சேரமான் பெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
5,820 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
உரை திருத்தம்
(உரை திருத்தம்)
* புத்த மதத்தை தழுவினார்.<ref name="sochistory" />
 
==வரலாறு==
 
இத்திருமுறையில் பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கைலாய ஞான உலா ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளிச் செய்தவர் சேரமான் பெருமாள் நாயனார்.
 
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் `கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்` எனப் போற்றப் பெற்ற இவர் சேரமன்னர். சுந்தரரின் இனிய தோழர். சுந்தரருடன் கயிலை சென்றவர். ஆலவாய் இறைவர் பாணபத்திரர் பொருட்டுத் திருமுகப்பாசுரம் அருளிய பெருமை உடையவர். இந்நாயனார் வரலாறு பெரிய புராணத்தில் சேக்கிழார் சுவாமிகளால் கழறிற்றறிவார் புராணம் வெள்ளானைச் சருக்கம் ஆகியவற்றில் சுந்தரர் வரலாற்றோடு இணைத்துக் கூறப்பட்டுள்ளது.
இவரது காலம் சுந்தரர் காலமாகிய கி.பி. 8-ஆம் நூற்றாண்டாகும்.
 
எம்பெருமானிடத்துச் சென்ற சேரரை அவர் புகழ் குன்ற கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சேரர் கிறிஸ்துவர்களுக்கு உதவியது போல் முகமதியருக்கும் உதவினார். இன்றும் அவர் வணங்கிய [http://3.bp.blogspot.com/-Yg5BOlkiheo/U4v1QIMDrnI/AAAAAAAAF4c/Smjvevw3sQk/s1600/Comment2.jpg திருவஞ்சைக்களம்]** அன்றாடம் மானிடர் வணங்கி வரும் திருக்கோயிலாக உள்ளது.
 
**
முகவரி: வாஞ்சிகுளம் அஞ்சல்,
கொடுங்கநல்லூர்,
திருச்சூர் மாவட்டம்,
கேரளம் 680664
தொபே. 0487 2331124.
 
கொச்சி இருப்புப் பாதையில், ஷோரனூர் சந்திப்பிலிருந்து எர்ணாகுளம் செல்லும் பாதையில் உள்ள, திருச்சூர் என்னும் தொடர் வண்டி நிலையத்தில் இறங்கி, கொடுங்கோளூர் சென்று, அங்கிருந்து இரண்டு கி.மீ. தூரம் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். பேருந்துகளிலும் செல்லலாம்.
 
சைவமும் தமிழும் தழைக்கத் தோன்றிய அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனார் என்னும் பெருமாக் கோதையார் திரு அவதாரஞ் செய்தருளிய பதி. பரசுராமர் தம் தாயைக் கொன்றதோஷம் நீங்கப் பூசித்த தலம். இத்தலத்திலிருந்துதான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் யானையின் மீதும், சேரமான் பெருமாள் நாயனார் குதிரையின் மீதும் திருக் கயிலாயத்துக்கு எழுந்தருளினார்கள். இந்த அஞ்சைக்களம் சேர நாட்டில் சேர மன்னர்களது இராசதானியாகிய மகோதையில், உள்ள திருக்கோயில். `கடலங்கரை மேல் மகோதையணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே` என்பது சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவாக்கு (மகோதை என்பது கொடுங்கோளுர்).
 
இத்திருவஞ்சைக்களத்துக்கு வடக்கே கொடுங்கோளூரும், தெற்கே கோட்டைப் புறமும், மேற்கே மேற்றலையும், கிழக்கே புல்லூற்றும் இருக்கின்றன. கொடுங்கோளூரில் பகவதி அம்மன் கோயில் இருக்கின்றது. இதனையே கண்ணகி கோயில் என்பர். அஞ்சைக்களத்து அப்பர் கோயில் மலையாள முறையில் கட்டப்பட்டுள்ளது.
 
<!--பங்களித்தவர் பேரா. குருசாமி-->
== மேலும் பார்க்க ==
* [[சேரமான் பெருமாள் பற்றிய தொன்மங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1696262" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி