்கிய தீவுகள்அக்டோபர் புரட்சி தீவு, போல்செவிக், கம்சமோலெத்சு, பயனியர், சிமித்
பெருங்கடல்ஆர்க்டிக் பெருங்கடல்
காராக் கடல் / லாப்டேவ் கடல்
உயர் புள்ளிகர்ப்பீன்சுக்கி மலை (965 மீ)
பரப்பளவு
 • மொத்தம்37,000 km2 (14,000 sq mi)
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்0
 (No permanent population)
நேர வலயம்ஒசநே+07:00
(கிராசுனயார்சுக், இந்தோசீனா)

சேவிர்னயா சிம்லியா (Severnaya Zemlya, உருசியம்: Се́верная Земля́, "வடக்கு நிலம்") என்பது உருசியாவில் உயர் ஆர்ட்டிக் பகுதியில் 37,000 சதுர கிலோமீட்டர் (14,000 சதுர மைல்) பரப்பில் அமைந்துள்ள தீவுக் கூட்டம் ஆகும். இத்தீவுக்கூட்டம் வில்கிட்ஸ்கி நீரிணையினால் பிரதான நிலப்பகுதியில் இருந்து பிரிக்கப்படுகின்றது. ஆர்க்டிக் பெருங்கடல், காராகடல், லாப்டேவ் கடல் என்பவற்றால் சூழப்பட்டுள்ளது.

புவியியல்[தொகு]

செவர்னயா செம்ல்யா அக்டோபர் புரட்சி, போல்ஷிவிக், கொம்சோமொலெட்ஸ் மற்றும் பயனிர் ஆகிய நான்கு முக்கிய தீவுகளை கொண்டுள்ளது. மேலும் 70 சிறிய தீவுகளை உள்ளடக்கியது. செவர்னயா செம்ல்யாவின் மொத்த பரப்பளவு 37,000 கிமீ 2 (14,300 சதுர மைல்) ஆகும். இத்தீவுகள் பெரும்பாலும் பனிப்பாறைகளை கொண்டுள்ளன. பிரதான தீவான போல்ஷிவிக்கில் பனிப்பாறை பகுதி அதன் நிலத்தின் மேற்பரப்பில் கால் பகுதியை உள்ளடக்கியது. இந்த தீவுக்கூட்டத்தின் மிக உயரமான இடம் மவுண்ட் கார்பின்ஸ்கி ஆகும். மவுண்ட் கார்பின்ஸ்கி 965 மீ (3,166 அடி) உயரமானதாகும். அக்டோபர் புரட்சி தீவிலிருந்து கொம்சொமோலெட்ஸ் தீவை ரெட் ஆர்மி நீரிணையும், அக்டோபர் புரட்சி தீவிலிருந்து போல்ஷிவிக் தீவை ஷோகால்ஸ்கி நீரிணையும் பிரிக்கின்றது. இரண்டு நீரிணைகளும் மேற்கில் காரா கடலை கிழக்கில் லாப்டேவ் கடலுடன் இணைக்கின்றன.[1]

பிரதான தீவுகள்[தொகு]

அக்டோபர் புரட்சி தீவு[தொகு]

அக்டோபர் புரட்சி தீவு (உருசிய மொழியில்: ஆஸ்ட்ரோவ் ஒக்டியாப்ஸ்காய் ரெவோலியுட்ஸி ) இந்த தீவு செவர்னயா செம்லியா குழுத் தீவிகளுல் மிகப் பெரிய தீவாகும். இந்த தீவின் பரப்பளவு 14,170 கிமீ 2 (5,470 சதுர மைல்) என மதிப்பிடப்பட்டுள்ளது.[2] 965 மீ (3,166 அடி) உயரமுள்ள கார்பின்ஸ்கி மலை இங்கு அமைந்துள்ளது. 1930-32 ஆண்டுகளில. ஜி.ஏ. உஷாகோவ், நிகோலே என். உர்வந்த்சேவ் ஆகியோரின் பயணத்தால் இந்த தீவு கண்டறியப்பட்டு பெயரிடப்பட்டது.[3] இங்கு 1974 முதல் 1988 வரையான காலப்பகுதியில் வவிலோவ் வானிலை ஆய்வு நிலையம் வடக்கு பகுதியில் இயக்கப்பட்டது.[4]

போல்ஷிவிக் தீவு[தொகு]

