சும்பி பீடபூமி
சும்பி பீடபூமி | |||||||
---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||
திபெத் தன்னாட்சிப் பகுதியில் தெற்கில் அமைந்த சும்பி பீடபூமி]] map | |||||||
சீன எழுத்துமுறை | 洞朗 | ||||||
எளிய சீனம் | 洞朗 | ||||||
|


சும்பி பீடபூமி (Chumbi Valley) (Tibetan: ཆུ་འབི, Wylie: chu vbi; சீனம்: 春丕河谷; பின்யின்: Chūnpī Hégǔ[1])பூட்டான், இந்தியாவின் சிக்கிம் மாநிலம் மற்றும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதிகளுக்கிடையே இமயமலையில் குறுகிய முக்கோண வடிவில் அமைந்துள்ளது. இப்பீடபூமி திபெத்திற்கு சொந்தமானது. இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே அமைந்த நாதூ லா கணவாய் மற்றும் ஜெலெப் கணவாய் சும்பி பீடபூமியில் அமைந்துள்ளது. சும்பி பீடபூமி, திபெத் தன்னாட்சிப் பகுதியின் யாதோங் கவுண்டியின் நிர்வாகத்தில் உள்ளது.
வரலாறு[தொகு]
சும்பி பீடபூமி 3000 மீட்டர் உயரத்தில் இமயமலையில் உள்ளது. 1904ல் பிரித்தானிய இந்தியாவின் படைகள் சும்பி பீடபூமியை திபெத்தியர்களிடமிருந்து கைப்பற்றி மூன்று ஆண்டுகள் தக்க வைத்திருந்தது.[2][3] 8 பிப்ரவரி 1908ல் பிரித்தானியர்கள், சீனாவிடமிருந்து நட்ட ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டு, சும்பி பீடபூமியை சீனர்களிடம் வழங்கினர். [4]
பிணக்கு[தொகு]
தற்போது சும்பி பீடபூமியின் தென்கிழக்கில் பூட்டான் நாட்டிற்கு சொந்தமான டோக்லாம் பகுதியில், சூன், 2017ல் சீன இராணுவம் சாலைகள், கட்டிடங்கள் அமைப்பதை, பூட்டானும், இந்தியாவும் எதிர்ப்பதால் டோக்லாம் பிணக்கு ஏற்பட்டுள்ளது. [5] [6]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 春丕 (Chumbi) on Baidu.com
- ↑ "Glossary of Tibetan Terms" இம் மூலத்தில் இருந்து 2008-07-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080701071820/http://tibet.prm.ox.ac.uk/glossary.php.
- ↑ Tibet and Francis Younghusband
- ↑ East India (Tibet): Papers Relating to Tibet [and Further Papers ..., Issues 2-4,p. 143
- ↑ China's Chumbi Valley Shenanigans India Must Act Tough
- ↑ இந்தியா-சீனா பதற்றத்தின் பின்னணி என்ன?
வெளி இணைப்புகள்[தொகு]