சுலாவெசி மைனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுலாவெசி மைனா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இசுடர்னிடே
பேரினம்:
பேசிலோரினிசு
இனம்:
பே. செலிபென்சிசு
இருசொற் பெயரீடு
பேசிலோரினிசு செலிபென்சிசு
கிரே, 1861

சுலாவெசி மைனா (Sulawesi myna)(பேசிலோரினிசு செலிபென்சிசு) என்பது இசுடெர்னிடே குடும்பத்தில் உள்ள மைனா சிற்றினமாகும். இது இந்தோனேசியாவின் சுலாவெசியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.

விளக்கம்[தொகு]

சுலாவெசி மைனா 23 முதல் 27 cm (9.1 முதல் 10.6 அங்) நீளம் வரை வளரும் ஒரு பறவையாகும். இது பளபளப்பான கருப்பு நிறப் பறவை. நிரந்தரமாக உயர்த்தப்பட்ட முகட்டினைத் தலைப்பகுதில் கொண்டுள்ளது. இந்த முகடு ஆண் மைனாவில் பெரியது. மைனாவின் முகம் மற்றும் தொண்டையின் பக்கங்களில் வெள்ளைத் திட்டுகள் உள்ளன. கண்ணைச் சுற்றி ஒரு நீல-கருப்பு வளையம் சிறகுகளற்று வெற்று தோலுடன் உள்ளது. அலகு வெளிர் நீல-பச்சை நிறமாகவும், கால்கள் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். இளம் பறவைகள் கடுங்கபிலை பழுப்பு நிறத்தில் இருக்கும்.[2]

இந்த மைனாவில் முணுமுணுப்புகள், உயர் தொனியுடைய சீழ்க்கை, கீச்சொலி மற்றும் மென்குரல் உள்ளிட்ட பல்வேறு ஒலிப்புகளாக உள்ளன. ஒரு அழைப்பு சீழ்க்கையினை இறங்கு வரிசையாகும், மற்றொன்று "மீயோவ்" என்று ஒலிக்கும் ஒரு இறங்கு நாசி அழைப்பாகவும் தலையை முன்னோக்கித் தள்ளும் மற்றும் பின்புற இறகுகளை உயர்த்தியபடி உச்சரிக்கப்படுகிறது.[2]

பரவழும் வாழிடமும்[தொகு]

சுலாவெசி மைனா இந்தோனேசியாவின் சுலாவெசி தீவின் மலைப்பாங்கான மாவட்டங்களின் ஈரப்பதமான காடுகளில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. இங்கே இதன் முக்கிய வாழ்விடம் காடுகளின் விளிம்புகள், வனப்பகுதியின் சிதறிய பகுதிகள் மற்றும் இரண்டாம் நிலை காடுகள் ஆகும். இருப்பினும் இது சில நேரங்களில் முதன்மை காடுகளில் காணப்படுகிறது. இது சிறிய தீவுகளான லெம்பே, மூனா மற்றும் படோன் ஆகியவற்றிலும் காணப்படும். இவை தாழ் நிலத் தீவுகள் மற்றும் பெரும்பாலும் புல்வெளி சவன்னாவில் பசுமையான காடுகளின் திட்டுகளில் காணப்படும்.[2]

நடத்தை[தொகு]

சுலாவெசி மைனா சிற்றினம் பொதுவாகக் காடுகளின் மேல்பகுதியில் அதிகமாக உணவினைத் தேடுகிறது. இது பொதுவாக இணையாகவோ அல்லது சிறிய குடும்பக் குழுவாகக் காணப்படும். ஆனால் சில நேரங்களில் தனி நபர்களைக் காணலாம். முதிர்ச்சியடையாத மைனா உமிழும்-புருவம் மைனா (எனோட்சு எரித்ரோபிரிசு) கூட்டங்களில் காணப்படும். இது பெரும்பாலும் பழம் உண்ணும் பிற பறவைகளின் குழுக்களுடன் தொடர்பு கொள்கிறது.[2]

இந்த பறவையின் இனப்பெருக்கம் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இதன் உணவில் சுமார் 44% பழங்கள் மற்றும் 52% முதுகெலும்பில்லாத விலங்குகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[3] இவை சிறிய முதுகெலும்பு உயிரிகளையும் உண்ணுகிறது. இது இடம்பெயராத இனமாகும். ஆனால் பல்வேறு வகையான மரங்களில் பழங்களைத் தேடி காடுகளைச் சுற்றி வரும்.[2]

நிலை[தொகு]

சுலாவெசி மைனா, பே. செலிபென்சிசு சுலாவெசியில் காணப்பட்டாலும், இது மிகவும் பொதுவானதாகக் கூறப்படுகிறது. மொத்த பறவைகளின் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை அல்லது எண்ணிக்கை குறித்த போக்கு அறியப்படவில்லை. ஆனால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் எந்த குறிப்பிட்ட அச்சுறுத்தல்களையும் அடையாளம் காணவில்லை என்றும் இதன் நிலையினை "தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக" செம்பட்டியலில் மதிப்பிட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2018). "Basilornis celebensis". IUCN Red List of Threatened Species 2018: e.T22710958A131960712. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22710958A131960712.en. https://www.iucnredlist.org/species/22710958/131960712. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Craig, Adrian; Feare, Chris (2010). Starlings and Mynas. Bloomsbury Publishing. பக். 134–135. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-3522-8. https://books.google.com/books?id=hpiuraQ-rfQC&pg=PA134. 
  3. Craig, A.; Feare, C. (2009). "Sulawesi crested myna". Handbook of the Birds of the World Alive. Lynx Edicions, Barcelona. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலாவெசி_மைனா&oldid=3798764" இலிருந்து மீள்விக்கப்பட்டது