சித்பரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்பர் சித்பரியின் இரக்கரைச் சேர்ந்த தௌலதரிலிருந்து ஒரு பார்வை
இரக்கரைச் சேர்ந்த தௌலதரிலிருந்து மற்றொரு பார்வை, மேல் சித்பரி

சித்பரி (ஆங்கிலம்: Sidhbari ) என்பது இந்தியாவின் இமாசலப் பிரதேசத்தின், காங்ரா மாவட்டத்தில், தௌலதர் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள தர்மசாலா நகரத்தின் புறநகர்ப் பகுதி ஆகும். சிறீ சின்மயானந்தாவின் சமாதி (இறுதி ஓய்வு இடம்) இங்கு அமைந்துள்ளது.

கண்ணோட்டம்[தொகு]

சித்பரி அதன் பெயரை பாபா சித் என்ற முனிவரிடமிருந்து பெற்றுள்ளது. இங்குள்ள துனி (எரியும் மரத் துண்டு) பல நூற்றாண்டுகளாக எரிந்து வருவதாகவும், ஒருபோதும் ஒரு முறை கூட அணையாமல் எரிந்து வருவதாகவும் என்றும் உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். எனவே மரம் எரிவதால் வரும் (விபூதி) சாம்பல் சித் பாபாவின் புனித ஆசீர்வாதங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

2000 ஆம் ஆண்டு முதல், சித்பரி கர்மபா இலாமாவின் ( ஓகியன் டிரின்லி டோர்ஜே ) தற்காலிக வசிப்பிடத்தின் தொடர்புடையதாக உள்ளது. இந்த இடம் கியூட்டோ மடாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இது புத்த மதத்தின் தந்திர வித்யாவின் கற்பிக்கும் இடமாக நம்பப்படுகிறது. இமாச்சல பிரதேச குளிர்கால சட்டசபையும் இங்கு அமைந்துள்ளது.

ஆர்வமுள்ள இடங்கள்[தொகு]

ஒரு சிறிய நகரமான சித்பரியில் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஆர்வமுள்ள இடங்கள் பல உள்ளது. அவற்றில் குறிப்பிடதக்கவையாக, இந்த கிராமத்திற்கு மிக அருகில் சின்மயா ஆசிரமம் அல்லது சாந்தீபனி இமயமலை உள்ளது. இந்த ஆசிரமத்தில் சின்மயா மிசனின் நிறுவனர் பூஜ்ய குருதேவ் சுவாமி சின்மயானந்தாவின் சமாதி (ஓய்வு இடம்) உள்ளது. மேலும் இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவிற்கு அருகிலுள்ள சித்பரி கிராமம், கபிலாவின் தியான இடமாக பொதுவாகக் கருதப்படுகிறது. அங்கு வாழ்ந்த முனிவர் அவரது ஆன்மீக சக்திகளால் உள்ளூரில் சித் பாபாவாக கருதப்படுகிறார். எனவே கிராமத்திற்கு சித்பரி என்ற பெயர் வந்துள்ளது.

கியூட்டோ மடாலயத்தில் உள்ள திபெத்திய புத்த தலைவர் 17 வது கர்மபா இலாமாவின் (ஓகியன் டிரின்லி டோர்ஜே) தற்காலிக வசிப்பிடமும் சித்பரி தான். [1] சித்பரி தர்மசாலாவிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலும், 14 வது தலாய் லாமா வசிக்கும் மெக்லியோட் கஞ்சிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

சித்பரியில் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றொரு அம்சம் நாம் கலைக் காட்சிக்கூடமாகும். இது ஐரோப்பிய கலைஞர்களான எல்ஸ்பெத் புஷ்மேன் மற்றும் ஆல்ஃபிரட் டபிள்யூ. ஹாலெட் ஆகியோரின் ஓவியங்களை காட்சிப்படுத்துகிறது. மற்றொரு ஈர்ப்பு தீதி ஒப்பந்தக்காரரின் மண் கட்டடக்கலை படைப்புகள் ஆகும். இதில் செங்கல் மற்றும் மூங்கிலால் செய்யப்பட்ட பல வீடுகள் உள்ளன.

மாநிலச் சட்டப் பேரவை கூட்டங்களின் குளிர்கால அமர்வு இங்கே சித்பரியில் நடைபெறுகிறது. மேல் சித்பரியில் உள்ள இரக்கர் மற்றும் சோக்னி தா கோட் ஆகியவற்றின் குக்கிராமங்களில் காடி சமூகத்தினர் வசித்துவருகின்றனர். மேலும் பாரம்பரிய மண் வீடுகளில் பார்வையாளர்கள் தங்கும் வசதிகளையும் வழங்குகிறது. மனுனி நல்லா நதி சித்பரி வழியாக பாய்கிறது. ஆற்றங்கரையில் பல்வேறு கோயில்களுடன் இந்த நதி புனித நீரோட்டமாக போற்றப்படுகிறது. கானியாராவில் உள்ள அகஞ்சர் மகாதேவ் கோயில் மிகவும் பிரபலமானது .மற்றும் சித்பரியிலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள கானியாராவில் அமைந்துள்ளது. நிஷ்டா என்ற கிராம சுகாதார, கல்வி மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஒன்ரும் இங்கே உள்ளாது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்பரி&oldid=3244155" இலிருந்து மீள்விக்கப்பட்டது