சுசா குமார்
சுசா குமார் | |
---|---|
பிறப்பு | சுசா குமார் 16 செப்டம்பர் 1993 சென்னை, தமிழ்நாடு இந்தியா |
பணி | நடிகை, விளம்பரப்பெண் |
செயற்பாட்டுக் காலம் | 2013 ம் ஆண்டு முதல் |
சுசா குமார், இந்தியாவின், தமிழ்நாட்டைச் சேர்ந்த விளம்பரப்பெண் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் இளம் நடிகையாவார்.
16 செப்டம்பர் 1992 அன்று இந்தியாவின் சென்னையில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பை சென்னை எஸ்பிஓஏ மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் பட்டப்படிப்பை சென்னையில் உள்ள எஸ்பிஓஏ ஜூனியர் கல்லூரியிலும் படித்து முடித்தார், பின்னர் நியூயார்க்கிற்குச் சென்று அங்குள்ள நியூயார்க் திரைப்பட அகாடமியில் திரைப்படத் தயாரிப்பில் பட்டம் பெற்றுள்ளார். அங்கிருந்து வந்து விளம்பரத்துறையில் வடிவழகு செய்து வந்த இவருக்கு 2013 ம் ஆண்டில் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் வெளியான [1] எதிர் நீச்சல் (2013) படத்தில் திரைப்பட நடிகையாக முதன்முதலில் அறிமுகமானார், அந்த படத்தில்சிவகார்த்திகேயனின் முதல் காதலியாக ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். ஆனாலும் அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்த "நிஜமெல்லாம் மறந்து போச்சு" என்ற பாடலின் வழியே ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடையே பரவலாக கவனத்தையும் பெற்றுள்ளார்.[2] இவர், தமிழக உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார் நடித்த இயக்குநர் சிவாவின் வீரம் (2014) என்ற படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.[3]
அடுத்தடுத்த ஆண்டுகளில் வெள்ளிகிழமை 13ஆம் தேதி மற்றும் கண்ணீர் அஞ்சலி ஆகிய இரண்டு தமிழ் திகில் படங்களில் நடித்துள்ளார், இவ்விரண்டு படங்களும் அவரது முதல் இரண்டு திரைப்படங்களை விட சிறிய செலவு திட்டத்தினை கொண்டவையாகும்.[4][5]
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | பாத்திரப்படைப்பு | குறிப்புகள் |
---|---|---|---|
2013 | எதிர் நீச்சல் | குஞ்சிதபாதத்தின் காதல் ஆர்வம் | |
2014 | வீரம் | செண்பகம் | |
2015 | 13 ம் பக்கம் பார்க்க | ||
2016 | <i id="mwSw"><a href="./வெள்ளிகிழமை_காலை_13_மணி_தேத்தி" rel="mw:WikiLink" data-linkid="70" data-cx="{"adapted":false,"sourceTitle":{"title":"Vellikizhamai 13am Thethi","description":"2016 film","pageprops":{"wikibase_item":"Q101245112"},"pagelanguage":"en"},"targetFrom":"mt"}" class="cx-link" id="mwTA" title="வெள்ளிகிழமை காலை 13 மணி தேத்தி">வெள்ளிகிழமை 13ஆம் தேதி</a></i> | மல்லிகா | |
2018 | மாணிக் | கீர்த்தி |
மேலும் பார்க்கவும்
[தொகு]தமிழ் மொழித் திரைப்படங்களின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Love for Chennai lands Suza in K-town". The New Indian Express. Retrieved 2020-07-08.
- ↑ vasudevan, shilpa (2015-11-20). "Suza Kumar on a horror trail". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 2020-07-08.
- ↑ "Secret behind Suza Kumar in Ajith's flick - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2020-07-08.
- ↑ "I play a journalist in my next: Suza Kumar - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2020-07-08.
- ↑ Subramanian, Anupama (2016-02-13). "'Scary' debut in Tamil for Shravya". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 2020-07-08.