பசுங்கனிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22: வரிசை 22:
==கட்டமைப்பு==
==கட்டமைப்பு==


{{Chloroplast structure}}
{{plain image|File:Chloroplast structure.svg|'''Chloroplast ultrastructure''' ''(interactive diagram)'' Chloroplasts have at least three distinct membrane systems, and a variety of things can be found in their [[stroma (fluid)|stroma]].|500px|left|bottom|triangle|#3cb14d|image override=<div style="position: relative; left: 2px;">{{Chloroplast structure}}</div>}}


==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==

12:08, 14 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

பசுங்கனிகத்தின் எளிமையான உட்புற கட்டமைப்பு
Plagiomnium affine இல் காணப்படும் பசுங்கனிகங்கள்
பச்சையவுருமணியின் மாதிரி அமைப்பு

பசுங்கனிகம் அல்லது பச்சையவுருமணி (chloroplast) என்பது தாவரங்களினதும், அல்காக்களினதும் உயிரணுக்களிலும், ஒளித்தொகுப்பை நிகழ்த்தும் ஏனைய நிலைகருவுள்ள மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்களிலும் காணப்படுகின்ற நுண்ணுறுப்புக்களில் ஒன்றாகும். பச்சையவுருமணிகளே ஒளிச் சக்தியை உறிஞ்சி எடுத்து, ஒளித்தொகுப்பின் மூலம் ஒரு உயிரினம் தேவையான சக்தியைப் பெற உதவுகின்றன. பச்சையுருமணிகள் சூரிய ஒளியிலிருந்து சக்தியை உறிஞ்சி நீரை ஒக்சிசனாக மாற்றி, ஐதரசன் அயன்களை ஏற்று, இவற்றிலிருந்து வரும் சக்தியை ATP மற்றும் NADPH ஆகிய மூலக்கூறுகளில் சேமிக்கின்றன. பின்னர் இம்மூலக்கூற்றுகளிலுள்ள சக்தியை கல்வின் வட்டத்தில் ஈடுபடுத்தி காபனீரொக்சைட்டை தாவரத்துக்குத் தேவைப்படும் எளிய வெல்லங்களாக மாற்றும்.

பச்சையுருமணிகளால் தங்களைச் சூழவிருக்கும் சூழல் நிலைமைகளுக்கேற்ற படி மாறும் ஆற்றலுள்ளது. இவை ஒளிச்செறிவுக்கேற்ற படி கலத்துக்குள் அசைந்து ஒளித்தொகுப்பை மேற்கொள்கின்றன. பச்சையுருமணிகள் சூரிய ஒளியை உறிஞ்சி ஒளித்தொகுப்பை மேற்கொள்வதற்காக அவற்றின் தைலகொய்டுகளில் பச்சையத்தை அதிக செறிவில் கொண்டுள்ளன. இப்பச்சையமும், பச்சையம் காணப்படும் பச்சையுருமணியுமே தாவரங்களுக்கும், அல்காக்களும் அவற்றுக்குரிய பச்சை நிறத்தைக் கொடுக்கின்றன.

இழைமணிகளைப் போல பச்சையுருமணிகளும் அவ்ற்றுக்குரிய டி.என்.ஏயைக் கொண்டுள்ளன. எனினும் இவை தனி உயிரினங்களல்ல. பச்சையுருமணிகளால் தனியே கலத்தை விட்டு உயிர்வாழ இயலாது. இவற்றில் காணப்படும் டி.என்.ஏ பச்சையுருமணிகளின் மூதாதையரான சயனோபக்டீரியாக்களை ஒத்த உயிரினங்களிலிருந்து பெறப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.

பச்சையுருமணிகள் பரிணமித்த விதம்

பச்சையுருமணியின் பரிணாமத்தை விளக்க உள்ளுறை ஒன்றியவாழி கோட்பாடே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இக்கோட்பாட்டின் படி மெய்க்கருவுயிரிக் கலமொன்றால் உட்கொள்ளப்பட்டு ஆனால் சமிபாட்டிலிருந்து தப்பிய ஒரு சயனோபக்டீரியாவை ஒத்த தற்போசணை நிலைக்கருவிலியிலிருந்தே பச்சையுருமணிகள் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. இழைமணியின் பரிணாமத்தை விளக்கவும் இது போன்ற உள்ளுறை ஒன்றியவாழி கோட்பாடே பயன்படுத்தப்படுகின்றது. உள்ளுறை ஒன்றியவாழி கோட்பாடு (Endosymbiotic theory) 1905ஆம் ஆண்டு கொன்ஸ்டன்டைன் மெரிஸ்ச்கௌஸ்கி என்பவரால் வெளியிடப்பட்டது.

சயனோபக்டீரியாவை ஒத்த மூதாதையர்

பச்சையுருமணிகள் சயனோபக்டீரியாக்களிலிருந்து கூர்ப்படைந்ததாகக் கருதப்படுகின்றது. சயனோபக்டீரியாக்கும் பச்சையுருமணிக்குமிடையே உள்ள ஒற்றுமையே இத்தொடர்பை உறுதிப்படுத்துகின்றது. இரண்டிலும் தைலக்கொய்ட் மென்சவ்வுகள் காணப்படுவதுடன் இரண்டிலும் குளோரோபில் a உள்ளது. பச்சையத்தின் உள் மென்சவ்வும், சயனோபக்டீரியாவின் மென்சவ்வும் ஒத்ததாக உள்ளன. இரண்டிலும் டி.என்.ஏ. உள்ளது. இரண்டிலும் நிலைக்கருவிலிகளுக்கே உரிய ரைபோசோம்கள் உள்ளன. எனவே இக்கோட்பாட்டில் அதிகளவு பொருத்தப்பாடு காணப்படுகின்றது.


Both chloroplasts and cyanobacteria have a double membrane, DNA, ribosomes, and thylakoids. Both the chloroplast and cyanobacterium depicted are idealized versions (the chloroplast is that of a higher plant)—a lot of diversity exists among chloroplasts and cyanobacteria.
Both chloroplasts and cyanobacteria have a double membrane, DNA, ribosomes, and thylakoids. Both the chloroplast and cyanobacterium depicted are idealized versions (the chloroplast is that of a higher plant)—a lot of diversity exists among chloroplasts and cyanobacteria.
Both chloroplasts and cyanobacteria have a double membrane, DNA, ribosomes, and thylakoids. Both the chloroplast and cyanobacterium depicted are idealized versions (the chloroplast is that of a higher plant)—a lot of diversity exists among chloroplasts and cyanobacteria.

கட்டமைப்பு

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுங்கனிகம்&oldid=1599142" இலிருந்து மீள்விக்கப்பட்டது