உள்ளடக்கத்துக்குச் செல்

சீலாந்து வேள்புலம்

ஆள்கூறுகள்: 51°53′42.6″N 1°28′49.8″E / 51.895167°N 1.480500°E / 51.895167; 1.480500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீலாந்து வேள்புலம்
Principality of Sealand
நுண் நாடு
சீலாந்தின் கொடி
Flag
சீலாந்தின் சின்னம்
சின்னம்
Motto: E Mare Libertas
(English: கடலில் இருந்து, விடுதலை)
பண்: "E Mare Libertas" by பசில் சிமோனென்கோ
நிலை தற்போது
Location of சீலாந்து வேள்புலம்
Location of சீலாந்து வேள்புலம்
கோரப்பட்ட நிலம் 550 சதுரமீட்டர்
(அனைத்தும் வாழக்கூடிய பகுதிகள்)[1]
மக்கள்தொகை 27 (கோரியது)[1]
நிறுவிய ஆண்டு 2 செப்டம்பர் 1967[2]
தலைமை பேட்சு குடும்பம், இளவரசர் மைக்கேல்[3]
ஒழுங்கமைவு சிலராட்சி, அரசியல்சட்ட முடியாட்சி
மொழி ஆங்கிலம்[4]
நாணயம் சீலாந்து டாலர்
(அமெரிக்க டாலருடன் நிலைப்படுத்தப்பட்டது)[5]
நாணயக் குறியீடு எதுவுமில்லை
தலைநகர் எச்எம் ரஃப்சு துறை[6]
Demonym சீலாண்டர், சீலாண்டிக்கு[1]
Claimed GDP US$600,000
(US$22,200 நபர்வரி)[2]
நேரவலயம் கிஇநே[7]
சீலாந்து வேள்புலம்

சீலாந்து வேள்புலம் (Principality of Sealand) என்பது எச்எம் ரஃப்சு கோட்டை எனப்படும் இடத்தில் உள்ள ஒரு அங்கீகரிக்கப்படாத பிரதேசம் ஆகும். இது ஐக்கிய இராச்சியம், இங்கிலாந்தின் சஃபோக் கரையில் இருந்து 13 கிமீ தொலைவில் வடகடலில் உள்ள ஒரு முன்னாள் இரண்டாம் உலகப் போர்க்கால மவுன்செல் கடல் துறைகளில் ஒன்றாகும்.[6][8]

1967 முதல் பாடி ரோய் பேட்சு என்பவராலும், அவரது குடும்பத்தினராலும் இப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு சுதந்திரத் தனிநாடாகக் கோரப்பட்டது.[6] பேட்சு 1967 ஆம் ஆண்டில் தனது தனிப்பட்ட வானொலி நிலையம் ஒன்றை நிறுவும் நோக்கோடு கடற்கொள்ளைக்கார வானொலி ஒலிபரப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றினார். 1975 ஆம் ஆண்டில் இவர் சீலாந்து என்ற பெயரில் அரசு ஒன்றை நிறுவி அரசியலமைப்புச் சட்டம், மற்றும் பல தேசிய சின்னங்களையும் அமைத்தார்.[6] பேட்சு முதுமை அடைந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பைத் தனது மகன் மைக்கேலிடம் கொடுத்துவிட்டு இங்கிலாந்தின் எசெக்சு நகருக்குத் திரும்பினார். பேடு 2012 ஆம் ஆண்டில் தனது 91வது அகவையில் மரணமானார்.[9]

சீலாந்து உலகின் மிகச் சிறிய நாடாக,[10] அல்லது நுண் நாடாகக் கருதப்பட்டாலும்,[11] இது எந்தவொரு சுதந்திர நாடாலும் இதுவரையில் அங்கீகரிக்கப்படவில்லை. அப்போது வழக்கில் இருந்த பிராந்திய கடல் எல்லைக் கட்டுப்பாட்டின் படி, இப்பிரதேசத்தின் மீது உரிமை கோர இங்கிலாந்துக்கு அதிகாரம் இல்லை என இங்கிலாந்தின் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், ஐக்கிய இராச்சியம், மற்றும் செருமனி ஆகியன நடைமுறைப்படி தம்மை அங்கீகரித்துள்ளதாக சீலாந்து அரசு கூறி வருகிறது.[6]

கடல் மீது அமைந்துள்ள ஒரு கட்டிடம் தான் இந்நாட்டு மக்களின் வாழிடமாகும். இக்கட்டிடத்தில் 30 அறைகள் உள்ளன. இந்நாட்டினை தற்போது ஆண்டு வரும் மைக்கேல் குடும்பம் உட்பட 50 குடிமக்களே இந்நாட்டில் வசித்து வருகின்றனர்.[12]

சமயம்[தொகு]

ஆரம்பம் முதல் இங்கிலாந்து திருச்சபையைச் சார்ந்திருந்த சீலாந்து, 1997 ஆம் ஆண்டில் சமயச் சார்பற்ற நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "Information on the Principality of Sealand" (PDF). Summit of Micronations. Archived from the original (PDF) on 15 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 November 2007.
 2. 2.0 2.1 "Information on the Principality of Sealand including GDP" (PDF). Summit of Micronations. Archived from the original (PDF) on 15 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 November 2007.
 3. "Information on the Principality of Sealand including Bate Family" (PDF). Summit of Micronations. Archived from the original (PDF) on 15 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 November 2007.
 4. "Information on the Principality of Sealand" (PDF). Summit of Micronations. Archived from the original (PDF) on 15 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 November 2007.
 5. "info_paper.id" (PDF). Archived from the original (PDF) on 2014-10-15. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2010.
 6. 6.0 6.1 6.2 6.3 6.4 History Of Sealand பரணிடப்பட்டது 2012-02-27 at the வந்தவழி இயந்திரம் The Principality of Sealand
 7. "Information on the Principality of Sealand including time zone" (PDF). Summit of Micronations. Archived from the original (PDF) on 15 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 November 2007.
 8. பிராங்க் ஜேக்கப்சு (20 மார்ச்சு 2012). "All Hail Sealand". த நியூயார்க் டைம்ஸ்.
 9. Self-declared prince of sovereign principality of Sealand dies aged 91
 10. "JOURNEYS – THE SPIRIT OF DISCOVERY: Simon Sellars braves wind and waves to visit the unlikely North Sea nation of Sealand". தி ஆஸ்திரேலியன். 10 நவம்பர் 2007 இம் மூலத்தில் இருந்து 2007-11-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071116080255/http://www.theaustralian.news.com.au/story/0%2C25197%2C22726244-5002031%2C00.html. பார்த்த நாள்: 10 நவம்பர் 2007. 
 11. John Ryan, George Dunford & Simon Sellars (2006). Micronations. Lonely Planet. pp. 8–13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-74104-730-7.
 12. "30 அறைகள், 50 குடிமக்கள்: உலகின் மிகச்சிறிய நாடு". தினமலர். 21 பெப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 26 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சீலாந்து_வேள்புலம்&oldid=3849136" இலிருந்து மீள்விக்கப்பட்டது