சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்சு | |
---|---|
2018இல் சுனிதா | |
நாசா விண்வெளி வீரர் | |
பிறப்பு | சுனிதா லின் பாண்டியா செப்டம்பர் 19, 1965 யூக்லிட், ஒகையோ, அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
Other names | சோன்கா |
தரம் | தளபதி, ஐக்கிய அமெரிக்கக் கடற்படை |
விண்வெளி நேரம் | வார்ப்புரு:Time in space |
தெரிவு | நாசா குழு 17 (1998)]] |
மொத்த விண்வெளி நடைகள் | 7 |
மொத்த நடை நேரம் | 50 மணி நேரம், 40 நிமிடங்கள் |
பயணங்கள் | எஸ்டிஎஸ்-116/எஸ்டிஎஸ்-117 |
திட்டச் சின்னம் |
சுனிதா லின் "சுனி" வில்லியம்சு (Sunita Lyn "Suni" Williams) (பிறப்பு:செப்டம்பர் 19,1965) அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையும், ஓய்வுபெற்ற ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அதிகாரியும் ஆவார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை இவர் கொண்டுள்ளார் (ஏழு முறை 50 மணி நேரம், 40 நிமிடங்கள்)[1][2][3][4][5] இவர் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு 14ம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார். பின்னர் 15ம் விண்வெளி பயணத்தில் இணைந்தார். 2012 ஆம் ஆண்டில், 32ம் விண்வெளி பயணத்தில் விமான பொறியாளராகவும், பின்னர் 33ம் விண்வெளி பயணத்தில் தலைவராகவும் பணியாற்றினார். 2024 ஆம் ஆண்டில், போயிங் இசுடார்லைனர் மூலம் அனைத்துலக விண்வெளி நிலையம் சென்ற இவரது முதல் பணிக்குழுவில் சென்றார். சுனிதாவும் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் பல்வேறு அறிவியல் சோதனைகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.[6] இவர் பூமிக்கு திரும்பும் காலம் நெருங்கினாலும், தொழில்நுட்பக் காரணங்களால் டிசம்பர் 2024 வரை திரும்ப இயலவில்லை. பெப்பிரவரி 2025இல் இவர் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இளமை வாழ்க்கை
[தொகு]சுனிதா இந்தியத் தந்தைக்கும், சுலொவீனியத் தாய்க்கும் ஒகையோவின் யூக்லிட்டில் பிறந்தார். ஆனால் மாசச்சூசெட்சிலுள்ள நீட்காமை தனது சொந்த ஊராகக் கருதுகிறார்.[7] இவரது தந்தை தீபக் பாண்டியா, குசராத்தின் மெக்சனா மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய-அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஆவார். அதே நேரத்தில் இவரது தாயார் உர்சுலின் போனி பாண்டியா சுலோவீனிய-அமெரிக்கர் ஆவார். சுனிதா தனது இந்திய மற்றும் சுலொவீனிய பாரம்பரியத்தை கொண்டாடுவதற்காக சுலோவீனிய நாட்டின் தேசியக் கொடி,[8] பகவத் கீதை, பிள்ளையார் படம் மற்றும் சில சமோசாக்கள் இருந்தன. அமெரிக்காவில் இவரது புனைப்பெயர் சுனி என்றும் சுலெவீனியாவில் சோன்கா எனவும் அறியப்படுகிறது.[9]
சுனிதா 1983 இல் நீட்காம் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1983 இல் தேர்ச்சி பெற்றார். அதனைத் தொடர்ந்து 1987 இல் அமெரிக்க கப்பற்படை அகாதமியிலிருந்து அறிவியலில் இளங்கலைப் பட்டத்தை பெற்றார். 1995 ஆம் ஆண்டில் புளோரிடா தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுகலை அறிவியல் பட்டத்தையும் பெற்றார்.[10]
ஈராணுவ சேவை
[தொகு]1987 மே மாதம், ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் இளநிலை அதிகாரியாக பணி புரியும் வாய்ப்பை சுனிதா பெற்றார். அடுத்ததாக கடற்படை விமானியாகப் பயிற்சி பெற்ற இவர் ஜூலை 1989 இல் கப்பல்படை விமானியாக நியமிக்கப்பட்ட இவர், கப்பல்படையின் சோதனை பைலட் பள்ளியில் 1993 இல் பட்டம் பெற்றார். ஒரு விமானியாக வளைகுடாப் போரில் பங்கேற்றார். 1992 செப்டம்பரில், புளோரிடாவைத் தாக்கிய ஆண்ட்ரூ சூறாவளி நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.[10]
1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாசா விண்வெளி திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10] இவர் 30 க்கும் மேற்பட்ட விமான வகைகளில் 3,000 க்கும் மேற்பட்ட விமான நேரங்களில் பறந்துள்ளார்.[11] பின்னர், சுனிதா வில்லியம்சு 2017 இல் கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றார்.[12]
நாசாவில் தொழில் வாழ்க்கை
[தொகு]சுனிதா வில்லியம்சு ஆகஸ்ட் 1998 இல் ஜான்சன் விண்வெளி மையத்தில் தனது விண்வெளி வீரர் பயிற்சியைத் தொடங்கினார்.[10]
14ம் விண்வெளி பயணக் குழுவில் சேர டிசம்பர் 9,2006 அன்று டிஸ்கவரி விண்ணோடத்தின் மூலம் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்சு அனுப்பப்பட்டார். ஏப்ரல் 2007 இல், உருசியக் குழுவினர் சுழற்சி செய்யப்பட்டனர்.
