சினைப்பை நோய்க்குறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சினைப்பை நோய்க்குறி
Polycystic Ovaries.jpg
மகளிர் நோய் மருத்துவவியல்
சிறப்புGynecology
அறிகுறிகள்முறையற்ற மாதவிடாய் காலம், அதிகப்படியான உதிரப்போக்கு,அதிகப்படியான முடி வளர்தல், மலட்டுத்தன்மை[1]
கால அளவுஅதிக காலம்[2]
சூழிடர் காரணிகள்உடற்பருமன், உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது[3]

சினைப்பை நோய்க்குறி (Polycystic ovary syndrome)(PCOS) என்பது பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண்தன்மைச் சுரப்பி அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் ஒரு கூட்டு நோய் அறிகுறியாகும்.[4][5] ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் இல்லாமலிருத்தல், அதிகமான குருதிப்போக்கு, உடலிலும் முகத்திலும் அதிகமான முடிவளர்ச்சி, முகப்பரு, இடுப்பெலும்பு வலி, மலட்டுத்தன்மை, சில தோல் பகுதிகள் மட்டும் கெட்டியாகவும் கருத்தும் மிருதுவாகக் காணப்படுதல் ஆகியன இதன் அறிகுறிகளாகும்.[1] மேலும் இதனோடு நீரிழிவு நோய், உடற் பருமன் இதய நோய் , உறங்கும்போது மூச்சு விடுதலில் மாற்றம், சீரற்ற மனநிலை, கருப்பை அகப்படலப் புற்றுநோய் ஆகியவையும் இதனோடு தொடர்புடையனவாகும்..[4]

மீயொலிச் சோதனை மூலம் படமாக்கப்பட்ட சினைப்பை நோய்க்குறி

சினைப்பை நோய்கள் மரபுவழி, சூழல் என இரண்டும் இணைந்த கூட்டுக்காரணிகளால் ஏற்படுகின்றன.[6][7][8] உடற்பருமன், போதுமான உடற்பயிற்சியின்மை, குடும்பத்தில் முன்பு எவருக்கேனும் இது காணப்பட்டிருத்தல் ஆகியவை இந்நோய்க்குறி பாதிப்பதற்கான அபாய காரணிகளாகும்.[3] ஆண்ட்ரோஜன் அளவு அதிகரித்திருத்தல், சினைமுட்டை வராமலிருத்தல், சினைப்பையில் கட்டிகள் தோன்றுதல் ஆகிய இவற்றில் ஏதேனும் இரண்டினைக் கொண்டு சினைப்பை நோய்க்குறி கண்டறியப்படுகிறது.[4] கட்டிகள் மீயொலிச் சோதனை மூலம் கண்டறியப்படலாம்.[9] மேலும் அண்ணீரகச் சுரப்பிக் கோளாறு, தைராய்டு சுரப்புக் குறை,மிகை பால்சுரப்புக் கோளாறு ஆகியவை இருந்தாலும் மேற்கண்ட அதே அறிகுறிகள் தோன்றும்.[9]

சினைப்பை நோய்க்குறிக்கான தீர்வு எதுவுமில்லை.[2] உடற்பயிற்சி, எடைக்குறைப்பு ஆகிய சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் இதற்கான சிகிச்சையாகக் கருதப்படுகிறது.[10][11] கருத்தடை மாத்திரைகள் சில நேரங்களில் சரியான மாதவிடாய் சுழற்சி, மிகை முடிவளர்ச்சி, முகப்பரு ஆகியவற்றின் ஒழுங்கமைப்பை மேம்படுத்த உதவலாம்.[12] மெட்பார்மின், எதிர்- ஆண்ட்ரோஜென் ஆகியவை உதவக்கூடும்.[12] முகப்பரு சிகிச்சை, முடி நீக்கு சிகிச்சை ஆகியவையும் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.[12] கருத்தரித்தலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு எடைக்குறைப்பு,மெட்பார்மின் அல்லது குளோம்பிபைன் ஆகியவை நல்ல பயனைத் தரும்.[13] சினைப்பை நோய்க்குறி காரணமாய் மலட்டுத்தன்மை ஏற்பட்டோருக்கு மற்ற சிகிச்சைகள் பலனளிக்காத போது செயற்கைமுறைக் கருவூட்டல் மிகுந்த பயன் தருகிறது.[13]

