செட்லட் தீவு
புவியியல் | |
---|---|
அமைவிடம் | அரபிக்கடல் |
ஆள்கூறுகள் | 11°41′N 72°42′E / 11.683°N 72.700°E |
பரப்பளவு | 1.14 km2 (0.44 sq mi) |
நிர்வாகம் | |
India | |
ஒன்றியப் பகுதி | இலட்சத்தீவுகள் |
மக்கள் | |
மக்கள்தொகை | 2545 (2009) |
செட்லட் தீவு (Chetlat Island) என்பது இலட்சத்தீவுகளில் அமைந்துள்ள முருகைக்கற் தீவு ஆகும். இது இந்தியாவின் இலட்சத்தீவுகளின் ஒன்றியப் பகுதியான அமினிதிவி உப தீவுக்கூட்டத்திற்குச் சொந்தமான பிரதேசம் ஆகும்.[1] இலட்சத்தீவுகளில் அமைந்துள்ளதும் மக்கள் வசித்து வருவதுமான தீவுகளில் இதுவும் ஒன்றாகும்.
புவியியல்[தொகு]
செட்லட் தீவானது கிட்லன் தீவில் இருந்து வடகிழக்காக 37 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இதன் மொத்த உலர் நிலப் பரப்பளவு 1.14 சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.
வரலாறு[தொகு]
முற்காலத்தில் போர்த்துகேயக் கடற்பயணிகளினால் இங்கு வசித்து வந்த மக்கள் துன்புறுத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.[2] இங்கு தும்பு உற்பத்தியே முக்கிய தொழிலாகக் காணப்படுகின்றது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Hydrographic Description (Indian Ocean Pilot)
- ↑ "Chetlat" இம் மூலத்தில் இருந்து 2011-11-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111109002212/http://www.lakshadweep.nic.in/documents/Chapter%20V/Kiltan/Chetlat-8.pdf.
- ↑ R. H. Ellis, A short account of the Laccadive Islands and Minicoy, AES reprint 1992
வெளி இணைப்புக்கள்[தொகு]
- Lagoon sizes
- Chetlat - Geographical information பரணிடப்பட்டது 2012-01-04 at the வந்தவழி இயந்திரம்
- Chetlat - Oceandots at the Wayback Machine (archived திசம்பர் 23, 2010).
- List of Atolls பரணிடப்பட்டது 2012-08-13 at the வந்தவழி இயந்திரம்
- An ornithological expedition to the Lakshadweep archipelago பரணிடப்பட்டது 2013-06-17 at the வந்தவழி இயந்திரம்
- Sources towards a history of the Laccadive Islands
- FAO - An analysis of the carrying Capacity of Lakshadweep Coral Reefs