உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசப் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசப் அலி, 1909

ஆசப் அலி (11 மே 1888 [1] - 2 ஏப்ரல் 1953) ஒரு இந்திய சுதந்திரப் போராளி மற்றும் பிரபல இந்திய வழக்கறிஞர். இவர் இரவீந்திரநாத் தாகூரின் சொந்தக்காரர்.

கல்வி[தொகு]

இவர் இவர் தில்லி புனித ஸ்டீவன் கல்லூரியில் கல்வி கற்றவர். இங்கிலாந்தில் உள்ள லிங்கன் சட்டக்கல்லூரியில் இருந்து சட்டம் பயில அழைக்கப்பட்டார்.

சுதந்திரத்திற்க்கு முன் பதவியில்[தொகு]

 • முஸ்லீம் தேசியவாதக் கட்சியின் உறுப்பினராக 1935 இல் மத்திய சட்டமன்றத்திற்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முஸ்லீம் லீக் வேட்பாளருக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், மத்திய சட்டமன்ற துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

இவர் பகத் சிங் மற்றும் பாதுகேஷ்வர் தத் ஆகியோருக்காக வாதாடியது குறிப்பிடத்தக்கது.[2]

 • 1946 செப்டம்பர் 2 முதல் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய இடைக்கால அரசாங்கத்தில் ரயில்வே மற்றும் போக்குவரத்து துறைக்கான பொறுப்பாளராக இருந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில்[தொகு]

 • 1942 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நடைபெற்ற [ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கத்தில்]] பங்குபெற்றமையால் பல முறை சிறைசென்றார். .[3]
 • ஜவஹர்லால் நேரு மற்றும் காங்கிரஸ் செயற்குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் அகமதுநகர் கோட்டை சிறையில் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.[4]

சுதந்திரத்திற்க்குப்பின் பதவியில்[தொகு]

 • சுதந்திரத்திற்க்குப்பின் ஒரிசா மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றியிருக்கிறார்.
 • பிப்ரவரி 1947 முதல் ஏப்ரல் 1947 வரை அமெரிக்காவிற்கான முதல் இந்தியத் தூதராக பணியாற்றினார்.

திருமணம்[தொகு]

1928 ஆம் ஆண்டு அருணா கங்குலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அருணா இவரை விட 22 வயது இளையவர் ஆவார்.

இறப்பு[தொகு]

ஏப்ரல் 2, 1953 அன்று சுவிட்சர்லாந்திற்கான இந்தியாவின் தூதராக பணியாற்றியபோது பெர்ன் நகரில் இறந்தார். [5]

 • 1989 ஆம் ஆண்டில், இந்தியா அரசு அவரது நினைவு தபால் தலையினை வெளியிட்டது. [4]
 • அவரது மனைவி அருணா ஆசப் அலிக்கு இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் விருதான பாரத ரத்னா வழங்கி கவுரவிக்கப்பட்டார். [6]

மேற்கோள்கள்[தொகு]

 1. M. Asaf Ali | Making Britain. Open.ac.uk. Retrieved on 7 December 2018.
 2. Historical Trials (2008). "The Trial of Bhagat Singh". India Law Journal 1 (3). http://www.indialawjournal.org/archives/volume1/issue_3/bhagat_singh.html. 
 3. Lawyers in the Indian Freedom Movement « The Bar Council of India. Barcouncilofindia.org. Retrieved on 7 December 2018.
 4. 4.0 4.1 Asaf Ali. Indianpost.com (2 April 1953). Retrieved on 2018-12-07.
 5. "Asaf Ali Dead". The Indian Express. 3 April 1953. https://news.google.com/newspapers?id=OMY-AAAAIBAJ&sjid=gEwMAAAAIBAJ&pg=5459%2C1768857. பார்த்த நாள்: 18 July 2018. 
 6. Aruna Asaf Ali's 20th death anniversary: Some facts about the Grand Old Lady of Independence – Education Today News பரணிடப்பட்டது 2017-12-11 at the வந்தவழி இயந்திரம். Indiatoday.intoday.in (29 July 2016). Retrieved on 2018-12-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசப்_அலி&oldid=3878665" இலிருந்து மீள்விக்கப்பட்டது