உள்ளடக்கத்துக்குச் செல்

சுல்தான் அகமது இஸ்மாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்தான் அகமது இசுமாயில்
பிறப்பு9 அக்டோபர் 1951 (1951-10-09) (அகவை 72)
சென்னை, இந்தியா
வாழிடம்இந்தியா
தேசியம்இந்தியர்
துறைஉயிரித் தொழில்நுட்பம்
பணியிடங்கள்புதுக்கல்லூரி, சென்னை
கல்வி கற்ற இடங்கள்புதுக்கல்லூரி, சென்னை
அறியப்படுவதுமண்புழு தொழில் நுட்பவியல்
விருதுகள்தமிழக அரசு அறிஞர் அண்ணா விருது

சுல்தான் அகமது இஸ்மாயில் (Sultan Ahmed Ismail, பிறப்பு: அக்டோபர் 9, 1951) ஓர் இந்திய மண்ணியல் உயிரியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் அறிஞர் . ஒவ்வொரு பகுதியிலும் கிடைக்கும் மண்புழுக்களைப் பயன்படுத்தி மக்கும் கழிவுகளை மறுசுழற்சி தொழில் நுட்பங்களை மையமாகக் கொண்டு உரமாக மாற்றுவதிலும் மண் வளத்தைப் பெருக்குவதிலும் இவரது பங்களிப்பு அளவிடற்கரியது.(பயோரெமிடியேஷன் ).[1]

இஸ்மாயில் விலங்கியல் துறையில் தாம் மேற்கொண்ட மண்ணின் சூழலியல் மற்றும் கழிவு மேலாண்மையில் மண்புழுக்களின் பங்கு பற்றிய ஆராய்ச்சிக்கு 2001 இல் சென்னை பல்கலைக்கழகத்தில் அறிவியலுக்கான முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[2] இவர் சென்னையில் இயங்கும் சுற்றுச் சூழலியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ,[1]

மண்புழு தொழில் நுட்பம்

[தொகு]

இஸ்மாயில் , குழந்தைகளுக்கான ஒரு நிலையான சுற்றுச்சூழல் நடைமுறைக்காக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து, மண்புழு உரம் தயாரித்தலுக்கான கட்டகம் ஒன்றை உருவாக்கியுள்ளார். மேலும் இவர் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்காக சென்னையிலுள்ள 50 பள்ளிகளில் மண்புழு உரம் தயாரித்தல் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இது மட்டுமின்றி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 200 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு , திடக் கழிவு மேலாண்மை மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் சார்ந்த பல விரிவுரைகளை வழங்கியுள்ளார். தற்போது இவர் பினாங்கின் நுகர்வோர் சங்கத்துடன் (CAP) இணைந்து மலேஷியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் கரிம வேளாண்மை செய்யும் விவசாயிகள் இடையே கரிம வேளாண்மை , உயிர் தொழில் நுட்பவியல் மற்றும் கழிவு மேலாண்மை போன்றவை குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் முயற்சியில் , ஈடுபட்டு வருகிறார்.

மண்புழுவின் எதிர்ப்பு அழற்சி பண்புகள், பீனியல் சீட்டேவின் கட்டமைப்பு மற்றும் மின் உயிர் ஒளிர்வுத் தன்மை ஆகியவைகளிலும் இவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.

புத்தகங்கள்

[தொகு]

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Wonder worms". The Star. 23 August 2005 இம் மூலத்தில் இருந்து 16 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121016030027/http://thestar.com.my/lifestyle/story.asp?file=%2F2005%2F8%2F23%2Flifefocus%2F11025511&sec=lifefocus. பார்த்த நாள்: 15 December 2010. 
  2. "Dr. Sultan Ahmed Ismail, M.Sc., Ph.D., D, Sc, Soil biologist and ecologist". Ecoscience Research Foundation. பார்க்கப்பட்ட நாள் 19 April 2011.
  3. 3.0 3.1 "River conservation programme to be completed by September". தி இந்து. 9 June 2006 இம் மூலத்தில் இருந்து 11 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20141111112010/http://www.thehindu.com/2005/06/09/stories/2005060915030500.htm. பார்த்த நாள்: 11 November 2014.