சுல்தான் பத்தேரி (மங்களூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுல்தான் பத்தேர் காட்சி கோபுரம் Sultan Battery Watch Tower
Sultan Battery 2163.JPG
சுல்தான் பத்தேரி காட்சி கோபுரம்
அமைவிடம்போலூர், மங்களூர்
கட்டப்பட்டதுதிப்பு சுல்தான்
Top view
மேல் பார்வை

சுல்தான் பத்தேரி (Sultan Battery) கண்காணிப்பு கோபுரம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பிரதான துறைமுக நகரமான மங்களூர் நகரத்தின் மையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போலூரில் அமைந்துள்ளது. இக்கண்காணிப்பு கோபுரம்  1784ஆம் ஆண்டில் திப்பு சுல்தானால் கட்டப்பட்டது.[1]

வரலாறு[தொகு]

போலூர் என்பது பேரரசர் திப்பு சுல்தானின் காலத்தில் கட்டப்பட்ட கண்காணிப்பு கோபுரத்திற்குப் பெயர் பெற்றது. தற்பொழுது இந்த கோபுரம் சிதைந்துபோகும் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. கி.பி 1784இல் திப்புசுல்தான் இறப்பதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு இக்கண்காணிப்பு கோபுரம் கட்டப்பட்டது. இந்த இடம் முன்னர் சுல்தானின் பேட்டரி என்று அழைக்கப்பட்டது.

சுல்தான் பேட்டரி கறுப்புக் கற்களால் கட்டப்பட்டது, போர்க் கப்பல்கள் ஆற்றில் நுழைவதைத் தடுக்கும் வகையில் கட்டப்பட்டது. இது ஆங்கில படையெடுப்பிற்கான முக்கிய பாதையாக இருந்தது. ஆனால் இப்பகுதி திப்பு சுல்தானால் ஆங்கிலத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் கடல் வழியாக மங்களூருக்குள் நுழைவதைத் தவிர்ப்பதற்காகப் பீரங்கிகளை நிறுவும் பகுதியாக இது பயன்படுத்தப்பட்டது.

கோபுரத்தின் கீழ் நிலத்தடி சேமிப்பு பகுதி உள்ளது. இங்கு வெடிமருந்து சேமிக்கப் பயன்படுத்தப்பட்டது. வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இங்கு நிலத்தடி வழியே மைசூருக்குச் செல்லும் ரகசிய சுரங்கப் பாதை உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இப்போது இது இந்தியச் சுற்றுலா அதிகாரிகளால் மூடப்பட்டுப் பூட்டப்பட்டுள்ளது.

இது ஆட்சியாளரின் முக்கிய கப்பல்துறை மற்றும் ஆயுதக் களஞ்சியமாக இருந்தது. இது ஒரு கடற்படை நிலையமாகவும் எதிரிகளின் போர்க்கப்பல்களை இடைமறிக்கவும், கப்பல்துறைக்கு வருவதைத் தடுக்கவும் சுல்தான் பயன்படுத்தியதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமானது.

ஒருவர் கண்காணிப்பு கோபுரத்தின் மேலே படிக்கட்டுகளில் ஏறினால், அரபிக் கடலின் பரந்த காட்சியினையும் மனிதனால் உருவாக்கப்பட்ட அழகின் கலவையினையும் காணலாம். காட்டுகிறது. இதன் அருகில் ஒரு சில படகு குழாம் உள்ளது; மேலும் இது சுற்றுலாப் பயணிகளை தற்பொழுது ஈர்த்து வருகிறது.

நிலவியல்[தொகு]

போலூரின் கரையோரப் பகுதியும், பொக்கபட்னாவின் தெற்குபகுதியும் மங்களூர் கிராமங்கள் என்று அழைக்கப்படுவது மிகவும் பொருத்தமானது. மங்களூர் புறநகர்ப் பகுதிகளை விட, பாரம்பரிய வாழ்க்கை முறையைப் பொறுத்தவரை, இப்பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் இப்போதும் மீன் மற்றும் வர்த்தகத்தைப் பாரம்பரிய நடவடிக்கைகளாகக் கொண்டுள்ளனர். சூரிய மறைவின் போது போக்கப்பட்னாவின் வீதிகள் பழைய கிராமத்தின் வினோதமான உணர்வைத் தருகின்றன.

போலூர், சுல்தான் பேட்டரி, நகரத்தின் மற்ற பகுதிகளுடன் பேருந்து எண் 16 மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பயண நேரம் சுமார் 15-20 நிமிடமாகும்.

இப்போது, இந்த நினைவுச்சின்னம் இந்திய அரசால் பாதுகாக்கப்படுகிறது. இதன் அனைத்து பொறுப்பும் இந்தியா பெங்களூர் வட்டத்தின் தொல்பொருள் ஆய்வுக் கழகத்தினைச் சார்ந்ததாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sultan Battery".
  2. "Metal barricade comes up around Sulthan Bathery".