செயூன்கஸ் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Telmatobius|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
செயூன்கஸ் தவளை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Telmatobius
இனம்:
இருசொற் பெயரீடு
Telmatobius yuracare
De la Riva, 1994

செயூன்கஸ் தவளை ( Sehuencas water frog (Telmatobius yuracare) என்பது டெஹ்மட்போபி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நன்னீர் தவளை இனம் ஆகும். இது தென் அமெரிக்க நாடான பொலிவியாவைச் சேர்ந்த அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கை வாழிடமானது மழைக் காடுகள், மான்ட்டேன், ஆறுகள், நன்னீர் சதுப்புநிலம் ஆகும். இவை அவற்றின் வாழ்விட இழப்புகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளன. தற்போது இவை பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தால் அழிவாய்ப்பு இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகைப்பாடானது 2004 ஆம் ஆண்டின் புதுப்பிக்கப்படாத மதிப்பீட்டின் அடிப்படையில் செய்யப்பட்டுளது.[1] 2008 மற்றும் 2019 க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த தவளை இனத்தில் ஒன்றைக்கூட அதன் இயற்கை விழிடத்தில் எவரும் பார்க்கவில்லை.[2]

2019 ஆண்டு வரை, பொலிவியாவில் கொச்சபாம்பா நகரில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் பராமரித்துவரப்பட்ட "ரோமியோ" என்று அழைக்கப்பட்ட ஒரு ஆண் தவளை மட்டும் இருந்துவந்துள்ளது. செயூன்கஸ் தவளையின் வாழ்நாள் சராசரியாக 15 ஆண்டுகாலம் என்பதால், 10 ஆண்டுகள் வயதான ரோமியோவோடு இந்தத் தவளை இனம் அழிந்துவிடும் என்ற அச்சம் நிலவிவந்தது. இந்த ஆபத்தை நீக்கி ரோமியோவின் சந்ததிகளை உருவாக்க பொலிவிய விலங்கியல் ஆய்வாளர்கள் இதே இனத்தைச் சேர்ந்த பெண் தவளையைத் தேடும் முயற்சியில் தீவிரமாக இயங்கிவந்தனர். இதற்காக பொலிவியாவில் காடு, மலை என வெவ்வேறு இடங்களுக்கு ஆய்வாளர் குழுக்கள் சென்றன. செயூன்கஸ் தவளை குறித்த விழிப்புணர்வை ஊட்டவும் அதற்காக பணத்தைத் திரட்டவும், உலக காட்டுயில் பாதுகாவலர்கள் முயற்சிகளில் ஈடுபட்டனர்[3] இதன் ஒரு பகுதியாக  ‘ரோமியோ தவளை’ பற்றிய விவரங்களானது Match.com என்ற இயங்கலை வரண் பார்க்கும் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.[4] பொலிவியாவின் மழைக் காட்டில் பயணம் மேற்கொண்ட ஆய்வாளர் குழு, 2019 சனவரியில் ஓர் ஓடையில் இந்த இனத்தைச் சேர்ந்த 5 தவளைகளை சேகரித்தனர். அவற்றில் மூன்று ஆண் தவளைகள்,  இரண்டு பெண் தவளைகள்.[5] மீண்டும் கண்டறியப்பட்ட இந்த தவளைகளுக்கு கைட்ரிடியோமைகோசிஸ், நோய்த் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது.[6] சிகிச்சையின் பின்னர், ஜூலியட் பெண் தவளையுடன் ரோமியோ இணை சேரவைக்கப்படும். இதன் மூலம் காடுகளில் குறைந்து போயுள்ள இந்த இனத் தவளைகளை இனப்பெருக்கம் செய்து, இனத்தை மீட்க வழியேற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Claudia Cortez; Steffen Reichle; Ignacio De la Riva; Jörn Köhler (2004). "Telmatobius yuracare". The IUCN Red List of Threatened Species 2004: e.T57369A11627745. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2004.RLTS.T57369A11627745.en. 
  2. Burrowes, P. A.; De la Riva, I. (2017). "Unraveling the historical prevalence of the invasive chytrid fungus in the Bolivian Andes: implications in recent amphibian declines". Biological Invasions 19 (6): 1781–1794. 
  3. "Finding a Mate for the World’s Loneliest Frog". https://www.globalwildlife.org/our-work/regions/south-america/finding-a-mate-for-the-worlds-loneliest-frog/. பார்த்த நாள்: 2018-04-24. 
  4. "Bolivia's lonely frog: Scientists race to find mate for Romeo". 9 February 2018. https://www.bbc.com/news/world-latin-america-43004367. பார்த்த நாள்: 9 February 2018. 
  5. "World's 'loneliest' frog gets a date". 15 January 2019. பார்க்கப்பட்ட நாள் 15 January 2019.
  6. "Status and Trends of Amphibian Declines and Extinctions Worldwide". 3 December 2004. பார்க்கப்பட்ட நாள் 15 January 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயூன்கஸ்_தவளை&oldid=3930247" இலிருந்து மீள்விக்கப்பட்டது