உள்ளடக்கத்துக்குச் செல்

சுஷ்மா வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுஷ்மா வர்மா
2017 உலகக் கோப்பையில் சுஷ்மா வர்மாவின் புகைப்படம்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுஷ்மா வர்மா
பிறப்பு5 நவம்பர் 1992 (1992-11-05) (அகவை 31)
சிம்லா, இமாச்சலப் பிரதேசம்
மட்டையாட்ட நடைவலது கை மட்டைப்பந்து துடுப்பாட்டக்காரர்
பந்துவீச்சு நடை-
பங்குஇலக்குமுனைக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்16 நவம்பர் 2014 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம்24 நவம்பர் 2014 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாப12 ஏப்ரல் 2018 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்5
இ20ப அறிமுகம்5 ஏப்ரல் 2013 எ. வங்காளதேசம்
கடைசி இ20ப4 திசம்பர் 2016 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011–இமாச்சல பிரதேசம் (squad no. 5)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒபது இ20
ஆட்டங்கள் 1 35 19
ஓட்டங்கள் 175 31
மட்டையாட்ட சராசரி 5.81 10.33
100கள்/50கள் - -
அதியுயர் ஓட்டம் 41 12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/1 21/16 6/19
மூலம்: ESPNcricinfo, 24 சூலை 2017

சுஷ்மா வர்மா (Sushma Verma) இந்திய பெண்கள் மட்டைப்பந்து விளையாட்டு வீரர்.[1] இவர் இந்திய பெண்கள் தேசிய மட்டைப்பந்து குழுவில் இலக்குமுனைக்காப்பாளராகவும், வலது கை மட்டைப்பந்து துடுப்பாட்டக்காரராகவும் தனது பணியை ஆரம்பித்தார். இதுவரை 30 ஒரு நாள் போட்டிகளிலும், 19 டி.20 போட்டிகளிலும், ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2017இல் நடந்த பெண்கள் மட்டைப்பந்து உலகக்கோப்பை ஆட்டத்திற்குப் பிறகு, இமாச்சலபிரதேச முதல் அமைச்சர் வீரபத்ர சிங் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பணியை இவருக்கு வழங்கினார்.[2][3]

இளமைப் பருவம்

[தொகு]

சுஷ்மா வர்மா இமாச்சலப்பிரதேசம், சிம்லாவில் நவம்பர் 3, 1992 இல் பிறந்தார். அவரது தந்தை "போபால் சிங் வர்மா" வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் படிக்க வைக்க விரும்பினார். ஆனால் சுஷ்மா சிம்லாவில் உள்ள "போர்ட்மோர் அரசு மாதிரி" பள்ளியில் சேர்ந்து படித்தார். கூடைப்பந்து, கைப்பந்து, பாட்மின்டன் போன்ற விளையாட்டுகளில் மாநில அளவிலான விளையாட்டு வீரராக இருந்தார்.

உள்ளூர்ப் போட்டிகள்

[தொகு]

இவர் இமாச்சல பிரதேச மட்டைப்பந்து சங்கத்திற்காக விளையாடியுள்ளார். 2011 இல் அனைத்து இந்திய பெண்கள் போட்டிகள் நடைபெற்றது. அதில் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் இவரது தலைமையிலான இமாச்சல அணி தோல்வியுற்றது. இவர் இமாச்சல பிரதேச மாநிலத்திலிருந்து வந்த முதல் பெண் மட்டைப்பந்து விளையாட்டு வீரராக உள்ளார்.[4][5][6][7] இந்திய ரயில்வே அணிக்காக விளையாடியுள்ளார். இவர் மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீட் கௌர்,மற்றும் பூனம் ராட் ஆகியோருடன் இணைந்து விளையாடியுள்ளார்.[8]

சர்வதேச போட்டிகள்

[தொகு]

வர்மா 2017 பெண்கள் உலகக்கோப்பை இறுதிச்சுற்று போட்டியில் பங்கேற்றார். இந்திய அணி, இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் உலகக்கோப்பையைத் தவறவிட்டது.[9][10][11]

மேற்கோள்கள்

[தொகு]

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஷ்மா_வர்மா&oldid=3178125" இலிருந்து மீள்விக்கப்பட்டது