"நரம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
5,497 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
நீள் நரம்பிழையின்மீது மையலின் உறையால் தோற்றுவிக்கப்படும் இடைவெளிகள், '''ரேன்வியரின் கணுக்கள்''' என்றழைக்கப்படுகின்றன. இக்கணுக்களில் நியூரிலேமா தொடர்ச்சியற்றுக் காணப்படுகிறது. மையலின் உறையானது மின்தூண்டல் விரைவாகக் கடத்தப்படுவதற்கு உதவி செய்கிறது.<ref>{{cite book | title=அறிவியல் பத்தாம் வகுப்பு | publisher=தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. | year=2017 | pages=ப. 39.}}</ref>
 
==நரம்புச் செல்லின் வகைப்பாடு==
நரம்புச் செல் ஐவகைப்படும். அவை:
 
===மையலின் உறை அல்லது சுரமாக்கப்பட்டவை அல்லது வெண்மை நரம்புச் செல்கள்===
நீள் நரம்பிழைகள் (Axons) வெண்மையான கொழுப்பு மையலினால் மூடப்பட்டுக் காணப்பட்டால், அவை மையலின் உறை அல்லது சுரமாக்கப்பட்டவை அல்லது வெண்மை நரம்புச் செல்கள் (Neurons) என்றழைக்கப்படுகின்றன. இந்நரம்புச் செல்கள் மூளையின் வெண்மைப் பகுதியைத் தோற்றுவிக்கின்றன.<ref>{{cite book | title=அறிவியல் பத்தாம் வகுப்பு | publisher=தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. | year=2017 | pages=ப. 39.}}</ref>
 
===மையலின் உறையற்ற அல்லது சுரம் அற்றவை அல்லது சாம்பல் நரம்புச் செல்கள்===
மையலின் உறையினால் மூடப்பெறாத நீள் நரம்பிழைகள் சாம்பல் நிறத்தில் காணப்படும். இந்த நரம்பிழைகள் நியூரிலேமா செல்கள் அல்லது சுவான் செல்கள் ஆகியவற்றால் மூடப்பட்டிருக்கும். இவ்வகை நரம்புச் செல்கள் பெருமூளையின் சாம்பல் நிறப்பகுதிகளில் உள்ளன.<ref>{{cite book | title=அறிவியல் பத்தாம் வகுப்பு | publisher=தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. | year=2017 | pages=ப. 39.}}</ref>
 
===ஒருமுனை நரம்புச் செல்கள்===
வளர் கருவின் நரம்புத் திசுக்களில் ஒருமுனை நரம்புச்செல்கள் உள்ளன. இத்தகைய நரம்புச் செல்கள் ஒற்றை நீட்சி அல்லது இழையைக் கொண்டுள்ளன. இந்த நீட்சியே நீள் நரம்பிழையாகவும் குறு நரம்பிழையாகவும் செயல்புரிகின்றது.<ref>{{cite book | title=அறிவியல் பத்தாம் வகுப்பு | publisher=தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. | year=2017 | pages=ப. 39.}}</ref>
 
===இருமுனை நரம்புச் செல்கள்===
இருமுனை நரம்புச் செல்கள், உணர்வு உறுப்புகளான விழித்திரையில் காணப்படும் கூம்பு மற்றும் கோல் வடிவச் செல்களாக இருக்கின்றன. ஒவ்வோர் இருமுனை நரம்புச்செல்லும் ஒரு செல் உடலம் மற்றும் இரு நீட்சிகளை முனைகளில் கொண்டதாகக் காணப்படுகிறது. ஒரு நீட்சி நீள் நரம்பிழையாகவும் மற்றொன்று குறு நரம்பிழையாகவும் வினைபுரிகின்றது.<ref>{{cite book | title=அறிவியல் பத்தாம் வகுப்பு | publisher=தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. | year=2017 | pages=பக். 39 - 40.}}</ref>
 
===பலமுனை நரம்புச் செல்கள்===
பலமுனை நரம்புச் செல்கள் பெருமூளையின் புறணிப் பகுதியில் காணப்படுகின்றன. ஒவ்வொரு பலமுனை நரம்புச்செல்லிலும் செல் உடலம், பல குறு நரம்பிழைகள், ஒற்றை நீள் நரம்பிழை ஆகியவை உள்ளன.<ref>{{cite book | title=அறிவியல் பத்தாம் வகுப்பு | publisher=தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6. | year=2017 | pages=ப. 40.}}</ref>
===நரம்புகளின் வகைகள்===
====கணத்தாக்கம் கடத்தப்படும் திசையையொட்டி====
1,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2331365" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி