சுகபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகபா
சுகபாவின் உத்தேச ஓவியம்[1]
அகோம் பேரரசை நிறுவியர்
ஆட்சிக்காலம்1228–1268[2]
பின்னையவர்சுதேபா
பிறப்பு1189
மோங் மாவ்
இறப்பு1268 (aged 78-79)
சராய்தியோ, அகோம் பேரரசு (தற்போதைய இந்தியா)
புதைத்த இடம்
சராய்தியோ
குழந்தைகளின்
பெயர்கள்
சுதேபா
பெயர்கள்
சுகபா
மரபுசு வம்சம் (புலி) அகோம் வம்சம்
தந்தைசாவ் சாங்-நியூ
தாய்பிளக் காம் சென்
மதம்அகோம் சமயம்

சுகபா (Sukaphaa) ( ஆட்சி|1228 ), (மேலும் சியு-கா-பா, [3] எனவும் அழைக்கப்படுபவர்) இடைக்கால அசாமின் முதல் அகோம் அரசராவார். இவர் அகோம் இராச்சியத்தை நிறுவியவர். மேலும், அசாமின் கட்டிடக் கலைஞரும் ஆவார். மாவோ-ஷான் துணைப் பழங்குடியினரின் சு/ட்சு (புலி) குலத்தின் இளவரசர் [4] பூர்வீகம் இன்றைய மோங் மாவோ, யுன்னான் மாகாணம், சீனா, அவர் 1228 இல் நிறுவிய இராச்சியம் கிட்டத்தட்ட [5] 600 ஆண்டுகள் நீடித்தது. மேலும், செயல்பாட்டில் பிராந்தியத்தின் பல்வேறு இனக்குழுக்களை ஒன்றிணைத்தது. இது பிராந்தியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அசாமின் வரலாற்றில் இவரது பதவிக்கு மரியாதை செலுத்தும் வகையில் மரியாதைக்குரிய சாவ்லங் என அழைக்கப்பட்டார்..

1268 இல் சுகபா இறக்கும் போது, இவரது இராச்சியம் மேற்கில் பிரம்மபுத்திரா நதி, வடக்கே திசாங் ஆறு வரை பரவியிருந்தது.

அசாம் தினம்[தொகு]

1996 ஆம் ஆண்டு முதல் அசாமில் டிசம்பர் 2 ஆம் தேதி சுகபா திவாஸ் அல்லது ஆக்சோம் திவாஸ் (அசாம் தினம்) என கொண்டாடப்படுகிறது, அசாமில் அகோம் இராச்சியத்தின் முதல் மன்னன் பட்காய் மலைகள் மீது பயணம் செய்த நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.[6]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Yasmin Saikia (2004), Fragmented memories : struggling to be Tai-Ahom in India. பக். 242-3. https://archive.org/details/fragmentedmemori0000saik/page/242/mode/2up. 
  2. (Baruah 1986, ப. 661)
  3. "...the advance of the Tais under Sukapha (Siu-Ka-Pha) was a historical fact and is well documented by records and traditions."
  4. "The choice fell on him not only for his qualities as a military leader, but also for his privileged birth in the Chao-pha (noble-celestial) or royal clan from which alone a Tai segmentary society could customarily choose its chief.
  5. "...it is not until Sukapha became king in 1228 AD.
  6. "Gogoi inaugurates Sukapha Samannay Kshetra in Jorhat". Assam Tribune.

26°42′58″N 94°04′42″E / 26.7161399°N 94.0782113°E / 26.7161399; 94.0782113

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகபா&oldid=3786637" இலிருந்து மீள்விக்கப்பட்டது