"திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
இற்றையாக்கம்
சி (இற்றையாக்கம்)
சி (இற்றையாக்கம்)
 
====ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவையில் திருத்தந்தை பிரான்சிசின் உரை====
ஐக்கிய நாடுகள் அவை 70ஆம் ஆண்டினைக் கொண்டாடுகின்ற இத்தருணத்தில் திருத்தந்தை ஐ.நா. பொதுப்பேரவையில் உரையாற்றினார். செப்டம்பர் 25, வெள்ளி காலை 9 மணியளவில் வழங்கப்பட்ட உரைக்கு முன், பொதுச்செயலர் [[பான் கி மூன்]] திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் திருத்தந்தை ஐ.நா. அவை அலுவலர்களுக்கு உரையாற்றி, அவர்களது பொறுப்பை வலியுறுத்தினார். ஐ.நா. தரப்பில் உலகின் பல பகுதிகளில் அமைதிக் குழு, மக்கள் நல முன்னேற்றக் குழு போன்ற பணிகளை ஆற்றியபோது வன்முறைக்கு உள்ளாகி உயிரிழந்த ஐ.நா. உழைப்பாளர்களின் நினைவகத்தின் முன் சிறிது நேரம் அமைதியாக நின்று அஞ்சலி செலுத்தினார்.
 
193 உலக நாடுகளை முழுநிலை உறுப்பினர்களாகவும், வத்திக்கான் (திருப்பீடம்) போன்ற சில பார்வைநிலை உறுப்பினர்களையும் கொண்ட மாபெரும் உலக நிறுவனமாகிய ஐ.நா. அவையின் பொதுப்பேரவை அமர்வுக்குத் தொடக்கவுரை ஆற்றும் பணி்யை ஒரு திருத்தந்தை ஆற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 
=====திருத்தந்தை பிரான்சிசு ஐ.நா. அவையில் ஆற்றிய உரையின் சில பகுதிகள்:=====
 
1. சுற்றுச் சூழல் பேணுதல் பற்றி:
 
”சுற்றுச் சூழலுக்கு நாம் ஊறு இழைக்கும் போதெல்லாம், மனித குலத்திற்கே ஊறு விளைவிக்கின்றோம்.”
 
2. புவி வெப்பநிலை மாற்றம் வறுமைக்குக் காரணமாதல் பற்றி:
 
”சுற்றுச் சூழலுக்கு ஊறு இழைப்பதால் ஏற்படுகின்ற விளைவுள் ஏழைமக்களை மிகக் கடுமையாக பாதிக்கின்றன. இதற்கான காரணங்கள் மூன்று: ஏழைகள் சமுதாயத்தால் ஒதுக்கப்படுகிறார்கள்; ஒதுக்கிக் கழிக்கப்படுபவையே ஏழைகளின் வாழ்வு ஆதாரம் ஆகிறது; சுற்றுச் சூழல் சீரழிப்பினால் அநியாயமான விதத்தில் துன்புற நேரிடுகிறது. இன்று சமுதாயத்தில் மெதுவாக, ஆனால் பரவலாகப் பரவி வருகின்ற ‘கழிவுமுறைக் கலாச்சாரத்தின்’ பிடியில் ஏழைகள் சிக்கி அவதிப்படுகிறார்கள்.”
 
3. உலக நாடுகளின் தலைவர்கள் என்ன முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்பது பற்றி:
 
”உலக நாடுகளின் தலைவர்கள், எந்தவொரு மனிதரோ மக்கள் குழுவோ, சமுதாயத்தாலோ பொருளாதார அமைப்பில் பங்கேற்பதிலிருந்தோ அநீதியாக ஒதுக்கப்படாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய சமுதாய மற்றும் பொருளாதார ஒதுக்குமுறை நிகழ்கின்ற இடங்களில் பலவிதமான தீய விளைவுகள் ஏற்படுகின்றன. உதாரணமாக, மனிதர்களை விலைக்கு வாங்கி விற்கின்ற கொடுமை, மனித உடலுறுப்புகளையும் திசுக்களையும் விலைபேசுகின்ற கொடுமை, சிறுவர்களையும் சிறுமியரையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகின்ற கொடுமை, மனிதர்களை அடிமைகளாக்கி வேலை வாங்கும் கொடுமை, அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கொடுமை, போதைப்பொருள்களையும் போர்க்கருவிகளையும் கடத்தி விற்கும் கொடுமை, பயங்கர வாத நடவடிக்கை, பன்னாட்டளவில் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்ற கொடுங்குற்றங்கள் போன்ற கொடுமைகள் எல்லாம் மேற்கூறிய சமுதாய மற்றும் பொருளாதார ஒதுக்குமுறையின் விளைவுகளே.”
 
4. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பெரும் பொறுப்புப் பற்றி:
 
”ஐக்கிய நாடுகள் அமைப்பு மனித குலத்திற்கு மாபெரும் பணி ஆற்றிட கடமைப்பட்டுள்ளது. நாம் வகுக்கின்ற திட்டங்களும் சரி, கொள்கைச் செயல்பாடுகளும் சரி, அவை எல்லாம் வெறும் திட்ட வகையாக நின்றுவிடக்கூடாது. மாறாக, ஒவ்வொரு நாளும் வறுமையில் உழன்று, உரிமைகள் இழந்து, வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எண்ணிறந்த மனிதர் உண்மையிலேயே முன்னேற்றம் பெறும் வகையில் திட்டங்களும் செயல்பாடுகளும் அமைய வேண்டும். அரசியல் மட்டத்திலும் பொருளாதார மட்டத்திலும் மேற்கொள்ளப்படுகின்ற செயல்பாடுகள் நீதியை மையமாகக் கொண்டு அமைய வேண்டும். நடைமுறையில் மக்களுக்கு, குறிப்பாக எளியோருக்கு, பயன் நல்குகின்றனவாக அமைய வேண்டும்.”
 
5. உலகளாவிய வறுமை நிலையை ஒழிக்க மக்களால் முடியும் என்பது பற்றி:
 
”உலக மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமான வளர்ச்சியில் பங்கேற்க வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து மக்களின் மாண்பும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் இவற்றை மக்கள் மேல் வலிந்து திணிப்பது முறையாகாது. ஒவ்வொரு தனி மனிதரும், குடும்பமும், பிறரோடு இணைந்து, சமுதாயத்தின் பல்வேறு நிலை உறவுகளைப் பேணி அவற்றின் வழியாக மட்டுமே நல வாழ்வு அடைய முடியும். இத்தகைய உறவு நிலைகளை உருவாக்குவதில் நண்பர்கள், சிறு குழுக்கள், ஊர்கள், நகரங்கள், கல்விக்கூடங்கள், வர்த்தக அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள், மாநிலங்கள், நாடுகள் முதலியவை ஆக்கப்பூர்வமான விதத்தில் ஈடுபட முடியும், ஈடுபடவும் வேண்டும்.”
 
6. அடிப்படை உரிமைகள் பற்றி:
 
”ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படை உரிமைகளாக அமைபவை இவை: தங்கியிருக்க வீடு, திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு, தேவைக்கான சொத்து (lodging, labor and land).”
 
7. ஐ.நா. அமைப்பின் “சீரான வளர்ச்சிக்கு 2030 திட்டத்தொகுப்பு” (2030 Agenda for Sustainable Development) பற்றி:
 
”சீரான வளர்ச்சிக்கு ஐ.நா. அமைப்பு வகுத்துள்ள திட்டத்தொகுப்பு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட வேண்டும். மனித வாழ்க்கைக்குத் தேவையான பொருள்சார்ந்த மற்றும் அருள்சார்ந்த நலன்கள் எல்லா மக்களுக்கும் தங்குதடையின்றி, நடைமுறையில் கிடைப்பதே அந்த வெற்றிக்கு அடையாளம். இத்தகைய நலன்களுள் கீழ்வருவன அடங்கும்: வீட்டு வசதி, போதிய ஊதியம் தருகின்ற வேலை வாய்ப்பு, போதிய உணவு, குடிநீர், சமயச் சுதந்திரம், மற்றும் பொதுவாக கல்வி போன்றவை.”
 
8. மனித மாண்பு பற்றி:
 
”நாம் வாழ்கின்ற உலகம் எல்லா மனிதருக்கும் உரித்தான ஒரு பொது இல்லம், வீடு ஆகும். உலகில் வாழ்கின்ற அனைத்து மனிதருமே ஒருவர் ஒருவருக்கு உடன்பிறப்புகள் என்ற உணர்வு வளர வேண்டும். மனித உயிர் மாண்புமிக்கது என்ற உறுதிப்பாடு நிலைபெறவேண்டும். எல்லா உயிர்களுமே போற்றப்பட வேண்டும். இத்தகைய அடிப்படைகள் ஏற்கப்படும்போது, ஆண் அல்லது பெண் என்ற வேறுபாட்டிற்கு அங்கு இடமில்லை. ஏழைகளானாலும், குழந்தைகள் ஆனாலும், முதியோர் ஆனாலும், வலுவற்றோர் ஆனாலும், கருவில் உருவாகும் உயிரானும், வேலைவாய்ப்பின்றித் தவிப்போரானாலும், கைவிடப்பட்டோர் ஆனாலும், ஒன்றுக்கும் உதவாதோர் என்று ஒதுக்கப்படுவோர் ஆனாலும் அனைவருக்குமே பொதுவான இல்லமாக, வீடாக நமது உலகம் உள்ளது என்பதே உண்மை.”<ref>[http://www.aljazeera.com/news/2015/09/full-text-pope-francis-speech-united-nations-150925174945079.html திருத்தந்தை பிரான்சிசு ஐ.நா. அமைப்பின் பொது அவைக்கு ஆற்றிய உரை - செப்டம்பர் 25, 2015]</ref>
==வெளி இணைப்புகள்==
*[http://www.vatican.va/holy_father/francesco/index.htm?openMenu=15 திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள் - வத்திக்கான் அலுவல்முறை இணையத்தளம்]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1924049" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி