சுனந்தா பட்நாயக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனந்தா பட்நாயக்
SunandaPatnaik.JPG
பின்னணித் தகவல்கள்
பிறப்புநவம்பர் 7, 1934(1934-11-07)
பிறப்பிடம்பூரி, ஒடிசா, இந்தியா[1]
இறப்பு19 சனவரி 2020(2020-01-19) (அகவை 85)
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)பாடகா், இசையமைப்பாளர்
மே 2012, புதுதில்லியில் சுனந்தா பட்நாயக் நிகழ்ச்சி

சுனந்தா பட்நாயக் (7 நவம்பர் 1934 - 19 ஜனவரி 2020) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் குவாலியர் கரானாவைச் சோ்ந்த இந்திய பாரம்பரிய இசைப் பாடகா் ஆவாா். [2] "குருமா" என்று பிரபலமாக அறியப்பட்ட அவர், [3] இந்துஸ்தானி இசையின் மகத்தான நபா்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். [4] [5]

இசை வாழ்க்கை[தொகு]

இவர் ஒடியா மொழிக் கவிஞர் பைகுந்தநாத் பட்நாயக்கின் மகள் ஆவாா். 1948 ஆம் ஆண்டு தனது 14 ஆம் வயதில் கட்டக்கில் உள்ள அகில இந்திய வானொலியில் பாடத் தொடங்கினார். அப்போதைய ஒடிசா ஆளுநர் அசாஃப் அலி ஒருமுறை வானொலியில் இவருடைய பாடலால் மிகவும் ஈர்க்கப்பட்டார். ஆளுநர் மாளிகைக்கு விருந்தினர்கள் வரும்போதெல்லாம் இவருடைய பாடல் நிகழ்ச்சிகள் ராஜ் பவனின் (ஆளுநா் மாளிகை) ஒரு வழக்கமான அங்கமாக ஆனது. ஒருமுறை, ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பூரியில் சுனந்தாவிக் பாடலை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது சுனந்தாவின் பாடலால் மிகவும் ஈர்க்கப்பட்ட அவர், புனேவில் பண்டிட் விநாயக் ராவ் பட்டவர்தனின் கீழ் உதவித்தொகையுடன் பிலத்யேகப் பயிற்சியை ஏற்பாடு செய்தார். 1956 இல் புனே பள்ளியில் இசையில் முதுநிலைப் பட்டம் பெற்றார். செப்டம்பர் 1957 இல் கல்கத்தாவில் உள்ள அகில இந்திய சத்ரங் சாகித் சம்மேளனத்தில் இவர் 13 தங்கக் காசுகளை வென்றார்.அதன் பின்னர் அவர் இந்தியாவில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியது மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் நன்கு அறியப்பட்டார். அவர் அதிக வேகத்தில் பாடும் இந்துஸ்தானி பாணி தாரனாவுக்கு மிகவும் பிரபலமாகத் திகழ்ந்தார். ஒடிஸி இசையின் சிறந்த சமகால மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவராக கருதப்பட்ட இவர் 1983 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தாவில் தங்கியிருந்தார். [6] 2020 ஆம் ஆண்டு சனவாி மாதம் 19 ஆம் தேதி ஞாயிறு அன்று அதிகாலை தனது 85 வது வயதில் கொல்கத்தாவில் காலமானார். அவரது மரணத்திற்கு ஒடிசா முதலமைச்சா் நவீன் பட்நாயக் மற்றும் மத்திய அமைச்சா் தர்மேந்திர பிரதான் ஆகியோர் தங்களது இரங்கல்களை தெரிவித்திருந்தார்கள்.[7]

விருதுகள்[தொகு]

அவர் 1970 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் ஒடிசா மாநிலத்தின் சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார். 2009 ஆம் ஆண்டில் இந்திய வாழ்நாள் சாதனையாளர் விருதையும், 2012 ஆம் ஆண்டில் தி ஒரிசா சொசைட்டி ஆஃப் தி அமெரிக்காஸ் (ஓஎஸ்ஏ) என்ற அமைப்பால் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றார். அவர் 2012 ஆம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாடமி விருதை (தாகூர் அகாடமி புராஸ்கர்) பெற்றவர். 1999 ஆம் ஆண்டு உத்கல் பல்கலைக்கழகத்தால் இலக்கியத்துக்கான கௌரவ டாக்டா் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது மேலும், இசைக்கான கௌரவ டாக்டா் பட்டம் 1975 ஆம் ஆண்டு அகில் பாரதிய காந்தர்வ மகாவித்யாலய மண்டலத்தால் வழங்கப்பட்டது.

ஆவணப்படம்[தொகு]

சுனந்தாவைப் பற்றி எடுக்கப்பட்ட நிலமாதாபா என்ற ஆவணப்படத்தற்கு தேசிய திரைப்பட விருது. கிடைத்தது. ஸ்ரீ திலீப் பட்நாயக் இயக்கி இருந்த இப்படத்தை பிலிம்ஸ் பிரிவு தயாரித்தது. இது இந்தியாவின் 58 வது தேசிய திரைப்பட விருதுகளில் 2010 ஆம் ஆண்டிற்கான " சிறந்த வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் " என்ற பிரிவில் விருதினை வென்றது . [8]

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனந்தா_பட்நாயக்&oldid=2939702" இருந்து மீள்விக்கப்பட்டது