இரவு விடுதி
Jump to navigation
Jump to search
இரவு கூடலகம் (Nightclub) என்பது இரவு நேர ஆடல் பாடல் போன்ற கேளிக்கை நிகழ்வுகளை விரும்புவோர் கூடும் ஒரு கூடமாகும். இவ்விடத்தை டிசுகோத்தே அல்லது டிசுகோ என்றும் அழைப்பர். சுருக்கமாக "கூடலகம்" (Club) என்றும் அழைப்பதுண்டு. இது “இரவு கேளிக்கை விடுதி”, ”இரவு நடன விடுதி” ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுவதுண்டு.
இரவு விடுதி மது அருந்த, ஆட்டம் ஆட, இசை கேட்க போன்ற கேளிக்கைகளுக்காக இரவு நேரங்களில் பெரும்பான்மையாக இளையர்கள் செல்லும் ஒரு வணிகம் ஆகும். இது இரவு கேளிக்கை விடுதி, கூத்தரங்கம், னைற் கிளப் என்றும் குறிக்கப்படுவதுண்டு. இங்கு சிறப்பாக ஆட்டமும், தாளமும், டிசே சாவடியும் இருக்கும். இத்தகைய விடுதிகள் நியு யார்க், இலண்டன், மும்பாய், சென்னை, ரொறன்ரோ போன்ற பெரும் நகரங்களில் கூடிய அளவு இருக்கின்றன.
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் இரவுக் கூடலகங்கள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.