சிறீ கொண்டா லட்சுமன் தெலங்காணா மாநில தோட்டக்கலை பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ கொண்டா லட்சுமன் தெலங்காணா மாநில தோட்டக்கலை பல்கலைக்கழகம்
வகைபொது
உருவாக்கம்2014 (2014)
வேந்தர்தெலங்காணா ஆளுநர்
துணை வேந்தர்பி. நீரஜ் பிரபாகர்[1]
அமைவிடம், ,
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம்
இணையதளம்skltshu.ac.in

சிறீ கொண்டா லட்சுமன் தெலங்காணா மாநில தோட்டக்கலை பல்கலைக்கழகம் (Sri Konda Laxman Telangana State Horticultural University) என்பது தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் கல்வியில் கவனம் செலுத்தும் தெலங்காணா மாநிலம் விவசாயப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் இந்தியாவில் தெலங்காணா மாநிலம் ஐதராபாத்து நகரில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் டாக்டர் ஒய். எஸ். ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து தெலங்காணா அரசால் 2014-இல் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இரண்டு உறுப்புக் கல்லூரிகள் செயல்படுகிறது. இவை மகபூப்நகர் மாவட்டத்தில் மொஜெர்லாவில் உள்ள தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஐதராபாத்து மாவட்டத்தில் இராஜேந்திரா நகரில் உள்ள தோட்டக்கலை கல்லூரி ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "University Officer's [sic]". skltshu.ac.in. Sri Konda Laxman Telangana State Horticultural University. பார்க்கப்பட்ட நாள் 18 January 2021.

வெளி இணைப்புகள்[தொகு]