செதில்வயிற்றுப் பச்சைச் சின்ன மரங்கொத்தி
செதில்வயிற்றுப் பச்சைச் சின்ன மரங்கொத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | பைகசு
|
இனம்: | பை. சாந்தோபைகேயசு
|
இருசொற் பெயரீடு | |
பைகசு சாந்தோபைகேயசு (கிரே & கிரே, 1847) | |
வேறு பெயர்கள் | |
பைகசு மைரிமி கோபோனேசு |
செதில் வயிற்றுப் பச்சைச் சின்ன மரங்கொத்தி (Little scaly – bellied Green Wood pecker)[2] என்பது வரிமார்பு மரங்கொத்தி மற்றும் தச்சன் குருவி என்றும் அறியப்படுகிறது. இது இந்திய துணைகண்டத்தில் காணப்படும் ஒரு மரங்கொத்தி வகையாகும்.
உடலமைப்பு
[தொகு]செதில்வயிற்றுப் பச்சைச் சின்ன மரங்கொத்தியின் உடல் நீளம் 29 செ.மீ. ஆகும். இதன் அலகு சிலேட் கொம்பு நிறத்திலும், விழிப்படலம் இளஞ்சிவப்பான வெள்ளை நிறத்திலும், உள்வட்டம் பழுப்புத் தோய்ந்த சிவப்பாகவும், கால்கள் சாம்பல் தோய்ந்த பச்சை நிறத்திலும் இருக்கும். உடலின் மேற்பகுதி புல் பச்சை நிறமும், மஞ்சள் நிறப்பிட்டமும் கொண்ட இதன் உச்சந்தலையும் தலைக் கொண்டையும் குங்குமச் சிவப்பாக இருக்கும். வால் பசுமை தோய்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். வாலின் இடையிடையே முறிந்த சில வெள்ளைப் பட்டைகள் காணப்படும். பிடரியில் ஆரஞ்சும் கறுப்புமான நிறத்தினிலான சிறுபகுதியைக் காண இயலும். கண்வழியாக மேலே கறுப்பு விளிம்பு கொண்ட வெண்புருவம் பின்னோக்கிச் செல்லும். காதின் மேற்தூவிகள் கருஞ்சாம்பல் பழுப்பு நிறத்தில் இருக்கும். கன்னங்கள் சாம்பல் கலந்த வெண்நிறமாகக் கருங்கோடுகளுடன் காட்சியளிக்கும். பசுமை தோய்ந்த வெளிர் பழுப்பு நிறங் கொண்ட மார்பிலும் வயிற்றிலும் அம்பு முனைபோன்ற கருப்பு நிறச் சிறு திட்டுக்கள் நிறைந்திருக்கும். பெண்ணின் உச்சியும் கொண்டையும் கருப்பு நிறமானவை.[3]
காணப்படும் பகுதிகள், உணவு
[தொகு]மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைச்சார்ந்த வட்டாரங்களைச் சார்ந்த காடுகளில் இணையாக அடிமரங்களில் தொற்றியபடி இரைதேடும். அப்பொழுது வால் மரப்படைகளில் அழுந்தியதாக மூன்றாவது கால் போலச் செயல்படும். மரக்கிளைகளைச் சுற்றிச் சுற்றிவரும். இது அலகால் அவ்வப்போது மரப்பட்டைகளைத் தட்டி பூச்சிகள் மிரண்டு வெளிப்படும்படி செய்யும். நீண்ட முள் முடிச்சு அமைப்புடைய நாக்கினை மரத்தில் உள்ள துளைகளுள் செலுத்தி மரத்தைத் துளைக்கும் வண்டுகளைப் பிடிக்கும். தரைக்கு இறங்கி எறும்பு முதலிய பூச்சிகளைப் பிடிக்க அலகின் கூரிய முனைகளைப் பயன்படுத்தும்.[4]
இனப்பெருக்கம்
[தொகு]மார்ச் முதல் மே முடிய உள்ள பருவத்தில் அடிமரத்தைக் குடைந்து 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். பழனி மற்றும் நீலகிரியில் மே மாதம் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. இதன் முட்டைகள் தூய வெள்ளை நிறத்தில் காணப்படும். ஆண் பெண் என இரண்டு பெற்றோர்களும் குஞ்சுகளுக்கு உணவினை வழங்கும்.[5]
படங்கள்
[தொகு]-
சிறிய செதிள்வயிற்று மரங்கொத்தி நிலம்பூரில்
-
கார்ப்பெட் தேசியப் பூங்காவில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Picus xanthopygaeus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ "(Picus%20xanthopygaeus)". biodiversityofwestbengal.wildwingsindia.in. Archived from the original on 2022-01-10. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
- ↑ https://ebird.org/species/sttwoo1?siteLanguage=en_IN
- ↑ தமிழ்நாட்டுப் பறவைகள். முனைவர் க.ரத்னம். மெய்யப்பன் பதிப்பகம். பக்கம் எண்: 97
- ↑ https://indiabiodiversity.org/species/show/239073