செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
| உருவாக்கம் | 1974 |
|---|---|
| வகை | அரசு |
| நோக்கம் | அகரமுதலிகளை உருவாக்குவதுடன், கலைச்சொற்கள் உருவாக்கும் பணி |
| தலைமையகம் | சென்னை |
| தலைமையகம் |
|
சேவை பகுதி | தமிழ்நாடு |
அமைச்சர் | ராஜ்மோகன் |
செயலாளர் | வே. ராஜாராமன் இ.ஆ.ப [1] [2] |
இயக்குநர் | க. பவானி |
| வலைத்தளம் | www |
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் மொழியின் சொல்வளத்தையும், காலப்பழமையையும், தனித்தன்மையையும் வெளிக் கொண்டு வர வேண்டுமென்பதற்காக தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி வெளியிடும் நோக்கத்துடன் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் (Directorate of Tamil Etymological Dictionary Project) ஒன்றை அமைத்தது.
இந்த இயக்ககத்தின் சார்பில் 12 மடலங்களில் (volumes) அடங்கும் 31 தொகுதிகளும் 13,327 பக்கங்கள் கொண்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி என்ற நூலாக வெளியிடப் பெற்றுள்ளன. இவை மிக விரிவான முறையில் சொற்களின் வேரும் வரலாறும் காட்டியும், பட விளக்கங்கள், இலக்கண, இலக்கிய, கல்வெட்டு, நாட்டுப்புறச் சொல் விளக்கங்க மேற்கோள்களைக் கொண்டும், திராவிட மொழிகளிலும், உலக மொழிகளிலும் தமிழ்ச் சொற்களின் ஊடாட்டத்தைக் காட்டியும் அரைக்கலைக்களஞ்சிய அமைப்பில் வெளியிடப் பெற்றிருக்கின்றன. இதன் முதல் பகுதி 1985 ஆம் ஆண்டிலும், கடைசித் தொகுதியான 31 ஆம் தொகுதி 2011 ஆம் ஆண்டிலுமாக வெளியிடப் பெற்றது.[1] [3]
தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியை எண்மப்படுத்த (கணனி மயமாக்க) நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. [4]
சொற்குவைத் திட்டம்
[தொகு]சொற்குவைத் திட்டம் என்பது இன்றைய கல்விப் புலத்தில் உள்ள 600 மேற்பட்ட துறைகளில் புழங்கும் கலைச்சொற்களை எல்லாம் திரட்டி அவற்றுக்கு இணையான தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்கி இணையத் தளத்தில் பொது வெளியில் வெளியிடுவதும் இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அகராதிகளில் உள்ள அனைத்து சொற்களையும் திரட்டி வந்த சொற்களே மீண்டும் வராமல் (Deduplication) வரிசைப்படுத்தி தமிழ்ச் சொல் வளத்தை உலகறிய செய்வது இதன் முதன்மை நோக்கமாகும்
அறிஞர்கள் மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் உருவாக்கி தரும் கலைச் சொற்கள் சொற்குவை வல்லுநர் குழு ஏற்பளிப்புக்குப் பின் இணையத்தில் பதிவேற்றி பொது பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன
முதன்மை நோக்கங்கள்
[தொகு]- தமிழின் சொல் வளத்தைக் காத்தல்
- தமிழின் சொல் வளத்தைப் பெருக்குதல்
- தமிழில் பிறமொழிக் கலப்பை தவிர்க்க துணை செய்தல் [5]
விருதுகள்
[தொகு]இந்த இயக்ககம் வழியாகக் கீழ்க்காணும் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.[6]
- தூய தமிழ்ப் பற்றாளர் விருது
- நற்றமிழ்ப் பாவலர் விருது
- தூய தமிழ் ஊடக விருது
- தேவநேயப் பாவாணர் விருது
- வீரமாமுனிவர் விருது
- சொல்லின் தாய் விருது
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "இயக்ககத் தோற்றம - வரலாறு". Retrieved 2024-03-25.
- ↑ தமிழ் அகராதியியல் நாள் விழா: விருதுகள் வழங்கி கவுரவிப்பு (செய்தி)
- ↑ "மொழிவழியாக மனித வரலாற்றில் பின்னோக்கிப் பயணம் செய்கிறோம்".
- ↑ "தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலியை எண்மப்படுத்த நிதி ஒதுக்கீடு". தினமணி. 8 January 2015. https://www.dinamani.com/tamilnadu/2015/Jan/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81-1045129.html. பார்த்த நாள்: 6 June 2026.
- ↑ "சொற்குவைத் திட்டம்". Retrieved 2025-01-29.
- ↑ தினமலர். "தினமலர் தமிழ் செய்திகள் | Tamil News | Latest News in Tamil | Tamil Breaking News | சமீபத்திய செய்திகள் | தமிழ்நாடு செய்திகள்". https://www.dinamalar.com. Retrieved 2025-05-13.
{{cite web}}: External link in(help)|website=
வெளி இணைப்புகள்
[தொகு]- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக வலைத்தளம்
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட டுவிட்டர் பக்கம்