விண்வெளிக்கு சென்ற பிறகு, தனது குதிரைவால் முடியை லாக்ஸ் ஆஃப் லவ் நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்தார். சக விண்வெளி வீரர் ஜோன் ஹிக்ஜின்போதம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இவரது தலைமுடியை வெட்டினார். அது எஸ்டிஎஸ்-116 குழுவினரால் மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்பட்டது.[13]
மூன்றாவது விண்வெளி நடைப்பயணத்தில், இவர் ஒன்பது நாட்களில் மூன்று விண்வெளி நடைபயணங்களை முடிக்க 6 மணி 40 நிமிடங்கள் நிலையத்திற்கு வெளியே இருந்தார். 2007 ஆம் ஆண்டில், இவர் நான்கு விண்வெளி நடைப்பயணங்களில் 29 மணி 17 நிமிடங்கள் பதிவு செய்தார், இதற்கு முன்பு ஒரு பெண் விண்வெளியில் அதிக நேரம் நடந்து சென்ற கேத்ரின் சி. தோர்ன்டன் சாதனையை முறியடித்தார்.[10][5] டிசம்பர் 18,2007 அன்று, நான்காவது விண்வெளி நடைப்பயணத்தின் போது, பெக்கி விட்சன் 32 மணி நேரம், 36 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து சுனிதா வில்லியம்சை விஞ்சினார். [14][15]
விண்வெளியில் மாரத்தான்
[தொகு]ஏப்ரல் 16,2007 அன்று, விண்வெளியில் முதன்முதலில் மராத்தான் ஓடினார்.[16] 4 மணி 24 நிமிடங்களில் இலக்கினை அடைந்தார்.[17][18][19]
நவம்பர் 19,2012 அன்று சக விண்வெளி வீரர்களான யூரி மாலென்செங்கோ மற்றும் அகிஹிகோ ஹோஷிடே ஆகியோருடன் சுனிதா பூமிக்குத் திரும்பினார். இவர்களது விண்வெளி திட்டமிடப்பட்ட இடத்திலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் உள்ள கஜகஸ்தானின் அர்காலிக் நகரில் தரையிறங்கியது.[20]
வணிகக் குழு திட்டம்
[தொகு]ஜூலை 2015 இல், அமெரிக்க வணிக விண்வெளி பயணங்களுக்கான முதல் விண்வெளி வீரர்களில் ஒருவராக வில்லியம்சை நாசா அறிவித்தது.[21] அதைத் தொடர்ந்து, போயிங் மற்றும் எசுபேசுஎக்சு நிறுவனங்களுடன் இணைந்து அவர்களின் வணிகக் குழு வாகனங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற விண்வெளி வீரர்களுடன் பயிற்சி பெறத் தொடங்கினார். ஆகஸ்ட் 2018 இல் போயிங் சிஎஸ்டி-100 ஸ்டார்லைனரின் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு முதல் செயல்பாட்டு பணி விமானத்திற்கு (ஸ்டார்லைனர்-1) இவர் நியமிக்கப்பட்டார்.[22] [23] ஜூன் 16,2022 அன்று, வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்சு அடங்கிய இரண்டு நபர்கள் கொண்ட பயணமாக இருக்கும் என்பதை நாசா உறுதிப்படுத்தியது.[24] ஜூன் 5,2024 அன்று, வில்லியம்சு விண்கலத்தின் விமானியாக சுனிதா சுற்றுப்பாதையில் சென்றபோது, சுற்றுப்பாதை விண்கலத்தின் பறக்கும் சோதனையில் பறந்த முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.[25]
17 ஆகஸ்ட் 2024 நிலவரப்படி, போயிங் ஸ்டார்லைனரின் சேவை தொகுதியின் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக சக விண்வெளி வீரர் பாரி வில்மோருடன் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் சுனிதா சிக்கிக்கொண்டார்.[26] பிப்ரவரி 2025இல் தரையிறங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விண்வெளி நடைப்பயணங்கள்
