உயிரிச்சிதைவுறு கழிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரிச்சிதைவுறு கழிவு என்பது, நுண்ணுயிரிகளின் செயற்பாட்டினால் சிதைவடையக் கூடிய கழிவுப் பொருள்களைக் குறிக்கும். இவை பொதுவாக தாவர அல்லது விலங்கு மூலங்களில் இருந்து கிடைக்கும் கழிவுகளாகும். இவ்வாறு நுண்ணுயிரிகளால் சிதைக்க முடியாத கழிவுகள் உயிரிச்சிதைவுறாக் கழிவுகள் எனப்படும். உயிரிச்சிதைவுறு கழிவுகளை நகரத் திண்மக் கழிவுகளில் காண முடியும். இது, பசுமைக் கழிவு, உணவுக் கழிவு, காகிதக் கழிவு, உயிரிச்சிதைவுறு நெகிழிகள் போன்ற வடிவங்களில் இருக்கும். இவற்றுடன், மனிதக் கழிவு, எரு, விலங்குகளை வெட்டுமிடக் கழிவுகள் போன்றவையும் உயிரிச்சிதைவுறு கழிவுகளாகும்.

பதப்படுத்தல்[தொகு]

முறையான கழிவு மேலாண்மை மூலம் உயிரிச்சிதைவுறு கழிவுகளைப் பயனுள்ள பொருட்களாக அல்லது ஆற்றலாக மாற்ற முடியும். இவ்வகைக் கழிவுகளில் இருந்து கூட்டுரம் செய்யலாம். காற்றிலாச் செரிமானம், எரியூட்டல் போன்ற கழிவிலிருந்து ஆற்றல்பெறும் வழிமுறைகளைப் பயன்படுத்தி ஆற்றலையும் உற்பத்திசெய்ய முடியும். கழிவு மேலாண்மையின் ஒரு பகுதியாக, கழிவை ஆற்றலாக மாற்றும் முறைகளைப் பயம்படுத்துவதன் மூலம், கழிவு நிரப்பிட வளிமங்கள் வெளியேறி வளிமண்டலத்தில் கலப்பதைத் தடுக்க முடியும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரிச்சிதைவுறு_கழிவு&oldid=2743186" இலிருந்து மீள்விக்கப்பட்டது