சீமஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்டீபன் ஃபாரெல்லி ( Stephen Farrelly பிறப்பு ஜனவரி 1978 ) ஒரு ஐரிஷ் தொழில்முறை மல்யுத்த வீரர் மற்றும் நடிகர் ஆவார். தற்போது அமெரிக்காவின் தொழில்முறை மல்யுத்த ஊக்குவிப்பு நிறுவனமான உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த நிறுவனத்தின் சுமாக்டவுன் நிகழ்ச்சியில் சீமஸ் எனும் மேடைப்பயரில் விளையாடி வருகிறார்.

உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு, ஃபாரெல்லி ஐரோப்பிய மல்யுத்தப் போட்டிகளில் இவர் மல்யுத்தம் செய்தார் .மேலும் ஐரிஷ் விப் மல்யுத்தத்தில் (IWW) இவர் விளையாடினார். அந்தக் காலத்தில் இவர் இரண்டு முறை சர்வதேச மிகுகன வாகையாளராக இருந்தார். 2009 ஆம் ஆண்டில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் பிரதான பட்டியலில் அங்கம் வகித்த பின்னர், இவர் நான்கு முறை உலக வாகையாளராக இருந்தார், உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் உலக வாகையாளர் பட்டத்தினை மூன்று முறையும் மற்றும் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் உலக மிகு கன வாகையாளர் பட்டத்தினை ஒரு முறையும் பெற்றுள்ளார்.[1] உலக மற்போர் மகிழ்கலை நிறுவன வரலாற்றில் வாகையாளர் பட்டம் பெற்ற முதல் ஐரிஷ் வீரர் இவரே. இவர், இரண்டு முறை யுனைடெட் ஸ்டேட்ஸ் வாகையாளர் மற்றும் ஐந்து முறை டேக் டீம் வாகையாளர் இதில் நான்கு முறை ரா நிகழ்ச்சிக்காகவும் ஒரு முறை ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியிலும் தனது கூட்டாளரான செசரோவுடன் இணாஇந்து பெற்றார் . மேலும் 2010 கிங் ஆஃப் தி ரிங் போட்டி, 2012 ராயல் ரம்பிள் போட்டி மற்றும் 2015 மனி இன் தி பேங்க் ஏணி போட்டி ஆகிய போட்டிகளிலும் வென்றுள்ளார், மேலும் இவர் மூன்று சாதனைகளையும் பெற்ற இரண்டாவது மல்யுத்த வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக இந்தச் சாதனையினை எட்ஜ் நிகழ்த்தினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஃபாரெல்லி அயர்லாந்தின் டப்ளினில் உள்ள கப்ராவில் பிறந்து வளர்ந்தார்.[2] இவர் சரளமாக ஐரிய மொழியில் பேசும் திறன்கொண்டவர் ஆவார். தனது பள்ளிக் காலத்தில் இவர் லேட் லேட் ஷோ மற்றும் லைவ் அட் த்ரி ஆகியவற்றில் தோன்றினார்.[3] இவர் எரின் தீவு அணிக்காக கேலிக் கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ளார், அங்கு இவர் ஒரு மாதத்தில் சிறந்த விளையாட்டு நட்சத்திரமாக அறிவிக்கப்பட்டார். இவர் அயர்லாந்தின் தேசிய கல்லூரி அணியில் ரக்பி விளையாடினார்,[2] அந்தக் கல்லூரியில் இவர் தேசிய டிப்ளோமா பெற்றார். இவர் சிறுவயதிலிருந்தே பிரீமியர் லீக் கால்பந்து கிளப்பான லிவர்பூல் எஃப்சியின் ரசிகராக இருந்து வருகிறார், மேலும் ரக்பி யூனியன் கிளப்புகளான லண்டன் ஐரிஷ் மற்றும் லெய்ன்ஸ்டர் மற்றும் ரக்பி லீக் கிளப் நியூசிலாந்து வாரியர்ஸ் ஆகிய இரண்டு அணிகளையும் ஆதரிக்கிறார்.[4] மல்யுத்தப் போடிகளில் பங்கேற்பதற்கு முன்பாக இவர் ஐடி தொழில்நுட்ப வல்லுநராக இருந்தார், மேலும் ஒரு இரவு விடுதியின் பாதுகாப்பாகவும் பணியாற்றினார் [2][5]

உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்[தொகு]

ஆரம்பகால தோற்றங்கள்[தொகு]

நவம்பர் 13, 2006 அன்று, ஓ-ஷானெஸ்ஸி மற்றும் இங்கிலாந்து மல்யுத்த வீரரான ஸ்டு சாண்டர்ஸ் ஆகியோர் உலக மல்யுத்த பொழுதுபோக்கு (WWE) நிறுவனத்தின் ரா நிகழ்ச்சி மான்செஸ்டர் ஈவினிங் நியூஸ் அரங்கில் நடைபெற்றது. அப்போது டி-ஜெனரேஷன் எக்ஸ் குழுவினரை வளையத்திலிருந்து வெளியேற்றும் பாதுகாப்புக் குழுவினரில் ஒருவராக இவர் பணியாற்றினார். பின்னர் இவர் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார்.

சான்றுகள்[தொகு]

  1. After Cole described him as a 4-time WWE World Heavyweight Champion ("{{{title}}}". Survivor Series. ) both Sheamus (Stephen Farrelly [WWESheamus] (22 November 2015). "The Irish are coming? The Irish have arrived. New @WWE World Heavyweight Champion. #4times #SurvivorSeries" (Tweet). 23 November 2015 அன்று பார்க்கப்பட்டது. ) and WWE.com (Murphy, Ryan (22 November 2015). "Sheamus cashed in his Money in the Bank contract to become WWE World Heavyweight Champion". 23 November 2015 அன்று பார்க்கப்பட்டது., "Roman Reigns demands a rematch with Sheamus: photos". WWE.com. 23 November 2015.) did so too.
  2. 2.0 2.1 2.2 "Sheamus O'Shaunessy – The Statistics". SOS Official. 27 January 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. "The Celtic Wrestler's Biography". SOS Official. 27 January 2010 அன்று பார்க்கப்பட்டது.
  4. "WWE star: I'd take Neville down" பரணிடப்பட்டது 23 அக்டோபர் 2014 at the வந்தவழி இயந்திரம். Liverpool FC. Retrieved 2 September 2014
  5. Porter, Christopher (10 December 2009). "Tables, Ladders & Sheamus: The WWE's Celtic Warrior". Express Night Out. Express. 10 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 January 2012 அன்று பார்க்கப்பட்டது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமஸ்&oldid=2866503" இருந்து மீள்விக்கப்பட்டது