[தொகு]ஆகஸ்ட் நிலவரப்படி, சுனிதா வில்லியம்சு மொத்தம் 50 மணி 40 நிமிடங்கள் ஏழு விண்வெளி நடைப்பயணங்களை மேற்கொண்டார், அந்த நேரத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த விண்வெளி நடைபயணிகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.[27][28] ஆகஸ்ட் 30,2012 அன்று, இவரும் விண்வெளி வீரர் அகிஹிகோ ஹோஷிடே ஆகியோர் அனைத்துலக விண்வெளி ஓடத்துக்கு வெளியே வர முயன்றனர். ஆனால் அதில் தோல்வியடைந்தனர்.[29][30]
சொந்த வாழ்க்கை
[தொகு]சுனிதா வில்லியம்சு மைக்கேல் வில்லியம்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. சுனிதா இந்து மதத்தை பின்பற்றுகிறார். டிசம்பர் 2006 இல், பகவத் கீதையின் நகலை அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு எடுத்துச் சென்றார். ஜூலை 2012 இல், ஓம் சின்னத்தையும் உபநிடதங்களின் நகலையும் அங்கு எடுத்துச் சென்றார்.[31] செப்டம்பர் 2007 இல், சுனிதா சபர்மதி ஆசிரமத்திற்கும் அவரது மூதாதையர் கிராமமான ஜுலாசானுக்கும் சென்றார். உலக குசராத்தி சங்கத்தால் வல்லபாய் படேல் பெயரால் வழங்கப்படும் விஸ்வ பிரதிபா விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கப்பட்ட இந்திய குடிமகன் அல்லாத இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் ஆவார்.[32] அக்டோபர் 4,2007 அன்று, அமெரிக்க தூதரகப் பள்ளியில் பேசினார். பின்னர் அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தார்.[33]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Astronaut Biography: Sunita Williams". SpaceFacts.de. Archived from the original on April 30, 2024. பார்க்கப்பட்ட நாள் August 25, 2024.
- ↑ "Astronaut Biography" (PDF). National Aeronautics and Space Administration. Houston, Texas. August 2018.
- ↑ Garcia, Mark. "Peggy Whitson Breaks Spacewalking Record". NASA blog. NASA. Archived from the original on May 21, 2017. பார்க்கப்பட்ட நாள் March 30, 2017.
- ↑ NASA (2007). "Sunita L. Williams (Commander, USN)" (PDF). நாசா. பார்க்கப்பட்ட நாள் December 19, 2007.
- ↑ 5.0 5.1 Tariq Malik (2007). "Orbital Champ: ISS Astronaut Sets New U.S. Spacewalk Record". Space.com. பார்க்கப்பட்ட நாள் December 19, 2007.
- ↑ "What will Sunita Williams and Butch Wilmore do till February 2025 in space?". Times Now. August 22, 2024. https://www.timesnownews.com/world/what-will-sunita-williams-and-butch-wilmore-do-till-february-2025-in-space-article-112795393.
- ↑ "Sunita L. Williams - NASA" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் June 29, 2024.
- ↑ Hanc, Marjana (June 6, 2014). "Slovenska zastava je v vesolju 2032-krat obkrožila Zemljo" (in sl). Delo. https://old.delo.si/55let/slovenska-zastava-je-v-vesolju-2032-krat-obkrozila-zemljo.html.
- ↑ "Sunita Williams: Najljubša mi je Zemlja, ker je na njej Slovenija" (in sl). Žurnal24.si. April 18, 2021. https://www.zurnal24.si/gorenjska/sunita-williams-najljubsi-mi-je-planet-zemlja-ker-je-na-njej-slovenija-365363.
- ↑ 10.0 10.1 10.2 10.3 10.4 NASA (2007). "Sunita L. Williams (Commander, USN)" (PDF). National Aeronautics and Space Administration. பார்க்கப்பட்ட நாள் December 19, 2007.
