சிவப்பா நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பா நாயக்கர்
ஆட்சிகி.பி 1645- கி.பி 1660
முன்னிருந்தவர்வீரபத்திர நாயக்கர்
பின்வந்தவர்சிக்க வெங்கடப்ப நாயக்கர்
அரச குலம்கேளடி நாயக்கர்கள்

சிவப்பா நாயக்கர், கேளடியை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார்.[1] இவர் கி.பி 1645 தொடக்கம் 1660 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார்.[2] இவர் சிறந்த நிர்வாகத் திறமையும் போர்த் திறமையும் பெற்று விளங்கியவர்.[3]

வெற்றிகள்[தொகு]

வேலூரில் இருந்து ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசின் கடைசி ஆட்சியாளரான மூன்றாம் ஸ்ரீரங்கா பீஜப்பூர் சுல்தானகத்தால் தோற்கடிக்கப்பட்டு சிவப்பாவிடம் அடைக்கலம் புகுந்தார்.[4] இதன் காரணமாக பிஜாப்பூர், கோல்கொண்டா சுல்தான்களோடு போர் புரிந்து தார்வாடு பகுதியை கைப்பற்றினர். மங்களூர், குந்தாபுரா, ஹொன்னாவர் போன்ற கடலோரப் பகுதியில் உள்ள போர்த்துகீசிய துறைமுகங்கள் கைப்பற்றி கர்நாடக பகுதியில் உள்ள போர்த்துகீசிய அரசியல் அதிகாரத்தை அழித்தார்.[5]

கட்டிடக்கலை[தொகு]

சிவப்பா நாயக்கரால், சந்திரகிரி, பேக்கல், மங்களூர், ஆரிக்கடி மற்றும் அட்கா பகுதிகளில் கோட்டைகள் கட்டப்பட்டன.

சிவப்பா நாயக்கர் அரண்மனை, அரசு அருங்காட்சியகம், சிமோகா மாவட்டம், கர்நாடகம்
மன்னர் சிவப்பா தர்பாரின் முன்பக்க காட்சி
சந்திரகிரிக் கோட்டை, காசர்கோடு (கேரளா), சிவப்பா நாயக்கர் கட்டியது.
பேகல் கோட்டை, காசர்கோடு, சிவப்பா நாயக்கர் கட்டியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bhagamandala Seetharama Shastry, தொகுப்பாசிரியர் (2000). Goa-Kanara Portuguese Relations, 1498-1763. Concept Publishing Company. பக். 8. https://books.google.co.in/books?id=raLL0A3Pb_0C. 
  2. Pius Fidelis Pinto, தொகுப்பாசிரியர் (1999). A History of Christians in Coastal Karnataka, 1500-1763 A.D.. Samanvaya. பக். 78. https://books.google.co.in/books?id=-9HYAAAAMAAJ. 
  3. "Mysore and Coorg, a gazetteer - Keladi". Benjamin Lewis Rice. 1876. p. 355.
  4. H. V. Sreenivasa Murthy, R. Ramakrishnan, தொகுப்பாசிரியர் (1977). A History of Karnataka, from the Earliest Times to the Present Day. S. Chand. பக். 284. https://books.google.co.in/books?id=g09uAAAAMAAJ. 
  5. PSR, தொகுப்பாசிரியர் (2009). Portuguese Studies Review, Vol. 16, No. 2. Baywolf Press. பக். 35. https://books.google.co.in/books?id=ZSiaBAAAQBAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பா_நாயக்கர்&oldid=3836269" இலிருந்து மீள்விக்கப்பட்டது