உள்ளடக்கத்துக்குச் செல்

சூரியகாந்தி நட்சத்திர மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியகாந்தி நட்சத்திர மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
ஃபோர்சிபுலடிடா
குடும்பம்:
ஆஸ்டிரிடே
பேரினம்:
பைக்னோபோடியா
இனம்:
பி. ஹெலியான்டோயிட்ஸ்
இருசொற் பெயரீடு
பைக்னோபோடியா ஹெலியான்டோயிட்ஸ்
பிராண்ட், 1835 [1]

சூரியகாந்தி நட்சத்திர மீன் (Sunflower sea star) என்பது வடகிழக்கு பசிபிக் பகுதியில் காணப்படும் ஒரு பெரிய நட்சத்திர மீனாகும். இதன் பேரினத்தைச் சேர்ந்த ஒரே இனம் இதுவாகும். இது உலகின் மிகப்பெரிய நட்சத்திர மீன்களில் ஒன்றாகும், அதிகபட்சமாக 1 m (3.3 அடி) கை நீளம் கொண்டவை. சூரியகாந்தி நட்சத்திர மீன்கள் பொதுவாக 16 முதல் 24 கைகள் கொண்டிருக்கும்; இவற்றின் நிறம் பொதுவாக மாறுபடும். இவை பெரும்பாலும் கடல் முள்ளெலிகள், கிளாம்கள், நத்தைகள் மற்றும் பிற சிறிய முதுகெலும்பற்றவைகளை இரையாக கொள்கின்றன . வடகிழக்கு பசிபிக் முழுவதும் இந்த இனம் பரவலாக பரவியிருந்தாலும், இதன் எண்ணிக்கை 2013 முதல் வேகமாக குறைந்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Pycnopodia helianthoides". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 9 April 2007.