ஆர். எல். வி. இசை மற்றும் நுண்கலைக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். எல். வி. இசை மற்றும் நுண்கலைக் கல்லூரி
வகைபொதுத்துறை
உருவாக்கம்இராதா லட்சுமி விலாசம் இசை கல்வி நிறுவனம் (1936)
ஆர். எல். வி" இசை மற்றும் நுண்கலைக் கல்விநிறுவனம் (1956)
ஆர். எல். வி" இசை மற்றும் நுண்கலைக் கல்லூரி (1997)
முதல்வர்Prof. C.J.SUSEELA
அமைவிடம்
இணையதளம்rlvcollege.com

இராதா லட்சுமி விலாசம் "ஆர். எல். வி" இசை மற்றும் நுண்கலைக் கல்லூரி (Radha Lakshmi Vilasam "RLV" College of Music and Fine Arts) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொச்சியின் திருப்பூணித்துறையில் அமைந்துள்ள ஒரு கல்வி நிறுவனமாகும். இது மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ளது. இங்கு இசை, நிகழ்த்து கலைகள், காட்சிக் கலைகளில் போன்ற படிப்புகள் இளங்கலை, முதுகலை படிப்புகளைகளாக வழங்கப்படுகிறது. இதன் தற்போதைய முதல்வர் பேராசிரியர். சி. ஜே. சுசீலா [1]

வரலாறு[தொகு]

இந்க்கல்லூரியானது கொச்சி அரச குடும்பத்துக்குச் சொந்தமான ஒற்றை அடுக்கு கட்டடத்தில் முதலில் தொடங்கபட்டது.

அப்போதைய கொச்சின் மன்னர் எச். எச். கேரள வர்மா மிதுக்கன் தம்புரான் மற்றும் அவரது மனைவி திருமதி லட்சுமிகுட்டி நேத்தியராம்மா ஆகியோர் இளம் பெண்களுக்கும் முதிர்ந்த பெண்களுக்கும் தையல், கைகோட்டிக்கலி, ஓவியம் போன்ற கலைகளை கற்பிக்க நிபுணர்களை அழைத்தனர். இந்த முயற்சியில் மன்னரின் மகள் ராதா மற்றும் மனைவி லட்சுமியின் பெயரில் ஒரு கல்வி நிறுவனம் உருவானது. மேலும் வாய்பாட்டு இசையையும் சேர்த்து 'ராதா லட்சுமி விலாசம் அகாடமி' என்று பெயரிடப்பட்டது.

1956 ஆம் ஆண்டில், இந்த கல்வி நிறுவனம் கேரள அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு ஆர். எல். வி. அகாடமி ஆஃப் மியூசிக் அண்ட் ஃபைன் ஆர்ட்ஸ் என பெயர் மாற்றப்பட்டது. வாய்பாட்டு, பரதநாட்டியம், கதகளி, ஓவியம் ஆகியவற்றில் பட்டயம் மற்றும் முதுகலை பட்டயப் படிப்புகள் தொடங்கப்பட்டன.

1998 ஆம் ஆண்டில், இந்த கல்வி நிறுவனம் கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது. மேலும் பட்டயப்படிப்பு மற்றும் முதுகலை பட்டயப்படிப்புகள் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்புகளாக மறுசீரமைக்கப்பட்டன.

வளாகம்

துறைகள்[தொகு]

இசை பீடம்[தொகு]

நிகழ்த்துக் கலைத் துறை[தொகு]

கட்சிகலைத் துறை[தொகு]

  • ஓவியத் துறை
  • சிற்பத் துறை
  • பயன்பாட்டு கலைத் துறை

படிப்புகள்[தொகு]

  • இளங்கலை - இசை மற்றும் நிகழ்த்து கலைகள்
  • முதுகலை - இசை மற்றும் நிகழ்த்து கலைகள்
  • இளங்கலை - நுண்கலை , காட்சிக்கலை
  • முதுகலை - நுண்கலை காட்சிக்கலை

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[தொகு]

  • கே. ஜே. யேசுதாஸ்
  • திருவிழா ஜெயசங்கர்
  • தொன்னக்கல் பீதாம்பரன்
  • மயநாத் கேசவன் நம்பூதிரி
  • பெனாய் வர்கீஸ்
  • வைக்கம் வள்ளியம்மாள்
  • வைக்கம் வாசுதேவன் நம்பூரி
  • ஹரிபாத் கே.பி.என் பிள்ளை
  • சீமா ஜி. நாயர்
  • கவுரி லெட்சுமி
  • சபரீஷ் பிரபாகர்

முதல்வர்கள்[தொகு]

  • என். வி. நாராயண பகவதர் 1956-57
  • கே. எஸ். குமாரசாமி ஐயர் 1957-66
  • கே. எஸ். ஹரிஹாரா ஐயர் 1966-68
  • நெல்லை டி. வி. கிருஷ்ணமூர்த்தி 1969-70
  • பாறசாலை பி. பொன்னம்மாள் 1970-80
  • மவேலிகாரா ஆர். பிரபாகர வர்மா 1981-84
  • திருமதி. எஸ். ஜானகி 1984-85
  • டி. பி மோனி ஐயர் 1985-86
  • கே. கே. தர்மராஜன் 1986-88
  • பி. லீலா 1988-94
  • வி. ஐ. சுகு 1994-96
  • அவனேஸ்வரம் ராமச்சந்திரன் 1996-98
  • திரிபுனிதுறை கே. லலிதா 2000-02
  • பி. எஸ். வனாஜம் 2002-2009
  • ஆர். காமாட்சி 2009-12
  • பேராசிரியர் எம். பாலசுப்பிரமணியம் (2012- 2014)
  • டாக்டர் கே. எஸ். ஜேஸ் (2014-2015)
  • பேராசிரியர் டி. என். கோவிந்தன் நம்பூதிரி (2015 -
  • பேராசிரியர். சாலக்குடி வி. கே. ரமேசன்

"Welcome to RLV College of Music and Fine Arts, Tripunithura". Rlvmusiccollege.org. Archived from the original on 2012-06-28. பார்க்கப்பட்ட நாள் 2012-05-31.

மேற்கோள்கள்[தொகு]