சுவேதாலியாங்கு கோவில்

ஆள்கூறுகள்: 17°20′17″N 96°27′45″E / 17.337931°N 96.462409°E / 17.337931; 96.462409
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவேதாலியாங்கு கோவில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பெகு, மியான்மர்
புவியியல் ஆள்கூறுகள்17°20′17″N 96°27′45″E / 17.337931°N 96.462409°E / 17.337931; 96.462409
சமயம்தேரவாத பௌத்தம்

சுவேதாலியாங்கு கோவில் (Shwethalyaung Temple)(பர்மியம்: ရွှေသာလျှောင်းဘုရား) என்பது மியான்மரில் பெகு மேற்கு பகுதியில் உள்ள புத்தக் கோயிலாகும்.

சுவேதாலியாங்கு புத்தர் சிலை[தொகு]

சுவேதாலியாங்கு புத்தர் சிலையானது சாய்ந்த நிலையில் உள்ளது. புத்தர் சிலையின் நீளம் 55 மீட்டர்கள் (180 அடி) மற்றும் உயரம் 16 மீட்டர்கள் (52 அடி) ஆகும். இது 994 ஆம் ஆண்டு மோன் மன்னர் மிகதேபாவின் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. 1757இல் பெகு கொள்ளையடிக்கப்பட்டபோது இந்த சிலை காணாமல் போனது. பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் போது, 1880ஆம் ஆண்டில், சுவேதாலியாங்கு புத்தர் சிலை புதர் காடு ஒன்றின் மறைவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. மறுசீரமைப்பு 1881இல் தொடங்கியது. புத்தரின் மொசைக் தலையணைகள் (அதன் இடது பக்கத்தில்) 1930இல் சேர்க்கப்பட்டன.

படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவேதாலியாங்கு_கோவில்&oldid=3207672" இலிருந்து மீள்விக்கப்பட்டது