- ↑ "SpaceShipOne Flight Logs". World Spaceflight. பார்க்கப்பட்ட நாள் December 18, 2017.
- ↑ "America250: Navy Veteran Sunita Williams". VA News. May 5, 2022. பார்க்கப்பட்ட நாள் August 26, 2024.
- ↑ CollectSpace.com (December 20, 2006). "Astronaut cuts her hair in space for charity". CollectSpace.com. பார்க்கப்பட்ட நாள் June 8, 2007.
- ↑ CollectSpace (2007). "Astronauts make 100th station spacewalk". CollectSpace. பார்க்கப்பட்ட நாள் December 18, 2007.
- ↑ NASA (2007). "Spacewalkers Find No Solar Wing Smoking Gun". NASA. பார்க்கப்பட்ட நாள் December 18, 2007.
- ↑ Eldora Valentine (April 6, 2007). "Race From Space Coincides with Race on Earth". NASA. பார்க்கப்பட்ட நாள் June 8, 2007.
- ↑ "Sunita Williams Runs Marathon in Space". Zee News Limited. April 17, 2007. பார்க்கப்பட்ட நாள் June 8, 2007.
- ↑ Jimmy Golen for அசோசியேட்டட் பிரெசு (2007). "Astronaut to run Boston Marathon — in space". NBC News. Archived from the original on January 4, 2014. பார்க்கப்பட்ட நாள் December 19, 2007.
- ↑ NASA (2007). "NASA Astronaut to Run Boston Marathon in Space". NASA. பார்க்கப்பட்ட நாள் December 19, 2007.
- ↑ "Sunita Williams returns to Earth after 4 months in space". India Today. November 19, 2012.
- ↑ NASA (July 9, 2015). "NASA Selects Astronauts for First U.S. Commercial Spaceflights". nasa.gov.
- ↑ "NASA Assigns Crews to First Test Flights, Missions on Commercial Spacecraft". NASA. August 3, 2018. பார்க்கப்பட்ட நாள் August 4, 2018.
- ↑ Clark, Stephen. "Starliner astronauts eager to see results of crew capsule test flight – Spaceflight Now" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் May 19, 2022.
- ↑ Potter, Sean (June 16, 2022). "NASA Updates Astronaut Assignments for Boeing Starliner Test Flight". NASA. பார்க்கப்பட்ட நாள் June 17, 2022.
- ↑ Axios (June 5, 2024). "Boeing's Starliner reaches orbit in first crewed mission to ISS". axios.com.
- ↑ Agius, Matthew Ward (August 16, 2024). "What must NASA decide in order to bring its astronauts home?". Deutsche Welle. பார்க்கப்பட்ட நாள் August 25, 2024.
- ↑ NASA (September 6, 2012). "Williams, Hoshide Complete MBSU Installation". nasa.gov. பார்க்கப்பட்ட நாள் September 7, 2012.
- ↑ William Harwood (November 1, 2012). "Astronauts bypass station cooling system on spacewalk". பார்க்கப்பட்ட நாள் November 4, 2012.
- ↑ Pete Harding, Chris Bergin and William Graham (July 14, 2012). "Soyuz TMA-05M launches trio to the International Space Station". NASAspaceflight.com. பார்க்கப்பட்ட நாள் July 18, 2012.
- ↑ "'My Body Has Changed': Sunita Williams shares latest health update and changes she is experiencing after months in space". The Economic Times. 2024-11-14. https://economictimes.indiatimes.com/news/international/global-trends/my-body-has-changed-sunita-williams-shares-latest-health-update-and-changes-she-is-experiencing-after-months-in-space/articleshow/115287249.cms?from=mdr.
- ↑ "Sunita Williams sends out Diwali greetings from space". TIMES NOW. November 14, 2012 இம் மூலத்தில் இருந்து March 31, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210331134828/https://www.youtube.com/watch?v=W9PF9qiOITw.
- ↑ "Sunita Williams". Archived from the original on January 22, 2013. பார்க்கப்பட்ட நாள் May 24, 2012.
- ↑ American Embassy School (October 5, 2007). "Astronaut Sunita Williams Visits AES". American Embassy School. Archived from the original on October 11, 2007. பார்க்கப்பட்ட நாள் October 7, 2007.
வெளி இணைப்புகள்
[தொகு]- NASA biography of Sunita Williams
- Departing Space Station Commander Sunita Williams Provides Tour of Orbital Laboratory (YouTube) November 2012
- Appearances on C-SPAN
- Sunita Williams on டுவிட்டர்