சிலகமார்த்தி லட்சுமி நரசிம்மம்
சிலகமார்த்தி லட்சுமி நரசிம்மம்[1] | |
---|---|
பிறப்பு | 26 செப்டம்பர்r 1867 கந்தவல்லி, மேற்கு கோதாவரி மாவட்டம் |
இறப்பு | 17 ஜூன் 1946 |
புனைபெயர் | சிலகமார்த்தி புன்னையா |
தேசியம் | இந்தியா |
குடியுரிமை | இந்தியா |
கல்வி நிலையம் | மிஷன் பள்ளி, வீரவாசரம் |
வகை | நாடக எழுத்தாளர், புதின எழுத்தாளர், கவிஞர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கயோபாக்யானம், கணபதி |
குறிப்பிடத்தக்க விருதுகள் | ஆந்திரப் பல்கலைக்கழகம் |
சிலகமார்த்தி லட்சுமி நரசிம்மம் (Chilakamarti Lakshmi Narasimham)[1] (26 செப்டம்பர் 1867 - 17 ஜூன் 1946) ஒரு இந்திய நாடக ஆசிரியரும், புதின ஆசிரியரும் சிறுகதை ஆசிரியரும் ஆவார். இவர் தெலுங்கு மொழியில் எழுதினார். தெலுங்கு இலக்கியத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த வீரேசலிங்கம் நிறுவிய பாரம்பரியத்தில் வந்தவர்.[2] கயோபாக்யானம் (1909) மற்றும் கணபதி (1920) ஆகியவை இவரது சிறந்த நாடகங்கள்.
நரசிம்மம் இளமைப் பருவத்திலிருந்தே பார்வைக் குறைபாடுடையவராக இருந்தார். பட்டப்படிப்புக்குப் பிறகு பார்வையற்றவராகிவிட்டார். ஆயினும்கூட, இவர் ராஜமன்றியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் தெலுங்கில் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றினார். இவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இருந்தார். "வெளிநாட்டு துணியை" தவிர்த்து, காதி வேட்டி, சட்டை, கோட் மற்றும் தலைப்பாகை அணிந்திருந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]சிலகமார்த்தி லட்சுமி நரசிம்மம் 1867 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி ஆராம திராவிடலு பிரிவின் பிராமண குடும்பத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள வீரவாசரம் கிராமத்தில் இவரது தந்தை சிலகமார்த்தி வெங்கண்ணா மற்றும் தாயார் வெங்கடரத்னம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். [3][4] [5]
கர்னல் ஜேம்ஸ் டோட் எழுதிய அன்னல்ஸ் அண்ட் ஆண்டிக்விட்டிஸ் ஆஃப் ராஜஸ்தான் என்ற புத்தகத்தை 1906-07 வாக்கில் ராஜஸ்தானா கதாவலி என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். இது இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்ட ராஜஸ்தானின் அரச வம்சங்களின் இருபத்தி நான்கு கதைகளைக் கொண்டிருந்தது.[6][7]
சுயசரிதை
[தொகு]தனது நண்பர்களின் வேண்டுகோளின்படி, பார்வையின்மை மற்றும் முதுமை (75 வயது) இருந்தபோதிலும், சிலகமார்த்தி தனது 646 பக்கங்கள் கொண்ட சுயசரிதமு [8] என்ற பெயரில் தனது சுயசரிதையை 18 மார்ச் 1942 முதல் 12 ஜூலை 1942 வரை 4 மாதங்கள் மற்றும் 24 நாட்களில் எழுதினார். [3]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Yal Narasiṃhārāvu, Vi. Vi (1993). Chilakamarti Lakshmi Narasimham. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788172014995.
- ↑ Babu, A. Satish. Tourism development in India : a case study New Delhi : A.P.H. Pub. Corp., 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-313-0346-7 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-313-0346-2 p. 73
- ↑ 3.0 3.1 V.V.L. Narasimha Rao.
- ↑ Narasiṃhārāvu, Vi Vi Yal (1993). Chilakamarti Lakshmi Narasimham (in ஆங்கிலம்). சாகித்திய அகாதமி. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7201-499-5.
- ↑ Sekaram, Kandavalli Balendu (1973). The Andhras Through the Ages (in ஆங்கிலம்). Sri Saraswati Book Depot. p. 29.
- ↑ Chilakamarti Lakshmi Narasimham (1917). Rajasthana Kathavali (in Telugu) (Tenth ed.). Rajahmundry. பார்க்கப்பட்ட நாள் 21 February 2021.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) CS1 maint: unrecognized language (link) - ↑ Chilakamarti Lakshmi Narasimham (1938). Rajasthana Kathavali, second volume (in Telugu). Rajahmundry: Kondapalli Veera Venkayya. பார்க்கப்பட்ட நாள் 22 February 2021.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Dr. Muktevi Bharathi, Chilakamarti Jeevitam – Sahityam, Visalandhra Publishing House, Hyderabad, 2001.