உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீ விஷ்ணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ விஷ்ணு
2019இல் சிறீ விஷ்ணு
பிறப்புRudraraju Vishnuvardhan[1]
29 பெப்ரவரி 1984 (1984-02-29) (அகவை 40)[2][3]
அந்தர்வேதி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா[4]
படித்த கல்வி நிறுவனங்கள்காந்தி மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம், விசாகப்பட்டினம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009–தற்போது வரை

சிறீ விஷ்ணு (Sree Vishnu) (பிறப்பு உருத்ரராஜு விஷ்ணுவர்தன் ; 29 பிப்ரவரி 1984) தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றும் ஓர் இந்திய நடிகராவார். சிறு சிறு வேடங்களில் தோன்றிய பிறகு, விஷ்ணு பிரேமா இஷ்க் காதல் (2013) என்ற படத்தில் நடித்தார். பின்னர் இவர் செகண்ட் ஹேண்ட் (2013), அப்பட்லோ ஒகடுண்டேவாடு (2016) போன்ற படங்களில் தோன்றினார். 2018ஆம் ஆண்டில், உன்னதி ஒகேட்டே ஜிந்தகி (2017) படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[5]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

சிறீ விஷ்ணு ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அந்தர்வேதிபாலத்தில் பிறந்தார். இவர் விசாகப்பட்டினத்தின் காந்தி மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனத்தில் இளங்கலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றார். 2006 ஆம் ஆண்டு வரை ஐதராபாத்தில் இணையத்தள வடிவமைப்பாளராகப் பணியாற்றினார். அதன் பிறகு இவர் திரைப்படத் தொழிலில் ஈடுபட தனது பணியை விட்டுவிட்டு உதவி இயக்குநரானார்.[6]

கல்லூரியில் இருந்தபோது இவர் நாடகக் குழுவில் உறுப்பினராக இருந்தார். இவர் 19 வயதுக்குட்பட்ட ஆந்திரப் பிரதேச துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார்.[7] விஷ்ணு சக நடிகர் நர ரோகித்தின் நண்பராவார். மேலும், அவருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.[8]

தொழில்

[தொகு]

விஷ்ணு பல குறும்படங்களில் நடித்துள்ளார். அவற்றில் ஒன்று, பவன் சாதினேனி இயக்கிய "பெவர்ஸ்", யூடியூப்பில் பிரபலமானது. பாணம், சோலோ ஆகிய படங்களிலி ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். 2013 ஆம் ஆண்டில், பிரேமா இஷ்க் காதல் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.[9] 2014 இல், இவர் உள்துறை அமைச்சரின் மகனாக நர ரோகித்தின் "பிரதிநிதி" என்ற படத்தில் நடித்தார்.[9] தி டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற பத்திரிக்கை இவரது "செகண்ட் ஹேன்ட்" (2013) படத்தின் மதிப்பாய்வில், "விஷ்ணு வசனம் பேசுவதில் பிரகாசிக்கிறார்" என்று எழுதியது.[10]

வேறு சில சிறிய வேடங்களைத் தொடர்ந்து, 2016 இல் இவர் அப்பட்லோ ஒகடுண்டேவாடு படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.[9][11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nala Damayanti is a feel good film : Sree Vishnu". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 February 2014.
  2. TelanganaToday. "Sree Vishnu drops a hint on his birthday". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 December 2020.
  3. "Never wanted to be hero, just want to be a good actor: Telugu star Sree Vishnu to TNM". The News Minute (in ஆங்கிலம்). 3 March 2018. பார்க்கப்பட்ட நாள் 8 December 2020.
  4. "Sree Vishnu has his fanboy moment with Victory Venkatesh - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 December 2020.
  5. Hooli, Shekhar H. "SIIMA Awards 2018 - Telugu, Kannada nomination list out: Date, place of 7th edition revealed". International Business Times, India Edition. https://www.ibtimes.co.in/siima-awards-2018-telugu-kannada-nomination-list-out-date-place-7th-edition-revealed-777016. 
  6. "Most intense character I've portrayed: Sree Vishnu on playing a DJ in 'Thippara Meesam'". The News Minute (in ஆங்கிலம்). 30 October 2019. பார்க்கப்பட்ட நாள் 8 December 2020.
  7. "Interview with Sree Vishnu about 'Appatlo Okadundevadu by Maya Nelluri". Idlebrain.com. 28 December 2016.
  8. Ranjith, Gabbeta. "Sree Vishnu opens up about his friendship with Nara Rohith, role in VOZ". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 December 2020.
  9. 9.0 9.1 9.2 Chowdhary, Y. Sunita (9 October 2017). "Sree Vishnu: Patience is the only mantra". The Hindu.
  10. "Second Hand Movie Review {2.5/5}: Critic Review of Second Hand by Times of India". The Times of India.
  11. Pecheti, Prakash. "Thippara Meesam to change Sree Vishnu's career graph". Telangana Today.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_விஷ்ணு&oldid=3505879" இலிருந்து மீள்விக்கப்பட்டது