சென்னு நளிகே
சென்னு நளிகே என்பது இந்தியாவின் துளுநாடு [1] பகுதியைச் சேர்ந்த துளு மக்களால் ஆடப்படும் ஒரு பண்டைய பாரம்பரிய நாட்டுப்புற நடன கலை வடிவமாகும். துளு நாட்காட்டியில் வரும் சுக்கி மாதத்தில், (அறுவடைக்குப் ஒரு மாதத்திற்கு பின்னர்) இந்த வகை நடனம் ஆடப்படுகிறது. இது ஆங்கில மாதங்களில் பொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வரும்.
மேரா சமூகம்
[தொகு]மேரா ( துளுவில் மோகர் என்றும் கன்னடத்தில் மொகெரா என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் துளுநாட்டின் ஒரு பழங்குடி சமூகமாகும், இது முக்கியமாக கேரளாவின் நவீன காசர்கோடு மாவட்டம் மற்றும் கர்நாடகாவின் மங்களூர், உடுப்பி, கூர்க் மாவட்டங்களில் பரவலாக காணப்படும் ஒரு பழங்குடி மக்கள். அவர்கள் "பாரி" எனப்படும் தாய்வழி குடும்ப அமைப்பைப் பின்பற்றுகிறார்கள். மேராக்கள் பேசும் மொழி துளு ஆகும்.
நளிகே
[தொகு]தட்சிண கன்னடத்தைச் சேர்ந்த மேரா [2] சமூகத்தால் நிகழ்த்தப்படும் நளிகே எனப்படும் இந்த வகையான நடனமானது சுக்கி முழு நிலவு நாளில் தொடங்கி மூன்று முதல் ஒன்பது நாட்கள் வரை நீடிக்கும்,எவ்வளவு நாட்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை அந்த இனத்தின் தலைவர் அவர்கள் கூட்டத்தில் முடிவெடுப்பார்.
பத்தனாக்கள் பாடல்
[தொகு]<கோடி சென்னையா மற்றும் சிரி ஆகியவை மிகவும் நன்கு அறியப்பட்ட மற்றும் கொண்டாடப்படும் பத்தனாக்கள் .
- கோட்டி சென்னையா அதன் தளத்தைக் கொண்டு துளுநாட்டின் தென் பிராந்தியங்களில் பிரபலமானது. இது உயர்சாதி மக்களுக்கும் ,(பல்லாலா) பில்லவாக்களின் கள் தட்டுதல் சமூகத்தைச் சேர்ந்த கோட்டி மற்றும் சென்னியா என்ற இரண்டு இளைஞர்களுக்கும் இடையேயான மோதலை விவரிக்கிறது. அவர்கள் பல்லாலாக்களுக்கு எதிராக ஒரு போரை நடத்துகிறார்கள் அதன்மூலம் தியாகிகளின் மரணத்தை சந்திக்கிறார்கள். அவர்களை இன்றும் கோவில்களில் தெய்வமாகி வழிபட்டு வருகின்றனர்.
- சிரி , அவரது மகள் சோன் மற்றும் அவரது பேரன்கள், அபேஜ்-டரேஜ் ஆகியோரின் கதைகள் ஒரு காவியத்தை உருவாக்குகின்றன. இது ஒரு பெண்ணின் எதிரிகளுக்கு எதிராக கிளர்ச்சி மற்றும் அதன் விளைவுகளைக் கையாள்கிறது. சிரி பத்தனா தற்போது பெண்ணிய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக மாறியுள்ளது மற்றும் படிநிலை அநீதிக்கு எதிரான அதன் எதிர்ப்பிற்காக அறியப்படுகிறது. இது தென் கனரா மற்றும் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தின் விசேஷமான தாய்வழி உறவுமுறை தொடர்பான பிரச்சனைகளை விவாதிக்கிறது.
சடங்கு உடைகள்
[தொகு]இதில் சென்னு மற்றும் கொரகா என்று இரண்டு கதாபாத்திரங்கள் வித்தியாசமாக ஆடை அணியும் முறை உள்ளது. சென்னு தலையில் சம்பிக்கே பூவுடன் கூடிய பெண் வேடமாகவும், கொரகா ஆண் வேடமாகவும் பூண்டு இரவு முழுவதும் ஆடப்படுகிறது. பத்தனை பாடல்கள் பாடி, பின்னணி இசையில் ஆண்களும் பெண்களும் உதவி நடனம் ஆடுகிறார்கள்.
நம்பிக்கை
[தொகு]சுக்கி மாத இரவு நேரத்தில் சென்னுகுனிதா வீடு வீடாக சென்று ஆடி வரும் போது, பெல்தங்கடி மற்றும் சுல்லியாவைச் சேர்ந்த கவுடா சமூகத்தினர் செய்யும் ஒரு வகையான நாட்டுப்புற சடங்கான, சித்தவேசம் அதற்க்கு எதிரில் வரக்கூடாது என்று ஒரு நம்பிக்கை உள்ளது. இரு ஆட்ட நாயகர்களும் எதிர் எதிராக வந்தால் மோதல் ஏற்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kamila, Raviprasad (3 March 2018). "Timeless Tulu folk songs travel to English". The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/timeless-tulu-folk-songs-travel-to-english/article22920790.ece.
- ↑ Mundkur, Ravindra (1 October 2016). "TuLu Research & Studies: 365. The Mugera Community".