சினைப்பை நோய்க்குறி 18 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்களுக்கிடையே தோன்றும் பொதுவான அகச்சுரப்பித் தொகுதிக் குறைபாடாகும்.[14] இந்த வயதுள்ள பெண்களுக்கு அறிகுறிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுன்றன என்பதைப் பொறுத்து சுமார் இரண்டு விழுக்காடு முதல் இருபது விழுக்காடு வரையான பெண்கள் பாதிப்படைகிறார்கள்.[3][15] சினைப்பை நோய்க்குறியின் முதன்மையான விளைவுகளில் ஒன்று மலட்டுத்தன்மையாகும் [4] 1721 இல் இத்தாலியில் தற்பொழுது சினைப்பை நோய்க்குறி என விவரிக்கப்படும் இந்நோய்க்குறி இருப்பதனைக் கண்டறிந்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன.[16]

அறிகுறிகள்[தொகு]

கீழ்க்காண்பவை சினைப்பை நோய்க்குறியின் பொதுவான அறிகுறிகளாகும்.

 • ஒழுங்கற்ற மாதவிடாய்: சினைப்பை நோய்க்குறியானது ஆண்டிற்கு ஒன்பதுக்கும் குறைவான மாதவிடாய் அல்லது மாதவிடாய் வராமை, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு மாதவிடாய் வராமை, பிற மாதவிடாய்க் கோளாறுகள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கிறது.[14]
 • மலட்டுத்தன்மை: பொதுவாக குறைவான சினைமுட்டை வெளிவருதல்.(சினைமுட்டைப் பற்றாக்குறை)[14]
 • ஆண் தன்மை மிகுந்து காணப்படுதல்: முகப்பருக்கள், உடலில் ஆண்களைப் போன்று (மார்பு, முகவாய் ஆகியவற்றில்) முடிவளர்ச்சி ஆகியன இதன் பொதுவான அறிகுறிகளாகும்.ஆனால் இதனால் மாதவிடாய் மிகைப்பு, முடி இழப்பு, ஆகிய அறிகுறிகளும் உருவாகக்கூடும்.[14][17] சினைப்பை நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட சுமார் மூன்றிலொரு பங்கு பெண்களுக்கு ஆண் தன்மை மிகுந்து காணப்படுவதாக ஐக்கிய அமெரிக்காவின் தேசிய குழந்தைகள் நலம் மற்றும் மனிதவளத்துறை ஆய்வொன்று (1990)) தெரிவிக்கிறது [18]
 • வளர்சிதை மாற்ற நோய்க்குறி: இது உடற்பருமன், இன்சுலின் எதிர்ப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு நோய்க்குறியாகும்.இதனோடும் சினைப்பை நோய்க்குறி தொடர்புடையதாகும்.[14] சினைப்பை நோய்க்குறி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்சுலின் நீர்மம், இன்சுலின் எதிர்ப்பு, ஹோமோசிஸ்டீன் ஆகியவற்றின் அளவு அதிகரித்துக் காணப்படும்.[19]

