செந்தலை பஞ்சுருட்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செந்தலை பஞ்சுருட்டான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மெரோபிடே
பேரினம்:
இனம்:
மீ. அமெரிக்கானசு
இருசொற் பெயரீடு
மீரோப்சு அமெரிக்கானசு
முல்லர், 1776
வேறு பெயர்கள்

மீரோப்சு விர்டிசு அமெரிக்கானசு

செந்தலை பஞ்சுருட்டான் (Rufous-crowned bee-eater)(மீரோப்சு அமெரிக்கானசு) என்பது மெரோபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இங்கு இது பரவலாகக் காணப்படுகிறது. இதன் விலங்கியல் பெயர் தெரிவிப்பதுபோல, இது புதிய உலகில் காணப்படவில்லை.[1]

இது முன்னர் நீல-தொண்டை பஞ்சுருட்டான் (மீ. விரிடிசு) துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் 2014-ல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் மற்றும் பேர்ட்லைப் இன்டர்நேஷனல் ஆகியவற்றால் தனித்துவமான சிற்றினமாகப் பிரிக்கப்பட்டது. மேலும் 2022-ல் பன்னாட்டு பறவையியல் மாநாடும் இதைப் பின்பற்றியது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Merops americanus". IUCN Red List of Threatened Species 2016: e.T22725908A94905658. https://www.iucnredlist.org/species/22725908/94905658. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "IOC World Bird List 12.1". IOC World Bird List Datasets (in அமெரிக்க ஆங்கிலம்). doi:10.14344/ioc.ml.12.1. பார்க்கப்பட்ட நாள் 2022-01-29.
  3. Collar, Nigel J. (2011). "Species limits in some Philippine birds including the Greater Flameback Chrysocolaptes lucidus". Forktail 27: 29–38. https://static1.squarespace.com/static/5c1a9e03f407b482a158da87/t/5c211d4d4fa51a4c897b3a4b/1545674062184/Greater-Flameback.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தலை_பஞ்சுருட்டான்&oldid=3578600" இலிருந்து மீள்விக்கப்பட்டது