அந்தர்வேதி
அந்தர்வேதி అంతర్వేది | |
---|---|
கிராமம் | |
![]() கோதாவரிக் கரையில் அந்தர்வேதி கோயில் | |
ஆள்கூறுகள்: 16°20′00″N 81°44′00″E / 16.3333°N 81.7333°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | கிழக்கு கோதாவரி |
ஏற்றம் | 0 m (0 ft) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தெலுங்கு |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அந்தர்வேதி என்னும் ஊர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சகினேதிபள்ளி மண்டலத்தில் கோணசீமா பகுதி சோலைகள் நிறைந்து பசுமையான பகுதியாக உள்ளது. இதனால் அந்தப் பகுதி ஆந்திர கேரளா என்றே அழைக்கப்படுகிறது.[1] இந்தப் பகுதில் உள்ள ஒரு ஊர் இது ஆகும். இந்தக் கிராமம் வங்காள விரிகுடா மற்றும் கோதாவரி ஆற்றின் துணை நதியான வஷிஸ்டா கோதாவரி ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. [2] அந்தர்வேதியில் உள்ள நரசிம்மசேத்திரத்தால் பெயர்பெற்றது. [3]
விளக்கம்[தொகு]
புவியியல்ரீதியாக அந்தர்வேதி, 4 சதுர மைல் (6.4 கிமீ) பரப்பளவைக் கொண்டதாக உள்ளது.[3] இந்த கிராமத்தில் பாயும் வசிஷ்ட கோதாவரி ஆற்றுக்கு எதிரே புகழ்பெற்ற லக்ஷ்மிநரசிம்ம ஸ்வாமி கோயில் உள்ளது. மேலும் அந்தர்வேதியானது "இறைவனின் அருளால் இரண்டாம் வாரணாசி" என்று கூறப்படுகிறது. [3] கோதாவரி ஆற்றின் மறுபுறத்தில் உள்ள ஒரு தீவுக்கு படகு மூலம் பயணிக்கலாம். பின்னர் அங்கிருந்து கடலில் ஆறு கலக்கும் இடத்துக்குச் செல்லலாம்.[2]
நிலவியல்[தொகு]
அந்தர்வேதி 16°20′00″N 81°44′00″E / 16.3333°N 81.7333°E,[4] இல் அமைந்துள்ளது மேலும் கடல் மட்டத்துக்கு நெருக்கமாக உள்ளது. முனைவர் திரிணாதராஜு ருத்ரராஜூவின் கூற்றுப்படி, கோவில் வளாகத்தின் வடிவமைப்பு டெல்டாவின் வடிவவியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஆற்றின் சங்கமத்தில் நீரோட்டத்தின் வேகம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அவசியமும் கொண்டுள்ளது.[சான்று தேவை].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பிருந்தா கணேசன் (27 ஏப்ரல் 2017). "ஆன்மிகச் சுற்றுலா: புற்றிலிருந்து எடுக்கப்பட்ட நரசிம்மர்". கட்டுரை. தி இந்து. 27 ஏப்ரல் 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 "About Antarvedi". hoparoundindia.com. HopAroundIndia.com. 2012. 2016-11-10 அன்று மூலம் (Web page) பரணிடப்பட்டது. 2017-04-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3.0 3.1 3.2 "Temples -> Antharvedi". eastgodavari.nic.in. Government of India. 27 மார்ச் 2012 அன்று மூலம் (Web page) பரணிடப்பட்டது. 26 March 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Falling Rain Genomics.Antarvedi". 2007-10-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-04-27 அன்று பார்க்கப்பட்டது.