4,527
தொகுப்புகள்
=== காங்கிரஸ் கட்சி பணி ===
1980ம் ஆண்டு ஜனவரி 3 மற்றும் 6ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்திரா காங்கிரஸ் போட்டியிட்ட 24 நாடாளுமன்றத் தொகுதிகளில் 21-ஐ கைப்பற்றியது.
தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்ட போது, இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் பிரிவின் தமிழக தலைவராக 1979ல் பதவியேற்று பணியாற்றினார். 1980ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திராகாந்தி திமுகவுடன் கூட்டணி அமைத்தார். முன்னதாக 1979ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியும், இந்திராகாந்தியும் ஒரே மேடையில் பேசினர். இந்திரா காங்கிரஸ் தலைவர் ஐயா இளையபெருமாளும் உடன் இருந்தார். கருப்பையா மூப்பனார், நடிகர் சிவாஜி கணேசன் உள்ளிட்டோரும் அந்த மேடையில் இருந்தனர். அந்த மேடையில் தான் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சித் தருக என்று கருணாநிதி பேசினார். 1980-ல் சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றினார். கருத்துவேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து பிரிந்த இளையபெருமாள் 1989-ல் இந்திய மனித உரிமை கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். 2003-ல் காங்கிரஸ் கட்சியில் சோனியாகாந்தி முன்னிலையில் மீண்டும் இணைந்தார்.
|
தொகுப்புகள்