இணையத்தள வடிவமைப்பு
வலை வடிவமைப்பு அல்லது இணையத்தள வடிவமைப்பு (web design) என்பது வலைப் பக்கங்களை திட்டமிட்டு உருவாக்குதல் ஆகும். வலை வடிவமைப்பானது வலைப்பக்கம் அமைப்பு, உள்ளடக்கம் தயாரித்தல், மற்றும் வரைபட வடிவமைப்பு போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. வலைதளங்களானது கெச்டிஎம்எல்(HTML) எனப்படும் நிரல் மொழியை அடிப்படையாக கொண்டவை.[1] வலைப்பக்கமானது எழுத்துக்கள், நிழல்படங்கள்,அசைவூட்டப் படங்கள், காணொளிகள் கொண்டிருக்கலாம். இவை வலை வடிவமைப்பாளரால், மீயுரைக் குறியிடு மொழி மூலம் வலைப் பக்க கட்டமைப்பையும்,விழுத்தொடர் பாணித் தாள்கள் மூலம் தோற்றத்தையும், ஜாவாஸ்கிரிப்ட் மூலம் பயனர் ஊடாடு பக்கங்களையும் உருவாக்க முடியம்.உருவாக்கப்பட்ட வலைப் பக்கங்களை இணைய உலாவி மூலம் படிக்க முடியும்.
கருவிகள்[தொகு]
டிரீம்வீவர்(Dreamweaver) [2], பிரண்ட் பேஜ் (FrontPage) ஆகியவை வலைவடிவமைக்க அதிகமாக பயன்படும் மென்பொருட்களாகும்.
இவற்றையும் காண்க[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிப்பல்கலைக்கழகத்தில் Web Design பற்றிய கற்றற் பொருள்கள் உள்ளன. |
- வலை வடிவமைப்பு திறந்த ஆவணத் திட்டத்தில்
- San Jose Web Design பரணிடப்பட்டது 2021-10-06 at the வந்தவழி இயந்திரம்
- வலை மதிப்பீடு