சிந்து ஆற்றுப் பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்து ஆற்றுப் பாம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: ஊர்வன
வரிசை: இசுகொமாட்டா
குடும்பம்: கோமாலாப்சிடே
பேரினம்: என்கைட்ரிசு
இனம்: எ. சனார்டி
இருசொற் பெயரீடு
என்கைட்ரிசு சனார்டி
(முர்பி & வோரிசு, 2005[2][3]
வேறு பெயர்கள் [3]
 • கைப்சிர்கினா ஜாகோரி
  — குந்தர், 1864
  பீட்டர்சு, 1863)
 • என்கைட்ரிசு ஜாகோரி
  — கோக்ரான், 1930பீட்டர்சு, 1863)

சிந்து ஆற்றுப் பாம்பு (Sind River snake)(என்கைட்ரிசு சனார்டி), பொதுவாக சானார்டின் மண் பாம்பு என்றும் சான்-ஆர்டின் நீர் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது கோமலோப்சிடே குடும்பத்தில் வீரியம் குறைந்த விடமுள்ள, பின்பக்க விடப்பல்லினைக் கொண்ட பாம்பு சிற்றினமாகும். இந்த சிற்றினம் தாய்லாந்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

புவியியல் வரம்பு[தொகு]

என். சனார்டி தாய்லாந்தின் பேங்காக்கிற்கு அருகில் அல்லது அப்பகுதியினைச் சுற்றிக் காணப்படுகிறது.[4][5]

சொற்பிறப்பியல்[தொகு]

இதனுடைய சிற்றினப் பெயர், சனார்டி, தாய்லாந்து ஊர்வன ஆய்வாளர் தன்யா சான்-ஆர்டின் நினைவாக இடப்பட்டது.[6]

வாழ்விடம்[தொகு]

என். சனார்டி நன்னீர் ஈரநிலங்களில் வாழ்கின்றது.[1]

நடத்தை[தொகு]

எ.சனார்டி என்பது இரவாடுதல் வகையினைச் சார்ந்தது.

உணவுமுறை[தொகு]

என். சனார்டி மீன்கள் மற்றும் தவளைகளை வேட்டையாடுகிறது..

இனப்பெருக்கம்[தொகு]

என். சனார்டி சீவசமுளைத்தல் வகையினைச் சேர்ந்தது.[3]

பாதுகாப்பு நிலை[தொகு]

என். சனார்டி பன்னாட்டு இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் "தரவுகள் போதாது" எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த இனத்தின் உயிரியல் பற்றி அதிகம் அறியப்படவில்லை.[1]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 Murphy J (2010). "Enhydris chanardi ". The IUCN Red List of Threatened Species 2010: https://dx.doi.org/10.2305/IUCN.UK.2010-4.RLTS.T176675A7281791.en. Accessed on 06 February 2022.
 2. Murphy, John C. (2007). Homalopsid Snakes: Evolution In The Mud. Malabar, Florida: Krieger Publishing. 249 pp. ISBN 1-57524-259-1.
 3. 3.0 3.1 3.2 www.reptile-database.org.
 4. Snakes of Thailand at Siamfoundation.org. பரணிடப்பட்டது 2010-12-05 at the வந்தவழி இயந்திரம்
 5. siam-info.de பரணிடப்பட்டது 2011-02-09 at the வந்தவழி இயந்திரம். (in German). (Retrieved Oct. 9, 2010).
 6. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. ISBN 978-1-4214-0135-5. (Enhydris chanardi, p. 51).

மேலும் படிக்க[தொகு]

 • Chan-ard T, Parr JWK, Nabhitabhata J (2015). A Field Guide to the Reptiles of Thailand. New York: Oxford University Press. 352 pp. ISBN 978-0-19-973649-2 (hardcover), ISBN 978-0-19-973650-8 (paperback).
 • Cochran DM (1930). "The herpetological results made by Dr. Hugh Smith in Siam from 1923 to 1929". Proceedings of the United States National Museum 77 (11): 1-39. [1931].
 • Cox MJ, van Dijk PP, Nabhitabhata J, Thirakhupt K (1998). A Photographic Guide to Snakes and other Reptiles of Peninsular Malaysia, Singapore and Thailand. Sanibel Island Florida: Ralph Curtis Publishing. 144 pp. ISBN 978-1-85368-438-8.
 • Günther A (1864). The Reptiles of British India. London: The Ray Society. (Taylor & Francis, printers). xxvii + 452 pp. + Plates I-XXVI.
 • Murphy JC, Voris HK (2005). "A new Thai Enhydris (Serpentes: Colubridae: Homalopsinae)". Raffles Bulletin of Zooogy 53 (1): 143–147. ("Enhydris chanardi, new species").

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்து_ஆற்றுப்_பாம்பு&oldid=3751660" இலிருந்து மீள்விக்கப்பட்டது