சுடாங்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுடாங்பா
அகோம் இராச்சியத்தின் சாவ்பா
அகோம் அரசர்
ஆட்சிக்காலம்கி.பி. 1397 முதல் 1407 வரை
முன்னையவர்டயோ காம்டி
பின்னையவர்சஜங்பா
பிறப்புஅகோம் இராச்சியம்
இறப்புஅண். 1407
அகோம் இராச்சியம்
அரசமரபுஅகோம் வம்சம்
தந்தைடயோ காம்டி
மதம்அகோம் மதம்

சுடாங்பா (Sudangphaa) (1397-1407) அகோம் இராச்சியத்தின் அரசராவார். பிராமணர் வீட்டில் வளர்ந்ததால் இவர் பாமுனி கோன்வர் (பிராமண இளவரசன்) என்று பிரபலமாக அறியப்பட்டார். [1] [2] அகோம் வம்சத்தில் இந்து மதத்தின் வளர்ச்சியின் முதல் கட்டத்தை இவரது ஆட்சி குறிக்கிறது. [3] அகோம் மன்னர்களின் சிங்காரிகருத விழாவை (முடிசூட்டு விழா) இவர் தொடங்கினார். இது இவரது வாரிசுகளால் பின்பற்றப்பட்டது. [4]

பத்து வருட ஆட்சிக்குப் பிறகு 1407 இல் சுடாங்பா இறந்தார். அசாமின் வரலாறு பற்றிய தனது படைப்பில், குணவீரம் பருவா என்ற வரலாற்றாசிரியர், அரசர் தனது பெரும்பாலான நேரத்தை இன்பத்தில் மூழ்கடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதுவே இவரது இளம் வயது மறைவுக்குக் காரணம் என அறியப்படுகிறது. [5] ஆனால் பழைய அகோம் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லாததால் இதன் துல்லியம் சந்தேகத்திற்குரியது. மறுபுறம், இவர் இளமையாகவும் ஆற்றல் மிக்கவராகவும் விவரிக்கப்பட்டார். இவரது தசாப்த கால ஆட்சியின் போது, உள் மற்றும் வெளிப்புற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார். சுடாங்பா அகோம் சமூகத்தினரிடையே இந்து மதத்தின் மதப் பழக்கவழக்கங்களையும் அறிமுகப்படுத்தினார். அகோம் மன்னர்களின் சிங்காரிகருத நடைமுறையும் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அசாமில் அகோம் மேலாதிக்கம் முடியும் வரை இவரது வாரிசுகளால் பின்பற்றப்பட்டது.[6] [7]

இதனையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  • Barbaruah, Hiteswar (1981) (in Assamese). Ahomar-Din or A History of Assam under the Ahoms (1 ). Guwahati: Publication Board of Assam. 
  • Barua, Gunaviram (2008). Assam Buranji or A History of Assam (4 ). Guwahati: Publication Board of Assam. 
  • Gait, E A (1926). A History of Assam (2 ). Calcutta: Thackar, Spink and Co. 
  • Guha, Amalendu (1983). The Ahom Political System: An Enquiry into the State Formation Process in Medieval Assam (1228-1714). 
  • Guha, Amalendu (1984). Pre-Ahom Roots and the Medieval State in Assam: A Reply. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுடாங்பா&oldid=3786638" இலிருந்து மீள்விக்கப்பட்டது