போல்ஷிவிக் தீவு செவர்னயா செம்லியா தீவுக் கூட்டங்களில் இரண்டாவது மிகப் பெரிய தீவாகும். இது அக்டோபர் புரட்சி தீவில் இருந்து ஷோகால்ஸ்கி நீரிணையால் பிரிக்கப்படுகின்றது. இந்த தீவின் பரப்பளவு 11,312 கிமீ 2 (4,370 சதுர மைல்) என மதிப்பிடப்பட்டுள்ளது. போல்ஷிவிக் தீவு மலைப்பாங்கானது. இத்தீவில் 935 மீ (3,068 அடி) உயரத்தை கொண்ட சிகரம் அமைந்துள்ளது. செவர்னயா செம்லியாவின் ஏனைய தீவுகளை விட ஒப்பீட்டளவில் குறைந்த பனிப்பாறைகளை கொண்டது.[5]

கொம்சோமோலெட்ஸ் தீவு[தொகு]

கொம்சோமோலெட்ஸ் தீவு  உருசிய ஆர்டிக்கில் அமைந்துள்ள செவர்னயா செம்லியா தீவுக்கூட்டத்தில் வடக்கே அமைந்துள்ள தீவாகும். தீவுக்கூட்டத்தில் மூன்றாவது பெரிய தீவாகும். மேலும் உலகின் 82 ஆவது பெரிய தீவாகும். பல ஆர்க்டிக் பயணங்களின் தொடக்கப்புள்ளி இந்த தீவாகும். இந்த தீவின் பரப்பளவு 9,006 கிமீ 2 (3,477 சதுர மைல்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கு 780 மீ (2,559 அடி) உயரமாக சிகரம் அமைந்துள்ளது. தீவின் 65% பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ளது.[6]

பயனிர் தீவு[தொகு]

பயனிர் தீவு (உருசிய மொழியில் ஆஸ்ட்ரோவ் பியோனர்) என்பது சுவர்னயா செம்லியா தீவுகளின் மேற்குத் திசையில் அமைந்துள்ள தீவாகும். கொம்சோமொலெட்ஸ் தீவிலிருந்து யூனி நீரிணையால் பிரிக்கப்பட்டுள்ளது. இத் தீவின் பரப்பளவு 1,527 கிமீ 2 (590 சதுர மைல்) ஆகும்.[6]

செவர்னயா செம்ல்யாவில் இத் தீவுகளை தவிர ஏராளமான தீவுகள் அமைந்துள்ளன.

காலநிலை[தொகு]

செவர்னயா செம்லியாவின் ஆண்டு வெப்பநிலை −14.8 C ஆகும். வருடாந்திர மழைவீழ்ச்சி சுமார் 420 மிமீ (16.5 அங்குலம்) ஆகும். குளிர்கால மாதங்களில் இந்த தீவுக்கூட்டம் வெப்பநிலை பெரிய ஏற்ற இறக்கங்களைக் காண்கிறது. வடக்கு அத்திலாந்திக்கில் தோன்றும் குறைந்த அழுத்த சூறாவளி  செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மிகவும் பொதுவானவை. கோடையில் வெப்பநிலை 0 °C (32 °F) காணப்படுவதால் பனிப்பொழிவு பொதுவானது.[7]

தாவரங்களும் விலங்குகளும்[தொகு]

செவர்னயா செம்லியா துருவ பாலைவனம் ஆகும். இங்கு 50 சென்டிமீட்டருக்கும் குறைவான (20 அங்குலங்கள்) குறைவான தாவரங்கள் வளருகின்றன. பாசி இனங்கள், பாசிப் பூஞ்சைகள் உடப்ட சில அரிய வகை இனங்களும் உள்ளன.[8]

டி கோர்டே, வோல்கோவ் மற்றும் கவ்ரிலோ ஆகியோரன் ஆய்வுகளின்படி செவர்னயா செம்லியாவில் முப்பத்திரண்டு பறவை இனங்கள் காணப்பட்டுள்ளன. இவற்றில் 17 இனங்கள் இந்த தீவுகளிலே இனப்பெருக்கத்தை மேற்கொள்கின்றன. மேலும் எட்டு பறவையினங்கள் பரவலாக அறியப்படுகின்றன. செவர்னயா செம்லியாவின் மிகவும் பொதுவான பாலூட்டி ஆர்க்டிக் லெம்மிங் என்று அழைக்கப்படும் காலர் லெம்மிங் ஆகும். இது அனைத்து பெரிய தீவுகளிலும் உள்ளது. மேலும் இங்கு ஆர்டிக் நரி, ஓநாய், ஆர்டிக் முயல், பனிக் கலைமான், வால்ரஸ், பனிக்கரடி ஆகிய விலங்குகளும் வசிக்கின்றன.[9][10]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செவர்னயா_செம்ல்யா&oldid=3367763" இருந்து மீள்விக்கப்பட்டது