உள்ளடக்கத்துக்குச் செல்

சுனில் குமார் (பீகார்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனில் குமார்
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2005
முன்னையவர்செய்யது நவுசத்துன்னாபாய்
தொகுதிபிஹார்சரீப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 சனவரி 1957 (1957-01-20) (அகவை 67)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
(2015-முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய ஜனதா தளம்
(2015 வரை)
வேலைஅரசியல்வாதி

சுனில் குமார் (Sunil Kumar)(பிறப்பு 20 சனவரி 1957) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் நான்கு முறை பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் பீகார் சட்டப் பேரவையில் தற்போது பிஹார்சரீப் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் உள்ளார்.[1][2][3] இவர் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக முதன் முதலாக நாலந்தா மாவட்டத்தில் உள்ள பிஹார்சரீப் தொகுதியில் போட்டியிட்டு இராச்டிரிய ஜனதா தளத் தலைவர் சையத் நௌஷாதுன்னபி என்கிற பப்பு கானை தோற்கடித்தார். குமார் 2005 மற்றும் 2010 சட்டமன்றத் தேர்தல்களில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 இந்தியப் பொதுத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் குழுவில் நரேந்திர மோதியை முன்னிலைப்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பீகாரில் பாஜகவுடனான தனது 17 ஆண்டுக்கால கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்டபோது, சூன் 2013-ல் பாஜகவில் சேர்ந்தார். 2015 மற்றும் 2020 சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[4][5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "BIHAR VIDHAN SABHA/Know your MLA". vidhansabha.bih.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-04-26.
  2. "Dr.Sunil Kumar(Bharatiya Janata Party(BJP)):Constituency- BIHARSHARIF(NALANDA) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2020-04-26.
  3. Desk, India com News (2015-11-08). "Bihar Election Results 2015: List of winning candidates". India News, Breaking News, Entertainment News | India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-26.
  4. "बिहारशरीफ के 'लापता' विधायक की तलाश के लिए लगे पोस्टर.. समर्थकों ने दिया जवाब". Nalanda Live (in இந்தி). 2020-01-17. பார்க்கப்பட்ட நாள் 2020-04-26.
  5. "MLA goes behind camera to focus on social issues - Sunil Kumar, a Dal legislator, has produced three Bhojpuri films, his latest venture set to release on June 10". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-26.
  6. "In Bihar Sharif, Nitish's grand alliance faces JD(U), RJD rebels — and fears ahead of festivals". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-10-23. பார்க்கப்பட்ட நாள் 2020-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_குமார்_(பீகார்)&oldid=3497556" இலிருந்து மீள்விக்கப்பட்டது