செல்மா ஜார்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்மா ஜார்ஜ்
பிறப்புகொச்சி, கேரளம், இந்தியா
இசை வடிவங்கள்பின்னணி பாடகர், கருநாடக இசை
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இசைத்துறையில்1974–1987

செல்மா ஜார்ஜ் (Selma George) ஓர் இந்தியத் திரைப்பட பாடகி ஆவார். இவர் 1970-களில் மலையாள திரைப்படத்துறையில் பாடல்களைப் பாடியுள்ளார்.[1] இவர் 40 படங்களில் பாடியுள்ளார். மேலும் இவரது மிகவும் பிரபலமான பாடல் 1979ஆம் ஆண்டைய உள்கடல் திரைப்படத்தின் "சரதிந்து மலர்தீபா" ஆகும்.[2] இவர் பிரபல பாடகரான பாப்புக்குட்டி பாகவதரின் மகள். இவர் கேரள சங்கீத நாடக அகாதமியின் விருதினை மெல்லிசை பிரிவில் 2011ஆம் ஆண்டு பெற்றார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

எர்ணாகுளத்தில் உள்ள வைப்பின்கராவில் பிரபல பாடகர் பாப்புக்குட்டி பாகவதருக்கும் பேபிக்கும் ஒரே மகளாகப் பிறந்தார், செல்மா.[4] திரிபுனிதராவில் உள்ள ஆர். எல். வி இசை மற்றும் நுண்கலை கல்லூரியில் கருநாடக இசையில் தனது படிப்பை முடித்தார். இவரது சகோதரர் மோகன் ஜோசு மலையாள திரைப்படங்களில் நடிகராக உள்ளார். மலையாள திரைப்பட இயக்குநர் கே. ஜி. ஜார்ஜை 1977ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி சென்னையில் உள்ள புனித மத்தியாசு தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நடிகர் அருண் என்ற மகனும், தாரா என்ற மகளும் உள்ளனர்.

திரைப்படவியல்[தொகு]

  • ஜகதீசுவரி ஜயஜகதீசுவரி ... தேவி கன்யாகுமாரி 1974
  • ஜகதீசுவரி ஜயஜகதீசுவரி [ஊ] ... தேவி கன்யாகுமாரி
  • பட்டுடயாடா ... வைணவம் 1974
  • மலையாட்டூர் மலையும்கேரி ... தாமசுலீகா 1975
  • மானம் மயிலம் ... அக்னிபுஷ்பம் 1976
  • சிங்கக்குளிர்காத்தே ... அக்னிபுஷ்பம் 1976
  • பிராணாயாமமலர்க்காவிலை ... மல்லனும் மாதேவனும் 1976
  • எதேது பொன்மலையிலே ... ஓழுக்கினெதிர் 1976
  • பரவாயிடுக்கில் மன்னுண்டோ ... துளவர்ஷம் 1976
  • மடத்தக்கிளி ... துளவர்ஷம் 1976
  • அச்சன் நலியோரப்பூப்பன் ... ஆயிரம் ஜன்மங்கள் 1976
  • கங்கே பிரியா ... கமலோலா 1977
  • ஓரோ பூவும் விரியும் புலரி பொன் ... வியாமோஹம் 1978
  • முன்னபூமியிலே நாவுக்கல் ... இனியவளே உரங்காட்டே 1978
  • மாரத்தோரு ... ஓணப்புதவா 1978
  • தேவி பகவதி ... மன்னு 1978
  • பாடியதோன்னும் பாடல்ல ... துளக்கோ ஒரு வாத்தில் 1978
  • பூஜா மதுவினு ... சௌந்தர்யம் 1978
  • சீமை கடிஞ்சூல் பிராணாயாமம் ... உல்கடல் 1979
  • சரதிந்து மலர்தீபா ... உல்கடல் 1979
  • நீலக்குடா சூடி மானம் ... மேளா 1980
  • பரத முனியோரு கலம் வராச்சு ... யவனிகா 1982
  • மச்சானேதேடி ... யவனிகா 1982
  • மூகதாயுத சௌவர்ணம் ... லெக்காயுதே மாரனம் ஒரு பிளாசுபேக் 1983
  • பிரபாமாயி ... லெக்காயுதே மாரனம் ஒரு பிளாசுபேக் 1983
  • என்னேயுணர்த்திய புலர்காலத்திலே [கண்ணில்லாதே நிஜம் பாம்புகால்] ... லெக்காயுதே மாரனம் ஒரு பிளாசுபேக் 1983
  • கண்ணீராட்டிலை முங்கி ... அட ஆமிண்டே வரியெல்லாம் 1984
  • நீலக்குரிஞ்சிக்கல் பூத்து ... காதலிக்க பின்னில் 1987

மேற்கோள்கள்[தொகு]

  1. "Golden jubilee of a golden voice | Soundbox". soundbox.co.in. Archived from the original on 8 August 2014. பார்க்கப்பட்ட நாள் 6 August 2014.
  2. "Selma George". malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 6 August 2014.
  3. "Kerala Sangeetha Nataka Akademi Award: Light Music". Department of Cultural Affairs, Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 26 February 2023.
  4. "Innalathe Tharam- Pappukutty Bhagavathar". Amritatv. பார்க்கப்பட்ட நாள் 24 January 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்மா_ஜார்ஜ்&oldid=3912744" இலிருந்து மீள்விக்கப்பட்டது