பிற இனத்தவர்களை விட ஆசிய இனத்தவர்களுக்கு சினைப்பை நோய்க்குறியின் காரணமாக உடலில் முடி வளர்ச்சியடைதல் குறைவாகவே காணப்படுகிறது.[20]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "What are the symptoms of PCOS?" (05/23/2013). மூல முகவரியிலிருந்து 3 March 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 March 2015.
 2. 2.0 2.1 "Is there a cure for PCOS?" (2013-05-23). மூல முகவரியிலிருந்து 5 April 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 March 2015.
 3. 3.0 3.1 3.2 "How many people are affected or at risk for PCOS?" (2013-05-23). மூல முகவரியிலிருந்து 4 March 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 March 2015.
 4. 4.0 4.1 4.2 4.3 "Polycystic Ovary Syndrome (PCOS): Condition Information" (2013-05-23). மூல முகவரியிலிருந்து 4 March 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 March 2015.
 5. "Polycystic ovary syndrome (PCOS) fact sheet" (December 23, 2014). மூல முகவரியிலிருந்து 12 August 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 August 2016.
 6. "Genetic, hormonal and metabolic aspects of PCOS: an update". Reproductive Biology and Endocrinology : RB&E 14 (1): 38. 2016. doi:10.1186/s12958-016-0173-x. பப்மெட்:27423183. 
 7. Diamanti-Kandarakis E, Kandarakis H, (2006). "The role of genes and environment in the etiology of PCOS". Endocrine 30 (1): 19–26. doi:10.1385/ENDO:30:1:19. பப்மெட்:17185788. 
 8. "Scientific Statement on the Diagnostic Criteria, Epidemiology, Pathophysiology, and Molecular Genetics of Polycystic Ovary Syndrome". Endocrine Reviews 36 (5): 487–525. 2015. doi:10.1210/er.2015-1018. பப்மெட்:26426951. 
 9. 9.0 9.1 "How do health care providers diagnose PCOS?" (2013-05-23). மூல முகவரியிலிருந்து 2 April 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 March 2015.
 10. "Metabolic Syndrome: Polycystic Ovary Syndrome". FP Essentials 435: 30–42. 2015. பப்மெட்:26280343. 
 11. "Androgens in polycystic ovary syndrome: the role of exercise and diet". Seminars in Reproductive Medicine 27 (4): 306–15. 2009. doi:10.1055/s-0029-1225258. பப்மெட்:19530064. 
 12. 12.0 12.1 12.2 National Institutes of Health (NIH) (2014-07-14). "Treatments to Relieve Symptoms of PCOS". மூல முகவரியிலிருந்து 2 April 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 March 2015.
 13. 13.0 13.1 National Institutes of Health (NIH) (2014-07-14). "Treatments for Infertility Resulting from PCOS". மூல முகவரியிலிருந்து 2 April 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 March 2015.
 14. 14.0 14.1 14.2 14.3 14.4 Teede H, Deeks A, Moran L (2010). "Polycystic ovary syndrome: a complex condition with psychological, reproductive and metabolic manifestations that impacts on health across the lifespan". BMC Med 8 (1): 41. doi:10.1186/1741-7015-8-41. பப்மெட்:20591140. 
 15. editor, Lubna Pal, (2013). "Diagnostic Criteria and Epidemiology of PCOS". Polycystic Ovary Syndrome Current and Emerging Concepts. Dordrecht: Springer. பக். 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781461483946. Archived from the original on 2017-09-10. https://web.archive.org/web/20170910181322/https://books.google.com/books?id=DTUnAQAAQBAJ&lpg=PP1&dq=Polycystic%20Ovary%20Syndrome%3B%20Subtitle%3A%20Current%20and%20Emerging%20Concepts%3B%20Part%20I&pg=PA7. 
 16. Kovacs, Gabor T.; Norman, Robert (2007-02-22). Polycystic Ovary Syndrome. Cambridge University Press. பக். 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781139462037. Archived from the original on 16 June 2013. https://web.archive.org/web/20130616151243/http://books.google.com/books?id=bpn1u9hziVgC&pg=PA4. பார்த்த நாள்: 29 March 2013. 
 17. "Diagnosis of Hyperandrogenism in Female Adolescents". Armenian Health Network, Health.am (Sep 21, 2006). மூல முகவரியிலிருந்து 2007-09-30 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2006-11-21.
 18. "Prevalence of hyperandrogenemia in the polycystic ovary syndrome diagnosed by the National Institutes of Health 1990 criteria". Fertil. Steril. 93 (6): 1938–41. 2010. doi:10.1016/j.fertnstert.2008.12.138. பப்மெட்:19249030. 
 19. "The effect of serum and intrafollicular insulin resistance parameters and homocysteine levels of nonobese, nonhyperandrogenemic polycystic ovary syndrome patients on in vitro fertilization outcome". Fertil. Steril. 93 (6): 1864–9. 2010. doi:10.1016/j.fertnstert.2008.12.024. பப்மெட்:19171332. 
 20. "Does ethnicity influence the prevalence of adrenal hyperandrogenism and insulin resistance in polycystic ovary syndrome?". Am. J. Obstet. Gynecol. 167 (6): 1807–12. 1992. doi:10.1016/0002-9378(92)91779-a. பப்மெட்:1471702. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினைப்பை_நோய்க்குறி&oldid=2749905" இருந்து மீள்விக்கப்பட்டது